(Reading time: 23 - 45 minutes)

கூடியிருந்த கும்பல் கலைந்துப் போயிருக்க, அதுவரை ஒதுங்கி நின்றிருந்த அறிவு, மகியின் அருகில் வந்திருந்தான்.

“என்ன மகி.. என்ன காரியம் செஞ்சு வச்சிருக்க..? அங்க வீட்ல, அருளோட நிச்சயம்னு எல்லாம் காத்திருப்பாங்க.. இங்க சுடர் கழுத்துல தாலிக் கட்டிருக்க.. என்னடா இதெல்லாம்?”

“எனக்கு சுடரை தடுக்க வேற வழித் தெரியலைடா”

“அதுக்காக தாலிக் கட்டுவியா? அவ லண்டனுக்கு போறதால என்னடா? அவ செஞ்சதெல்லாம் மறந்துட்டியா? ஆமா உனக்கு இந்த தாலி கயிறு எங்க கிடைச்சது..?” என்றுக் கேட்டவன், பின் ஞாபகம் வந்தவனாக,

“ஓ அதுக்கு தான் கோவிலுக்குப் போனியா? அப்போ முன்னாடியே முடிவு செஞ்சிருக்க..”

“எனக்கு சுடர் பத்தி தெரியும்.. அவ எடுத்த முடிவுல தீவிரமா இருப்பா.. அதான் எதுக்கும் இது தேவைப்படும்னு எடுத்துட்டு வந்தேன்.. என்னோட காதலை இப்போ சுடர்க்கிட்ட சொல்ற சூழல் இல்ல, அதான் இப்படி ஒரு முடிவு செஞ்சேன்..”

“என்னது காதலா? அப்போ அருளை கல்யாணம் செஞ்சுக்க ஏண்டா சம்மதம் சொன்ன.. இப்போ அவ அங்க உனக்காக காத்திருப்பாளே! அவளுக்கு என்ன சொல்லப் போற..”

“சுடரை மனசுல வச்சிக்கிட்டு அருளை எப்படிடா கல்யாணம் செய்துக்கறது..  சுடர் மேல இருந்த கோபத்தாலயும், அத்தை ஃபீல் பண்ணி அழுததாலயும் இதுக்கு ஒத்துக்க வேண்டியதா போச்சு..”

“இப்போ வீட்ல இருக்கவங்களுக்கு என்னடா பதில் சொல்லப் போற?”

“தெரியலைடா.. துணிஞ்சு செஞ்சாச்சு.. எப்படியும் அதை எதிர்கொண்டு தானே ஆகனும்.. ஆனா இனி சுடரை எந்த பிரச்சனைக்காகவும் நான் பிரியறதா இல்ல..”

“சுடர் மேல காதல்னா அதை என்கிட்டயாவது சொல்லியிருந்திருக்கலாமேடா.. இவ்வளவு தூரம் எல்லாத்தையும் இழுத்து விட்டிட்டு சொல்ற.. நீ தைரியமா பிரச்சனையை எதிர் கொள்ளலாம்னு சொல்ற.. ஆனா எனக்கு அந்த தைரியம் இல்ல.. ஆனா உன்கூட வந்திருக்கேனே, கடைசி வரைக்கும் உன்கூட தானே நின்னாகனும்.. சரி வா போகலாம்..’

“ஆமாண்டா.. சுடர் வேற கோபமா போனா, கிளம்பியிருப்பாளான்னு தெரியல.. வா போய் பார்க்கலாம்” என்று அவனை இழுத்துக் கொண்டு வெளியே வந்து பார்த்தால், சுடர் தன் உடைமைகளோடு அங்கே தான் நின்றிருந்தாள். தனக்காக காத்திருக்கிறாள் என்பதில் நிம்மதியடைந்தவன்,  அவள் அருகே சென்று,

“தேங்க்ஸ் சுடர்.. கோபத்துல போயிருப்பியோன்னு நினைச்சேன்.. ஆனா நீ எனக்காக வெய்ட் பண்ற.. தேங்க்ஸ்..” என்று அவன் மகிழ்ச்சியோடு சொல்ல, அவளுக்கு இருந்த கோபத்தில் அவனது கன்னத்தில் இன்னொரு முறை அறைந்திருந்தாள்.

மகிக்கு விழுந்த அறையில் அறிவு ஆடிப் போனான். “கல்யாணத்துக்கு அப்புறம் பொண்டாட்டி கையால அடி வாங்கனும்னு செவி வழியா தான் இதுவரை கேள்விப் பட்ருக்கேன்.. இப்போ தான் நேரடியா பார்க்கிறேன்.. என்ன அடி!! அதுவும் தாலிக் கட்டின கொஞ்ச நேரத்துல.. மவனே இது தான் உன்னோட காதலுக்கான பரிசாடா..” என்று மகியை பார்த்தப்படி அவன் மனதிற்குள் பேசிக் கொண்டிருந்தான்.

சுடர் கொடுத்த அறையில் மகி தன் கையை  கன்னத்தில் வைத்திருந்தான். “உனக்காக காத்திருக்கேனா? கடுப்பேத்தாத, நானே எங்க போகன்னு தெரியாம நின்னுக்கிட்டு இருக்கேன்.. அந்த வீட்ல இனி இருக்கக் கூடாதுன்னு முடிவு செஞ்சு தான், நான் கிளம்பி வந்தேன். திரும்ப அந்த வீட்டுக்கு போக மாட்டேன்.. அப்போ நான் வேற எங்க போறது?” கோபத்தோடு அவனிடம் கேட்டாள்.

“நாம நம்ம வீட்டுக்கு போவோம்..”

“தேவையில்லை.. நான் அங்க வர மாட்டேன்.. ஃப்ளைட் ஏறாம திரும்ப வந்ததால, இந்த கயித்துக்கு நான் மதிப்பு கொடுக்கிறேன்னோ, இல்லை உன்னை புருஷனா ஏத்துக்கிட்டேன்னோ நினைச்சுக்காத, என்னால அந்த வீட்டுக்கு வர முடியாது.. அங்க இருப்பவங்க என்னை ஏதாவது சொன்னா என்னால தாங்கிக்க முடியாது.. நான் வரல, என்னை இப்படியே விட்டுட்டு நீ போ..”

“உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.. சொல்லவும் நான் விட மாட்டேன்.. ரெண்டு வீட்டுக்கும் நீ வரலன்னா, வேற எங்க போவ? இங்கேயே நின்னு சீன் கிரியேட் பண்ணாம, பேசாம வா சுடர்..” என்றவன், அடுத்து அவளை பேச விடாமல், அங்கிருந்த ஒரு வாடகை காரை அழைத்து, அதில் அவளை ஏற்றியவன், அறிவழகனை பைக்கில் வருமாறு சொல்லிவிட்டு, அவனும் ஏறிக் கொண்டான். வீட்டில் உள்ளவர்களிடம் எப்படி இங்கு நடந்ததை சொல்வது என்று சிந்தித்துக் கொண்டு வர, இவர்கள் செல்வதற்கு முன்னரே, வலை தளங்களின் மூலம் இவர்கள் திருமண செய்தி அவர்கள் வீட்டை எட்டியிருக்கும் என்பதை அவன் அப்போது நினைத்துப் பார்க்கவில்லை.

வணக்கம் தோழமைகளே, இந்த தொடரின் அத்தியாயம் கொஞ்சம் தாமதமாகிவிட்டது.. UNES இறுதி கட்டத்தை நோக்கி பயணிப்பது உங்களுக்கே தெரியும்.. இது ஆரம்பமாக இருந்தாலும், இதுவும் பரபரப்போடு பயணிக்கிறது. ஒரே சமயத்தில் இரண்டு தொடரும் பரபரப்பா போகும்போது எழுதுவதற்கு கொஞ்சம் சிரமமாக இருப்பதால் தான், இந்த தொடருக்கான அத்தியாயங்களை சீக்கிரம் கொடுக்க முடியாமல் போகிறது. UNES முடிந்ததும் அந்த ஸ்லாட்டில் இந்த கதைக்கான அத்தியாயத்தை தொடந்து கொடுக்கிறேன்.. அதுவரை இப்படி அத்தியாயங்கள் தாமதமாக வரும்.. பொறுத்துக் கொள்ளுங்கள் தோழமைகளே.. இந்த அத்தியாயம் எப்படி இருந்ததென்று உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. நன்றி. 

உறவு வளரும்...

Episode # 05

Episode # 07

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.