(Reading time: 23 - 45 minutes)

டேய் மகி இப்போ நாம எங்கப் போறோம்டா??” நீ பாட்டுக்கு பேசாம போயிட்ருந்தா என்ன அர்த்தம்? இப்போ நீ எங்கப் போறன்னு சொல்லப் போறீயா? இல்லையா? இல்ல ஓட்ற வண்டியிலிருந்து இறங்கிடுவேன்” வண்டி கிளம்பியதிலிருந்து எங்கே போகிறோம் என்று சொல்லாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த மகியிடம் வழியெல்லாம் இதையே கேட்டு நொந்துப் போய், இப்போது இப்படி கூறினான் அறிவு.

“இப்போ ஏர்ப்போர்ட்டுக்கு போறோம்டா..” அறிவு பேசியதற்கு கொஞ்சம் பலன் கிடைத்தது போல் மகி பதில் கூறினான்.

“என்னது ஏர்ப்போர்ட்டுக்கா!! உன்னோட நிச்ச்சயத்துக்காக யாராச்சும் வெளிநாட்டுல இருந்து வர்றாங்களா? என்ன?” கொஞ்சம் குழப்பத்தோடு கேட்டவன், “நமக்கு வெளிநாட்டுல இருந்து வர அளவுக்கு எந்த சொந்தமும் இல்லையேடா!! அருளோட அப்பா ரிலேஷன்ஸ் கூட யாரும் வெளிநாட்டுல இருக்கறதா கேள்விப்பட்டதில்ல.. அப்படியே இருந்தாலும் இது திடிர்னு ஏற்பாடு செஞ்ச பங்க்‌ஷன் அப்புறம் எப்படி அவங்க வர முடியும்?”

“உன்னோட அறிவுல தீயை வச்சி கொளுத்த.. யாரையாவது ரிஸீவ் செய்ய தான் ஏர்ப்போர்ட்டுக்கு போகனுமா?”

“வழி அனுப்பவும் போலாம்..” என்று சாதாரணமாக பதில் கூறியவன், திடீரென ஏதோ தோன்றி, “மகி.. இன்னும் கொஞ்ச நேரத்துல நிச்சயதார்த்தம் உனக்கு, இந்த நேரத்துல யாரை வழி அனுப்படா போற” என்று புத்திசாலித்தனமாக கேட்டான்.

“ஹேய் கொஞ்சம் நேரம் சும்மா வர்றீயா டா.. யாரையும் வழி அனுப்ப போல.. சுடர் லண்டனுக்கு போகப் போறாளாம்.. இந்நேரம் ஏர்ப்போர்ட்ல இருப்பா.. அவளை போக விடாம தடுக்கப் போறேன்..”

“டேய் நீ என்ன லூசா..? அவ லண்டனுக்கு தானே போறா.. போகட்டும்! அவ இங்க இருந்து செஞ்சதெல்லாம் பத்தாதா? அவ போகட்டும்னு விடாம, போய் அவளை போக விடாம தடுக்கப் போறன்னு சொல்ற.. அங்க எல்லாரும் நமக்காக வெய்ட் பண்ணுவாங்க.. ஒழுங்கு மரியாதையா வண்டியை திருப்பு.. நீ சுடரை பார்க்கப் போறது வீட்டுக்கு தெரிஞ்சுது அவ்வளவு தான்.. ஒழுங்கா வண்டியை நிறுத்துடா..” அறிவழகன் கத்திக் கொண்டு வர, அவனின் இத்தனை பேச்சுக்களையும் காதில் வாங்காமல் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவன் திடீரென வண்டியை நிறுத்தினான். தன் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்த சகோதரனை பெருமை பொங்க பார்த்தான் அறிவழகன்.

ங்கள் வீட்டு ஆட்கள் வந்தது தெரிந்து மலரும், மணியும் அவர்களை வரவேற்க சென்றிருக்க, இங்கே அறையில் அருளும் இலக்கியாவும் தனித்திருந்தனர். அவர்கள் ஓரளவுக்கு அலங்காரம் முடித்திருக்க, வெறும் நகைகள் அணிவது மட்டுமே மீதி இருந்ததால், அதை இலக்கியாவே செய்தாள். இப்போது இருவரும் மட்டுமே இருக்கவே, “மகி அண்ணாக்கிட்ட என்ன பேச நினைச்ச மச்சி, ஆனா அங்கப் போயும் எதுவும் பேசிக்கிட்ட மாதிரி  தெரியலையே?” என்று அங்கே தோட்டத்தில் நடந்ததை பற்றி இலக்கியா கேட்டதும், அருள்மொழியும் விவரத்தை கூறினாள். “சுடரொளிக்கு கூறிய பதிலே, எனக்குமான பதில் தான்” என்று அவள் புன்னகையோடு கூறினாள்.

இலக்கியாவிற்கு அது ஆச்சர்யத்தை கொடுத்தது.. இலக்கியா நினைத்து வந்ததே வேறு, ஆனால் இங்கு வந்து அருள்மொழியை பார்த்த போது முற்றிலும் வித்தியாசமாகவே தெரிந்தாள். “ஒருவேளை நிஜமாஜவே இவள் இப்படித்தானோ! நாம் தான் தவறாக புரிந்துக் கொண்டோமோ! என்று நினைத்தவள்,

“மச்சி.. மகி அண்ணாக்கு இந்த கல்யாணத்துல விருப்பமான்னு தெரிஞ்சிக்க நினைச்சியே! உண்மையிலேயே உனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதமா? இல்ல அத்தை சொன்னதுக்காக ஒத்துக்கிட்டியா?” என்றுக் கேட்டாள்.

“இதுல என்ன மச்சி உனக்கு சந்தேகம்.. எனக்கு இதுல சம்மதம் தான்.. வீட்ல எல்லோரும் என்னோட நல்லதுக்கு தானே செய்வாங்க.. அப்போ இதுல எனக்கு எப்படி சம்மதம் இல்லாம போகும்”

“நம்ம வீடல இருக்கவங்க நமக்கு நல்லது தான் செய்வாங்க.. அதைப்பத்தி நான் கேக்கல. அதுல உனக்கு சம்மதமா?” அதை தான் கேக்கறேன்.. நான் எதுக்காக இப்படி கேட்கிறேனுன்னு உனக்கு புரியுது இல்ல..” என்று அவளை தன் பக்கம் திருப்பி அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்து இலக்கியா கேட்டாள். உதடு பொய் சொன்னாலும், கண்களில் உண்மையை அறிய நினைத்தாள். ஆனால் அருள்மொழியின் கண்களில் இருந்து அவளால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“மச்சி.. இந்த கல்யாணத்துல எனக்கு சம்மதம் தான்.. நீயா எதையாவது நினைச்சு குழப்பிக்காத.. சீக்கிரம் எனக்கு இந்த ஜ்வல்ஸ போட்டுவிடு.. இல்ல பெல்லும் ஃப்ளவரும் வந்து கத்துவாங்க..” என்று தன் தோழி எதை குறித்து இப்படி பேசுகிறாள் என்பதை புரிந்தவளாக, இதை சொல்லியப்படியே தன் கையில் வளையல்களை மாட்டினாள்.

*அருள் தெளிவா தான் இருக்கா.. நாம தான் குழப்பிக்கிறோம்..” என்றப்படியே இலக்கியாவும் தோழியை அலங்கரிப்பதில் ஆர்வம் காட்டினாள்.

கி வண்டியை நிறுத்திய இடத்தின் அருகே ஒரு அம்மன் கோவில் இருந்தது..  தன் பேச்சைக் கேட்டு தான் மகி வண்டியை நிறுத்தியாக நினைத்த அறிவு ஏதோ பேச்சை எடுத்தப் போது,

“அறிவு.. ஒரு நிமிஷம் நீ இங்கேயே இரு.. நான் உள்ள போயிட்டு வரேன்..” என்று அந்த கோவிலின் உள்ளே  மகி நுழைய போனான்.

“ஹே இருடா நானும் வரேன்..” அறிவும் வண்டியை பூட்டிவிட்டு உள்ளே செல்வதற்காக முயன்றபோது,

“ஹே நீ இங்கேயே நில்லுடா.. நான் ஒரு நிமிஷத்துல வந்துடுவேன்.. நாம பொறுமையா சாமி கும்பிட நேரமில்லை..” என்று சொல்லியப்படியே உள்ளே சென்றுவிட்டான். அறிவும் அவன் பின்னால் செல்லாமல் அங்கேயே நின்றுவிட்டான்.

“நிச்சயத்தை விட்டு ஏர்ப்போர்ட்டுக்கு போறதா சொன்னான். இப்போ ஏர்ப்போர்ட்க்கும் போகாம கோவிலுக்குள்ள போயிருக்கான்.. எதுக்கு இவன் இப்படியெல்லாம் செய்றான்.. ஒருவேளை இவன் போறதுக்குள்ள சுடர் ஃப்ளைட் ஏறிட கூடாதுன்னு வேண்டிக்கப் போறானோ? அங்க அருள் கூட நிச்சயதார்த்தம், இந்த நேரத்துல சுடர் லண்டனுக்கு போகக் கூடாதுன்னு இவன் கிளம்பி வந்திருக்கான்.. இந்நேரம் வீட்ல தேட ஆரம்பிச்சிருப்பாங்களே? கண்டிப்பா எங்கக் காணோம்னு போன் செய்வாங்க.. இவன் கூட வந்து எனக்கும் திட்டு விழப் போகுது.. இப்போதைக்கு போனை ஆஃப் செஞ்சு வக்கறது தான் பெஸ்ட்..” என்று வாய்விட்டு புலம்பியப்படியே, தன் அலைபேசியை எடுத்து அணைத்தான். அவன் தனியாக நின்று பேசிக் கொண்டிருந்ததை சில பேர் பார்த்துக் கொண்டே போக, “அடப்பாவி இப்படி என்னை தனியா புலம்பவச்சு பைத்தியம்னு பேர் வாங்கி கொடுத்துருவான்..” என்று திரும்ப வாய்விட்டு பேசினான். அந்த நேரம் கோவிலிலிருந்து வெளிவந்த மகி..

“டேய் சீக்கிரம் வந்து வண்டியில் ஏறு..” என்று சொல்லியப்படியே வேகமாக ஏறி வண்டியை கிளப்பினான்.

“டேய்.. வீட்ல நம்மள தேட ஆரம்பிச்சிருப்பாங்கடா.. மலர், மணி வீட்டு ஆளுங்க வேற வந்திருப்பாங்க.. வீட்டுக்கே திரும்ப போலாம்டா..” என்று சொல்லியப்படி அறிவு மகியின் பின்னால் அமர்ந்ததும், வண்டியை இயக்கியவனோ?

“அய்யர் வர லேட்டாகும்டா அறிவு.. அதுக்குள்ள நாம போயிடலாம்.. நீ பயப்படாம வாடா..” என்று சொல்லியவன், முன்பை விட இன்னும் கொஞ்சம் வேகமாக வண்டியை இயக்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.