(Reading time: 19 - 37 minutes)

இவர்கள் கோயிலை நோக்கி நடக்க, சரயூ பையோடு வருவதை பார்த்து சிரித்தனர்.  காலையில் ஜெய்யை மட்டுமே கேலியில் தள்ள முடிந்தது.  இப்போது சரயூவை பார்த்ததும் அந்த நினைப்பில் சிரிப்பு வர....

“சரியான நேரத்துக்கு வந்த...இல்லைனா ஜெய் அப்படியே ஊருக்குள்ள வந்திருப்பான்...அப்றம் என்னெல்லாம் நடந்திருக்குமோ?”

இவன் சரயூவை வம்பிழுக்கிறான் என்பதை அறிந்த ப்ரியா, “தர்ஷ் சும்மாவே இருக்கமாட்டீங்களா?”

“சும்மா தானே இருக்க” என்று இவள் காதோரம்... இருபொருளில் அவன் கிசுகிசுக்க, கணவனை முறைத்தவள், சரயூவிடம், “ஜெய் இன்னமும் குளிச்சிட்டிருக்கா...நீ போ” என்றுவிட்டு “அவங்க நம்மளை பத்தி என்ன நினைப்பாங்க?” என்று ப்ரியா கோபப்படுவது கேட்டாலும்...

அதை கண்டுகொள்ளாது கணவனை வசைப்பாட துவங்கினாள் சரயூ.

‘இவனுக்கென்ன மனசுல குழந்தைனு நினைப்பா...ஆத்துல குளிக்க வரோமே மாத்து துணி கொண்டுவரனும்னு அறிவில்லை.  இதையெல்லாம் நான் செய்ய வேண்டியிருக்கு’ தனக்குள் புலம்பியபடி நடந்தாள்.

சற்று முன் ஆதர்ஷ்-ப்ரியா இடையே இருந்த அன்னியூன்யம், ஜெயிற்கு ஏக்கத்தை விளைவித்தது.  இவனும் சரயூவின் மேல் நீரை வீசுவதும்...அவளின் முக சிவப்பை பொய்யான கோபத்தோடு மறைப்பதும்...இவனுக்கு துண்டு கொடுத்து, உரிமையோடு இவன் தலையை துவட்டி விடுவதுமாக ஆசைகள் பல இவனிடம்.

நீரில் நீந்தியபடி கனவுலகில் மிதந்த ஜெய்யின் முன் தேவதையாக வந்து நின்றாள்.  அவளை உச்சி முதல் பாதம் வரை அளந்தவனுக்கு, கையிலிருந்த பை தான் அவள் நனவில் வந்திருப்பதை புரிய வைக்க...

அவன் ஏக்கங்களை போக்க வந்துவிட்டாள் என்று தோன்றிய நொடி தன்னையும் அறியாது, “சரூ வந்துட்டியா?” என்று கேட்டபடி கரையை நோக்கி நீந்த ஆரம்பித்தான்.

ஜெய்யின் முகத்திலிருந்த பிரகாசமும், உதட்டின் புன்னகையும், எத்தனையோ கதைகளை சுமந்த கண்களும் அவளை கட்டிபோட....அவளும் அசையாது இவனையே பார்த்திருந்தாள்.

தன்னிலை மறந்து ஆற்றிலிருந்து எழுந்தவன் கோலத்தை கண்டவள் சட்டென மறுபுறம் திரும்பி கொண்டாள்.  வெவ்வேறு அறைகளில் இருப்பதால், வீட்டில் இதுபோன்ற நிலையை சந்தித்ததில்லை.

நெஞ்சில் ஒரு விதமான படபடப்பும்...அதனால் உடலில் ஏற்பட்ட நடுக்கமுமாக நின்றவள், ‘கரும...கரும...எப்படி வந்து நிக்கிறா பாரு! கொஞ்ச கூட வெட்கமேயில்லாம.  இது தெஞ்சுதா அவங்க ரெண்டு பேரும் ரகசியம் பேசி சிரிச்சாங்களா? எல்லா இவனால வந்தது’ ஆதர்ஷ் ப்ரியாவிடம் குறும்பாக பேசியது தெரியாமல் ஜெய்யின் மேல் கோபம் திரும்ப, உள்ளுக்குள் அவனை திட்டி தீர்த்தாள்.

சரயூவின் செயலில் தெளிந்தவன், அப்போது தான் தன்னிலை உணர....  பாக்சர்ஸ் மட்டுமே அணிந்திருந்தவனுக்கு வெட்கத்தில், சட்டென வார்த்தைகள் வர மறுத்தன.  காலையிலிருந்து தனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து கொண்டிருந்த மனைவியின் முகத்திருப்பலில் வாடிய மனது இப்போது தெளிந்துவிட்டது.  இந்த கோலத்தில் அவள் முன் நின்றால் வேறென்ன செய்வாள்? என்று தன்னயே கேட்டவன்...

அவளிடம் நெருங்கி, “சாரி சரூ!” என்று மயக்கும் குரலில் மன்னிப்பு வேண்ட...பெண்ணவளின் படபடப்பும், உடல் நடுக்கமும் அதிகரிக்க செய்வதறியாது தத்தளிக்க....

“சீக்கிரம் டவல் கொடுடா! யாராவது வந்துர போறாங்க”

அவன் கேட்டதும் பையை, அங்கிருந்த கல்லொன்றின் மேல் வைத்து, அதிலிருந்த துண்டை எடுத்து, அவசரமாக அவனிடம் நீட்டினாள்.

இவனிடம் திரும்பாது கொடுத்தவளிடமிருந்த துண்டை, சிறு சிரிப்போடு வாங்கியவன், அவளுக்கு முதுகு காட்டி திரும்பி நின்று கட்டிக் கொண்டு, “தாங்க் யூ சரூ! ஆத்துல குளிக்கிற சந்தோஷத்துல துணியை எடுத்துட்டு வர மறந்துட்டே...இதுவரைக்கும் கிராமத்து பக்கம் வந்ததேயில்லையா....அதான் எல்லாமே வித்தியாசமா, ரொம்ப புதுசாயிருக்கு”

வழக்கம் போல் இவன் பேச்சுக்கு அவள் பதில் கொடுக்காது நின்ற இடத்திலியே நின்றிருக்க... இவன் துணியை எடுக்க வேண்டி அவளை தாண்டி சென்றான். 

வெளிர் முதுகில் நீர்த் திவாளைகள் நிறைந்திருக்க, இடையில் ஒற்றை துண்டோடு, வொர்க் அவுட் செய்து திரண்டிருந்த புஜங்களும், பையில் துணிகளை தேடும் போது அவை அசைந்த விதமும் அவைகளை உணரும் ஆசையை தர....காலையில் இவள் சாய்ந்திருந்த மார்பும், அதனையுணர்ந்த தன் முகத்தை கைகள் தாமாக தடவி கொடுக்க....இவளுக்கு மட்டுமே சொந்தமான அவன் மார்பை பார்த்திடும் ஆவலெழ அதிர்ந்து போனாள் சரயூ.

‘நோ! நான் ஏன் இவ்வளவு கேவலமா யோசிக்குற? எப்போலிருந்து இப்படி பலவீனமானேன்? நான் ஏன் தடுமாறுற? நினைச்சது என்ன? நடக்குறது என்ன?’ மனதிலெழுந்த கேள்விகளை முந்திக்கொண்டது கண்களில் திறண்ட கண்ணீர்.  அவனிடம் சொல்லிக்கொள்ளாது கோயிலை நோக்கி நடக்கலானாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.