(Reading time: 14 - 28 minutes)

"ஹ்ம்ம்", என்ற படியே அவனுடன் நடந்தாள்.

கீழே போனதும் அவளிடம் ஒரு புது போர்வையை நீட்டினான்.

அதை தயக்கத்துடன் வாங்கியவள் "இதை நீங்க வச்சுக்குறீங்களா? நான் உங்களோடதையே வச்சிக்கிறேன்", என்றாள்.

"அது அழுக்கு மா. இது புதுசு"

"பரவால்ல. அது தான் வேணும்"

"எதுக்கு?"

அவனுடைய வாசனை பட்ட போர்வையை மூடினால் முகம் தெரியாத அம்மாவின் மடி மீது படுப்பதை போல சுகமாக இருக்கிறது என்று சொல்ல முடியாமல் அமைதியாய் இருந்தாள்.

"என்ன நினைச்சானோ, சரி அதையே வச்சிக்கோ", என்ற படியே புது போர்வையை வாங்கினான். வாங்கும் போது, அவன் விரல் அவளுடைய விரலில் பட்டு இருவரையும் சிலிர்க்க வைத்தது.

அந்த சின்ன தீண்டல் இருவருக்குமே உயிர் வரை சென்று இன்பத்தை கொடுத்தது.

"அவளை கட்டிக்கோ", என்று மனது கூச்சலிட்டது சூர்யாவுக்கு. அதை அடக்கியவன் "நயிட்டி உனக்கு அழகா இருக்கு", என்று சொல்லி அவளை வெக்க பட வைத்தான்.

சிறு சிரிப்புடன் கட்டிலில் அவனுக்கு முதுகு காட்டி படுத்தவளுக்கு ஆனந்தமாக இருந்தது.

அவனும் நிம்மதியாக கண்களை மூடினான். 

காலையில் ஏதோ பாத்திரம் விழும் சத்தத்தில் கண் விழித்தான் சூர்யா.

எழுந்து கிட்சன் சென்று பார்த்தான். மதி தான் உருட்டி கொண்டிருந்தாள்.

"என்ன மா சீக்கிரம் எழுந்துட்டியா?"

"ஆன். அத்தான். எந்திச்சுடீங்களா? நானும் இப்ப தான் எழுந்தேன். காபி தரவா?"

"ஹ்ம்ம் சரி. ஆனா கஷ்டமா இருந்தா சமையல் செய்ய வேண்டாம். வெளிய சாப்பிட்டுக்கலாம்"

"இல்லை இல்லை. கஷ்டம் எல்லாம் இல்லை. நான் செய்றேனே ப்ளீஸ்"

நேற்று போட்டிருந்த நயிட்டியை மாற்றி  விட்டு, வேறு ஒன்றை அணிந்திருந்தாள். குளித்ததுக்கு அடையாளமாக தலையை சுற்றி துண்டை கட்டி இருந்தாள்.

நெற்றியில் வியர்வை படிய, முகத்தில் சிரிப்போடு தலையை சரித்து அவள் கேட்ட கேள்வியில் இல்லை வேண்டாம் என்று எப்படி சொல்ல முடியும் அவனால்?

"சரி செய். நான் பிரஸ் பண்ணிட்டு வந்து காபி குடிக்கிறேன்", என்ற படியே அறைக்குள் சென்று மறைந்தான்.

காபி போட்டு ஆற்றியவள், அவன் வந்ததும் அவன் கையில் கொடுத்து விட்டு சமையலை ஆரம்பித்தாள்.

ஏழு அறைக்கு அதை முடித்தவள், அவனுக்கும் அவளுக்கும் மதியத்துக்கு எடுத்து வைத்தாள்.

வேலையை முடித்து வெளியே வந்தவளை பார்த்து சிரித்த சூர்யா "முடிச்சிட்டியா?", என்று கேட்டான்.

"முடிச்சிட்டேன் அத்தான். உங்களுக்கு மதியத்துக்கு அடைச்சிட்டேன். காலைல தோசை சுட்டு ஹாட்பாக்ஸ்ல வச்சிருக்கேன்"

"சரி கலை. நீ கிளம்பலையா?"

"இதோ போறேன்", என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.

சுடிதார் எடுத்து கொண்டு பாத்ரூம் சென்றவள் நயிட்டியை  மாற்றி, டாப்ஸை அணிந்தாள்.

அப்போது தான் நினைவு வந்தது அது கேதரிங் பேன்ட் என்று. ஈரத்துக்குள் வைத்து மாற்ற முடியாமல் திண்டாடியவள், "இந்த மாடலை எதுக்கு இந்த காவ்யா தச்சிட்டு வந்தா? வெளிய போய் மாத்துவோம். அத்தான் பேப்பர் தான படிக்கிறாங்க", என்று நினைத்து கொண்டு வெளியே வந்து கட்டிலில் அமர்ந்து போட ஆரம்பித்தாள்.

அவள் உள்ளே போனதை கூட மறந்து, உள்ளே வந்து விட்டான் சூர்யா. நுழைந்தவனின் கண்ணில் பட்டது பளிச்சென்று இருந்த அவள் தொடை தான்.

வெண்ணையை குழைத்தது போல போல வழுவழு வென்று இருந்த இடத்தை பார்த்து பிரம்மித்து விட்டான்.

அப்போது தான் ஏதோ நிழலாட தலையை நிமிர்ந்து பார்த்தாள் கலைமதி.

அடுத்த நிமிடம் "ஐயையோ", என்று கூவி கொண்டே அருகில் இருந்த போர்வையை எடுத்து மூடி விட்டாள் கலை.

"நான் தெரியாம வந்துட்டேன் கலை. சாரி", என்றான் சூர்யா.

"ஹ்ம்ம் பரவால்லன்னா  சொல்ல முடியும்?", என்று நினைத்து கொண்டு தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

அவளிடம் இருந்து பதில் வராது என்று அறிந்து கதவை மூடி விட்டு சென்று விட்டான்.

"பாத்துட்டானோ? பாத்துட்டானோ?", என்று நினைத்து செக்க சிவந்து போனாள் மதி.

வெளியே போய் சோபாவில் விழுந்தவனுக்கு மனம் எல்லாம் அவன் பார்த்த இடமே நினைவில் வந்தது.

"அப்பா என்னா கலரு? தொட்டு பாத்தா எவ்வளவு மென்மையா இருக்கும்?", என்று நினைவே அவனை விதிர் விதிர்க்க வைத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.