(Reading time: 18 - 36 minutes)

“சரி சரிபொம்மாயி டென்ஷன் ஆகாத.. நானும் கார்கியும் வேலைக்குகிளம்பிட்டோம்..வீட்டுல கதிரவன் மட்டும்தான் இருப்பான்.அதை சொல்லத்தான் வந்தேன்.. பாய்”என்று கை அசைத்தான் பிரபஞ்சன்.

“இதை சொல்லவா வந்தான்? ஒருவேளை தன்னை அடைய நினைத்திருப்பானோ?”

“ச்ச ச்ச..எவ்வளவு அழகா ஸ்மைல் பண்ணி விஷ் பண்ணிட்டு போறான்.. அதை சந்தேகப்படலாமா?” என்று அவளே வாதிட்டும் கொண்டாள்.

அவள் இப்போதைக்கு மைண்ட்வாய்சில் இருந்து வெளிவரபோவதில்லை என்று உணர்ந்த பிரபஞ்சன் அங்கிருந்தி கிளம்பியிருந்தான். லீலா ஜன்னல் வழியாக எட்டி பார்க்க பிரபஞ்சனும்,கார்முகிலனும் தனித் தனியாக வெளியேறினார்கள்!

காலை மணி 8.30

அந்த கோவிலில் இருந்து வெளியேறி தன் ஸ்கூட்டியில் அமர்ந்தாள் அந்த பெண். ஆகாயநீலநிற சுடிதாரில், கொஞ்சமே கொஞ்சமென்ற ஒப்பனையில் வெகு அழகாய் மிளிர்ந்தவளின் உதட்டில் பெரிதொரு புன்னகை பூத்திருந்தது. ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்யாமல் கோவிலுக்கு வெளியில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தவர்களை வேடிக்கைப் பார்த்தாள்.

ஏனோ இந்த உலகத்தில் மனிதர்களுக்கு அப்படி ஒருநிலைக்கொள்ளாத ஓட்டம் தேவைப்படுகிறது. யாரை தாண்டிட வேண்டும் அல்லது எதை இலக்கென தீர்மானிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் ஓடுகிறான். அதுவும் திங்கட்கிழமை என்றாள் இரட்டிப்பு ஓட்டம் தான்!

“ஹ்ம்..வாழ்க்கையை ரசிக்கத் தெரியாத முட்டாள்களில் மத்தியில் இந்த நித்யாவா?” என்று தன்னையே பார்த்து கேட்டுக் கொண்டவள், ஸ்கூட்டியில் கண்ணாடி வழியே ஐந்தடி தள்ளி நிற்கும் பைக் காரனை பார்த்துவிட்டாள். சற்றுமுன் சேர்த்து வைத்த சிரிப்பெல்லாம் காற்றில் பறக்க, முகம் சிவக்க ஸ்கூட்டியை முறுக்கினாள்.

“இவன் அடங்கவே மாட்டான் போல.. மனசுல காதல் ரோமியோனு நினைப்பிருந்தா நேரடியா வந்து பேசனும்..அதை விட்டுட்டு ரோட் சைட் ரோமியோ மாதிரி பின்னாடி வரான் பாரு..நீ காலி டா இன்னைக்கு!” என்று வாய்விட்டு சொன்னவள் இமைக்கும் நொடியில் அவனை நெருங்கி இருந்தாள்.

“என்ன? எப்போ பாத்தாலும் கோவிலுக்கே தொடந்து வந்துட்டு இருக்க? அடுத்து க்ளப்புக்கு போக போறேன் வரியா? வோட்கா ஆர்டர் பண்ணுறேன் சேர்ந்து குடிப்போமா? என்ன இப்படி பேசுறேன்னு முழிக்கிறியா?”

“..”

“அதென்ன கண்டதும் காதல் உனக்கு? கோவில்ல பாந்தமா இருந்தா நான் நல்லபொண்ணா? ஏன் க்ளப்புனு சொன்னதும் மூஞ்சி மாறுது.. பழகாமல் வர்றதுக்கு பேரு காதலே இல்லை..மனசு விட்டு பழகனும்..ஆனா அதுக்கு நீ கொஞ்சம் தைரியசாலியா இருக்கனும்..”

“..”

“ஒரு விஷயம் சொல்லவா? எனக்கு கடவுள் நம்பிக்கையே இல்லை.. ஆனா, எனக்கு கோவிலுக்கு போக பிடிக்கும்.. அந்த இடம், வாசனை, வைப்ரேஷன், அதெல்லாம் எனக்கு பிடிக்கும்..அதுனால கோவிலுக்கு வரேன்.. எனக்கு கோவில்ல கதை பேசுறவங்களைக் கண்டாலே பிடிக்காது.. அதுனாலத்தான் நானும் அமைதியாகவே இருப்பேன்.. இதப்பாத்து நான் அமைதினு நினைச்சு என்னை நீ ஃஃபோலோ பண்ணுற.. கொஞ்சம் ஆச்சும் யோசிக்க மாட்டியா? இனிமே உன்னை இப்படி” என்று அவள் பேசிக் கொண்டிருக்க, ஹெல்மெட்டை கழற்றிவிட்டு அவளை முறைத்தான் கார்முகிலன்.

உடனே நித்யாவின் கண்கள் அவனது பைக் நம்பரை ஆராய கார்கியோ அவளை விடாமல்முறைத்துக் கொண்டிருந்தான்..

“என்ன ஃப்ரீ அட்வைஸ் ஆ? அதை யாருக்கு கொடுக்குறோம்னு பார்க்க மாட்டீங்களோ?”

“அது..பைக் கலர்ல கன்வியூஷன்.”என்று அவள் உள்ளே போய்விட்ட குரலில் சொல்ல,

“இப்போ எதுக்கு எவனையோ திட்டுற மாதிரி என்னை திட்டுன? அவனுக்கு லவ் வந்தது தப்புனு திட்டுனியா? இல்லை அதை தைரியமா சொல்லலனு திட்டுனியா?”

“ரெ..ரெண்டுக்கும் தான்!” என்று நித்யா கொஞ்சம் நிமிர்வாகவே சொல்ல,

“அவன் சொல்லாத ஐ லவ் யூவுக்கு நான் திட்டு வாங்க முடியாது… சோ நான் வாங்கின திட்டுக்காக இப்போ சொல்லிட்டே போறேன். ஐ லவ் யூ!”என்றவன் அவன் என்ன சொன்னான் என்பதை இருவரும் உணரும் முன்னரே பைக்கை முறுக்கிகொண்டு பறந்திருந்தான். கார்கி-நித்யாவின் மோதல் இனிதே ஆரம்பம்!

தொடரும்...

Episode # 04

Episode # 06

Go to Vellai pookkal ithayam engum malargave story main page

{kunena_discuss:1166}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.