(Reading time: 18 - 35 minutes)

சாதாரணமாக ஸ்காவட் வந்தாலே பதற்றம் தொற்றிக் கொள்ளும் மாணவர்களிடத்தில், இப்போது ஒருவன் கால்குலேட்டரோடு அகபட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. 

பச்சை தேவதையின் தைரியமான செயலில் காரணமேயில்லாது ஜெய்யின் நெஞ்சம் பெருமையில் பூரித்தது.

ஒருவழியாக பரீட்சையை முடித்து வெளியில் வந்தவன் அவளை பின்தொடர்ந்தான்.

யாரையும் கவனிக்காது புயலென கல்லூரி வளாகத்திலிருந்த மரத்தடியை நோக்கி சென்றவள், “அப்பா!” என்றபடி குதூகலமாக அணைத்துகொண்டாள்.

மகளின் தலையை வருடியவர், “எக்ஸாம் நல்லாயிருந்தது போல...சரயூக்கு இத்தனை சந்தோஷம்!” என்று ஊகத்தை சொல்ல...

கண்கள் மின்ன, “ம்ஹீம்...இன்னைக்கு ஒரு தப்பை தட்டிகேட்டாப்பா சரயூ” சாதித்துவிட்ட பெருமை குரலில் வழிய...ஆவலோடு தந்தையின் முகத்தை நோக்கினாள்.

“அப்படியா? என்ன தப்பை தட்டிகேட்டீங்க?” அவர் விசாரிக்க, நடந்தவற்றை கூறியவள், “நான் செய்தது சரிதானேப்பா?” என்று சிறு குழந்தையாக கேட்க....

“ரொம்ப சரிடா! நாம நல்ல வழில நடந்து...நாலு பேர நல்வழி படுத்துறது எப்பவுமே தப்பாகது” மகளை நல்லபடியாக வளர்த்திருக்கும் பெருமையோடு, “இதை செலிப்ரேட் செய்ய வேணாமா? என்ன வேணும் உனக்கு?” என்று கேட்டபடி தந்தையும் மகளும் காரில் ஏறிக்கிளம்பினர்.

அவர்கள் பேசுவது கேட்கும் தூரத்தில் நின்று அவளையே பார்த்திருந்த ஜெய்யின் மனம் மகிழ்ச்சியில் மிதந்தது. 

“ஜெய் குரங்கே! உனக்காக அங்க நானும் அப்பாவும் காத்திட்டிருக்கோம்.  இங்க தனியா நின்னு சிரிச்சுட்டிருக்க.  அப்பவே சொன்ன இந்த எக்ஸாமெல்லா வேணாம்னு.  கேட்காம மூனு மாசமா புக்கயே கட்டிக்கிட்டு அழுததுல உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு போல.  இரு நான் அப்பாட்ட சொல்ற” இவனை காணாது தேடி வந்த மைத்ரீக்கு தனியாக நின்று சிரிக்கும் நண்பனை பார்த்து பயம் பிடித்து கொண்டது.

“அப்படியெல்லா இல்ல மைதி! சொன்னா கேளு” என்று அவளோடு ஓடினான்.

“அப்பா....ஜெய்....” மூச்சு வாங்கியபடி அவள் சொல்வதற்குள் வந்து சேர்ந்தான் ஜெய்.

அவளிடமிருந்து சந்திரசேகரின் பார்வை இவனிடம் திரும்ப, “என்னாச்சு ஜெய்? எக்ஸாம் நல்லா எழுதின இல்ல” என்று சந்தேகாமாக கேட்டார்.

பக்கத்திலிருந்து அவன் உழைப்பை பார்த்திருந்தவருக்கு, ஒரு வேளை அவன் பரீட்சை சரியாக எழுதவில்லையோ? மனதிலெழுந்த பதற்றத்தை மறைத்து கேட்க...

“நல்லா எழுதியிருக்கம்பா! ப்ராக்டீஸ் பண்ணதால ஈஸியா இருந்ததுபா” என்றவன்... மறுபடியும் மைத்ரீ ஏதோ சொல்ல வருவதை அறிந்து,

“இன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா மைதி....?” கால்குலேட்டர் பயன்படுத்தி ஒருவன் பிடிபட்டதை சொல்லி அவள் கவனத்தை திசைதிருப்பினான்.

எல்லாவற்றையும் சொன்னவன் பச்சை தேவதையை பற்றி மட்டும் பேசவில்லை.

தேவதையின் பெயரும், சீருடையிலிருந்த கல்லூரி பெயரையும் கொண்டு முகநூலில் அவளை கண்டுபிடித்துவிட்டான்.  ஆனால் அவளோடு பழக நினைப்பது சரியா? பருவ வயதில் தடுமாற்றம் வருவது இயல்பென்றும் அதை எப்படி எதிர்கொள்வதென்றும் வடிவு போதுமான அறிவுரைகளை வழங்கியிருக்க...வயதை மிஞ்சிய அறிவு முதிச்சியும்...ஜெய்யை யோசிக்க வைத்தது.      

நாட்கள் செல்ல செல்ல சரயூவின் உதவிபுரியும் நல்ல குணம், தவறை கண்டும் காணாமல் போகும் மனிதர்களுக்கிடையில் தவறை எதிர்த்து நின்று தட்டி கேட்கும் அவள் தைரியம், புன்னகை பூத்த அழகான முகமும் ஆழமாக அவனுள் பதிந்துபோனது.

அடிக்கடி அவள் முகநூல் பக்கத்திற்கு சென்று பார்வையிடுவதும், அவளின் விருப்பு வெறுப்புகளை தெரிந்து கொள்வதும் என்று சரயூவை மனதில் ரகசியமாக ஒளித்து வைத்திருந்தான்.

காலம் அதன் பணியை செய்ய, காதல் மனதின் உந்துதலில் அவள் சேர்ந்த அதே கல்லூரியில் இஞ்சினியரிங்க் சேர்ந்து கொண்டான்.

Episode 27

Episode 29

முத்து ஒளிரும்…

{kunena_discuss:1038}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.