(Reading time: 19 - 37 minutes)

மைத்ரீயோ, “இல்லை சரயூ! நான் எக்ஸ்ட்ரா துணி எடுத்துட்டு வரல...இன்னொரு முறை வரும்போது ஆத்துல குளிச்சுக்கலாம் விடு” என்று சரயூவின் திட்டத்தில் அலுங்காமல் குலுங்காமல் குண்டொன்றை போட்டாள்.

“உன்னோட ஆசை தெரிஞ்சிருந்தா முதலே சொல்லியிருப்ப மைத்ரீ” என்று சாரதா வருந்த..

“அவதா சொன்னாளே....அடுத்த முறை குளிக்குறேனு...விடுங்க சம்மந்தி” வடிவு சாரதாவிற்கு பரிந்து பேசினார்.

“நீங்க வருத்த படாதீங்க அத்தை! அடுத்த முறை நீங்களே தடுத்தாலும் கூட, நான் ஆத்துலதா குளிப்பேன் பாருங்க” என்று மைத்ரீயும் சாரதாவிற்கு ஆதரவாக பேசினாள்.

சரயூவின் திட்டம் தோற்றிட...தாயின் கட்டளையால், அவன் துணிகளிருந்த பையை வேண்டா வெறுப்பாக எடுத்து கொண்டு ஆற்றை நோக்கி சென்றாள்.

ற்றின் வளமையையும், அதனால் சுற்றியிருக்கும் ஏக்கர் கணக்கான விலை நிலங்களின் செழிப்புமென ரவிகுமார் ஊரின் பெருமையை சந்திரசேகரிடம் பேசியது....இவர்கள் தங்கியிருந்த வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தவனின் காதில் விழவும்...

“இந்த ஊர்ல ஆறு இருக்கா, அங்கிள்?” ஆச்சரியமும் ஆர்வமுமுமாய் ஜெய் கேட்க

“ஆறென்ன....எங்க ஊர்ல இல்லாததனு எதுவுமே இல்லை!” என்றார் ஊரின் பெருமையை சொல்ல அடுத்த நபர் கிடைத்த சந்தோஷத்தில் 

“எங்கிருக்கு அங்கிள்?”

“கோயிலுக்கு பின்னாடி இருக்கு ஜெய்.  என்ன ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டியிருக்கும்.  மழை காலத்துல தண்ணி கோயில் பின்னாடியே வந்திரும்.  இப்போ கொஞ்ச உள்வாங்கியிருக்கு”

“அப்படின்னா நான் ஆத்துல குளிச்சிட்டு வரேன்” இருவருக்கும் பொதுவாக சொன்னவன் குதூகலமாக நடக்க ஆரம்பித்தான்.

இவனிடமிருந்த மகிழ்ச்சியை கவனித்த ஆதர்ஷ், “சரயூ இல்லாம தனியா எங்க போற ஜெய்?” என்று கண் சிமிட்டி காலையில் நிறுத்திய கேலியை தொடர...

தன்னவளின் பெயரில்...சற்று முன் அவள் கொடுத்திருந்த பரிசின் நினைப்பில், முகம் மலர்ந்திட, “கோயிலுக்கு பின்னாடி ஆறு இருக்காம்..அங்கிள் சொன்னாங்க...அதான் குளிக்க போயிட்டிருக்க”

“ஹே வாவ்!” என்று கூவியவன், “நானும் வரேன் வா” அவனோடு கிளம்பிவிட்டான்.

இருவரும் சிறுபிள்ளைகள் போல் சந்தோஷத்தில் துள்ளி...ஆற்றில் நீந்தி கொண்டிருக்க, ப்ரியா வந்து சேர்ந்தாள்.

குறும்பு கண்களில் வழிய, “குளிக்கும்போது புருஷனை சைட் அடிக்க வந்தியா டார்லிங்க்?” என்றான் ஆதர்ஷ்.

முகத்தின் செம்மையை மறைத்தபடி, “ஜெய்யை பக்கத்துல வச்சுக்கிட்டு என்ன பேச்சிது” என்று கணவனை முறைக்க முயன்றாள்.

“அவன் ஒன்னும் குழந்தையில்லை டார்லிங்க்.  அவனுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு.  காலைல பார்த்தயில்லை அவங்க நம்ம விட ரொம்ப ஃபாஸ்ட்.  நான் பேசினதுக்கே இப்படி சொன்ன எப்படி டார்லிங்க்?” என்றபடி கையில் நீரை அள்ளியவன், அவள் மீது வீசினான்.

“சும்மா இருங்க தர்ஷ்” என்று அவள் கெஞ்ச, இவன் மேலும் நீரை வீச, “இப்போ நீங்க நிறுத்தல, நான் கிளம்பிடுவேன்.  அதுவும் நீங்க கழட்டி வச்சிருக்க இந்த துணியோடு போயிடுவேன்” என்று ப்ரியா மிரட்ட...

“போ டார்லிங்க்! எனக்கென்ன உன்னோட புருஷனை இந்த ஊரு பொண்ணுங்கெல்லாம் பார்ப்பாங்க.  ஐயாவோட அழகுல மயங்கி...நான் இன்....” ஆதர்ஷ் முடிக்கும் முன்னரே அவன் தோள் பட்டையில் ஏற்பட்ட வலியில் திரும்பி பார்த்தான்.

குறி தவறாது அவன் மீது கல்லை எரிந்துவிட்டு கோபமாக நின்றிருந்த ப்ரியாவை கண்டதும், “என்னை கொல்ல பாக்குறியா டார்லிங்க்?”

கணவன் விளையாடுவது புரிந்தாலும், அவன் தனக்கு மட்டுமே என்ற உரிமையில், “கண்டிப்பா தர்ஷ்! இன்னொரு முறை வேற எவளை பத்தியாவது பேசினீங்க....உங்களை கொல்லாம விடமாட்டேன்” என்றவளின் வார்த்தையில் இல்லாத காதல் கண்களில் வழிந்தது.

அதை கண்டுகொண்டவன், “உன் கையால சாக நான் எப்பவுமே தயார்தான் டார்லிங்க்” என்று தன் காதலை அவன் சொல்லாமல் சொல்லிட...

“ஸாரி ஜெய்! தர்ஷை பேசவிட்டா இன்னைக்கு முழுக்க பேசிக்கிட்டே இருப்பாரு... ஆனா மாத்து துணி கூட எடுக்காம வந்திருக்குறத பாரு... அதான் நானே எடுத்துட்டு வந்தே”

“நானும் மறந்துட்ட ப்ரியா! கழட்டின துணியே போட்டுட்டு போயி வீட்ல இன்னொரு குளியல் போட வேண்டியதுதான்”

“திரும்ப திரும்ப குளிச்சுக்கிட்டேயிருந்தா ஜலதோஷம்தா பிடிக்கும்.  புது ஊரு வேற தண்ணீ உடம்புக்கு ஒத்துக்கும்னு சொல்ல முடியாது” என்று சொன்னவள் கணவனிடம் திரும்பி, “குளிச்சது போதும் வாங்க, தர்ஷ்.  நாம போயி ஜெய்கு மாத்து துணி எடுத்துட்டு வரலாம்”

“நீ சொன்னா சரி, டார்லிங்க்!” என்றவன் கரையை நோக்கி நகர்ந்தபடி ஜெய்யிடம், “இன்னும் கொஞ்ச நேரம், தண்ணீயை எஞ்சாய் பண்ணு ஜெய்.  நான் போயி உனக்கு துணி கொண்டு வரேன்” 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.