(Reading time: 15 - 30 minutes)

ராமசந்திரன் வருண் தங்கள் பங்கிற்கு சர்வேஸ்வரிடம் மனிப்பு கேட்க வர்ஷினி தந்தை மார்பில் சாய்ந்து கொண்டு அழுதாள்.

தான் புறப்பட போவதாக சர்வேஸ்வர் கூற தங்களோடு தங்கி விட வேண்டினாள் வர்ஷினி.

“இல்ல மா நான் போகணும். அங்கே என்னை நம்பி பல நூறு குழந்தைகள் இருக்காங்க. என்னோட ஆசீர்வாதம் எப்போதும் உன்னோடு இருக்கும். நீங்க எப்போ வேணும்னாலும் என்னை வந்து பார்க்கலாம். நானும் அடிக்கடி வந்து போகிறேன். உன்னைப் பார்த்ததே நான் உயிர் வாழ்ந்ததிற்கு வரம்” சர்வேஸ்வர் கூற அவரை வழியனுப்பி வைத்தனர் அனைவரும்.

குழந்தையை தொட்டில் இட்டு ஆட்டிக் கொண்டிருந்தவளை பின்னோடு அணைத்துக் கொண்டான் கணேஷ் ராம்.

“அப்புறம் மிசஸ் ராம். இப்போ நீங்க டாக்டர் கிட்ட ட்ரீட்மன்ட்க்கு வருவதே இல்லை” கள்ளச் சிரிப்போடு கூறினான்.

“டாக்டர் இன்னும் தான் காணாமல் போன என் இதயத்தைத் தேடி தராரு” கணவனின் கரத்தினைப் பற்றிக் கொண்டபடியே கூறினாள்.

“உன் இதயத்தை ஏன் தேடித் தர வேண்டும். துடிக்கும் என் இதயம் உனதே உனதல்லவா” வர்ஷினியின் கரத்தை எடுத்து இடது மார்பில் பதித்துக் கொண்டான்.

துடிக்கும் இதயம் உனதே உனது – எனது இரண்டாவது தொடர் கதை. இக்கதை கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்த போது எனது டைரியில் விளையாட்டாக எழுதியது. பின் எனது தோழிகளிடம் கதை போல சொல்லிக் கொண்டிருந்த போது தான் எனது தோழி சுஜாதா இக்கதையை நான் சில்சீயில் கட்டாயம் தொடராக எழுத வேண்டும் என்று வற்புறுத்தி இந்த தலைப்பினையும் தேர்வு செய்து கொடுத்தார். .

வேலையின் பளு காரணமாக சில அத்தியாயங்கள் மிக குறைந்த பக்கங்கள் கொடுத்த போதிலும்  தங்கள் பின்னூட்டம் வாயிலாக உற்சாகம் அளித்து வந்த சில்சீ வாசக நட்புக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

பல முறை ELEVENTH HOURல் அத்தியாயம் அனுப்பி வைத்த போதும் எப்போதும் போல என்னை உற்சாகப்படுத்தி சரியான நேரத்திற்கு அத்தியாயங்கள்  வெளியிட்ட சில்சீ குழுவிற்கு மிக்க நன்றி.

முற்றும்!

Episode # 23

{kunena_discuss:1109}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.