(Reading time: 14 - 28 minutes)

....

"அவ கிட்ட காதல் பேசவோ, சந்தோசமா சிரிச்சு பேசவோ இல்லை. உண்மை என்னனு தெரிஞ்சிக்க மட்டும் தான். அவ கிட்ட நேரடியா கேட்கவும் செஞ்சேன். ஆனா அவ நண்பன்னு மட்டும் தான் சொன்னா. தலைல அடிச்சு சாத்தியமா சொல்றேன் அவன் பிரண்ட் தான்னு அவ சொன்னா. அப்புறம் நான் என்ன செய்யன்னு விட்டுட்டேன். ஆனா அவ ஓடி போன அன்னைக்கு தான் புரிஞ்சது. அவன் தான் அவளோட லவ்வர்ன்னு. நான் கேட்டப்பவே சொல்லிருந்தா நான் அன்னைக்கு அசிங்க பட்டிருக்க மாட்டேன்ல கலை? அவ வீட்டுக்கு பயந்து என்னை பலிக்கடாவா ஆக்கிட்டா போல? நான் சந்தேகம் வந்ததும் அவங்க வீட்ல சொல்லி விசாரிக்க சொல்லிருக்கணும். தேவை இல்லாத பிரச்சனையை எதுக்கு ஆரம்பிப்பானேன்னு நினைச்சு அமைதியா இருந்தது என் தப்பு. துரோகி நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டா"

....

"அவ கூட என் கல்யாணம் நடக்கலைன்னு எல்லாம் நான் வருத்த படலை. ஆனா சந்தேகம் வந்தும் ஏமாந்துருக்கேனேன்னு எனக்கு என்னையே நினைச்சு எரிச்சல் தான் வந்துச்சு. அந்த கோபத்தில் இருந்தவனை உன்னை கல்யாணம் பண்ண சொன்னப்ப கூட கொஞ்சம் தான் அந்த எரிச்சல் வந்தது"

....

"உன்னை பத்தி யோசிக்கவோ, கல்யாணத்தை பத்தி கனவு காணவோ எதுவுமே தோணலை. என்னை ஒருத்தி அவமான படுத்திட்டா, ஏமாத்திட்டா அப்படின்னு மட்டும் தான் சிந்தனை இருந்தது.  இப்ப சொல்லு நான் அவளை விரும்பிருப்பேனா?"

"இல்லை"

"ஆமா அவளை பத்தி ஒரு நிமிஷம் கூட நான் யோசிச்சது இல்லை. அம்மா அப்பாவை பாத்த தான? ரொம்ப நல்லவங்க. எனக்கு அவங்கன்னா உயிரு. அவங்க வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கணும்னு நினைச்சேன். அதனால தான் அவளை அவங்க பொண்ணுன்னு சொன்னா உடனே சரின்னு சொன்னேன்"

....

"அதுக்கப்புறமும் அம்மா உன்னை சொன்னப்ப வேண்டாம்னு சொன்னேன் தான். ஆனா அப்பவும் அவங்களுக்காக தான் ஒத்துக்கிட்டேன். குடும்பத்துக்கு ஒரு அவமானம் வர போகுதுன்னு அவங்க கலங்குனதை பாத்துட்டு சும்மா இருக்க முடியலை. சரினு சொல்லிட்டேன். ஆனா அப்ப உன் முகத்தை கூட நான் பாக்கலை. உன்னை பாத்ததும் கிடையாது. அதான் கோபமா எழுந்து போய்ட்டேன். அப்புறம் நிதானமா யோசிச்சு பாத்தப்ப தான் இப்ப என்ன தப்பு நடந்துருக்கு? எல்லாமே சரியா தான நடந்துருக்குன்னு தோணுச்சு"

....

"கல்யாணம் அன்னைக்கு என் கல்யாணம் நிக்காம நடந்துட்டே. வேற ஒரு பையனை லவ் பண்ற பொண்ணு கிட்டே இருந்து நான் தப்பிக்க தான செஞ்சிருக்கேன். அது மட்டும் இல்லாம, அவ என் மனசுல எந்த சலனத்தையும்  உண்டாக்கலை. அப்படி இருக்கும் போது எதுக்கு கவலை படணும்னு யோசிச்சப்ப தான் உன் ஞாபகம் வந்தது. இதில் உன்னை பலிக்கடாவா ஆக்கிட்டாங்களோன்னு நினைச்சேன். உன் மேல எதுக்கு கோப படணும்னு நினைச்சேன். நீயும் வேற யாரையும் விரும்பியிருந்தால் என்ன செய்யன்னு பயம் வந்துச்சு. அப்புறம் உன் பிரண்ட் கிட்ட கேட்ட அப்புறம் தான் நிம்மதியாச்சு"

.....

"இப்ப உன் கவலை எல்லாம் போயிருச்சா?"

"நான் ஒன்னும் கவலை படலையே", என்று சொன்ன கலையின் குரலில் இருந்த துள்ளல் அவளை காட்டி கொடுத்தது.

சிரித்த சூர்யா, "இந்த கேள்வியை கேக்க சொன்னது காவ்யா தான?", என்று கேட்டான்.

"ஆன்.. உங்களுக்கு எப்படி தெரியும்?"

"இதுக்கு என்ன ஜோசியமா பாக்கணும்? நீ இப்படி எல்லாம் கேக்க மாட்டியேன்னு நினைச்சேன்"

"அவ என் மேல உள்ள அக்கரைல தான் கேக்க சொன்னா"

"புரியுது கலை. நாளைக்கு அவ கிட்ட சொல்லு. என் அத்தான் மனசுல யாருமே இல்லை. கூடிய சீக்கிரம் நான் தான் அவர் மனசுல இருப்பேன்னு", என்று சொல்லி சிரித்தான் சூர்யா.

அழகாய் வெக்க பட்டு தலை குனிந்தாள் மதி.

"இப்ப சொல்லு உனக்கு என்னை பிடிச்சிருக்கா?"

"பிடிச்சிருக்கு"

"கொஞ்சமா? நிறையவா?"

"நிறைய", என்று சொல்லி விட்டு முகத்தை திருப்பி கொண்டாள் கலைமதி.

அவள் வெக்கத்தை ரசித்தவன், "ஹ்ம்ம் இன்னும் ஒரு வருஷம் படிப்பை முடிக்கணுமே. அது வரை தேவை இல்லாததை யோசிக்க வேண்டாம்", என்று சொல்லி பெருமூச்சு விட்டான்.

பே என்று முழித்தாள் மதி.

அவளை பார்த்து வந்த சிரிப்பை அடக்கி கொண்டு "தூங்க போகலாமா?", என்று கேட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.