(Reading time: 11 - 21 minutes)

இப்போது மித்ராவிற்கே இவர் என்ன மாதிரி குணம் என்று புரியவில்லை. போனில் பேசுவதை வைத்து ஒருவரை புரிந்து கொள்ள முடியாது என்றாலும் கூட, ஒரு சில விஷயங்களில் ஆவது அவருக்கு அது பிடிக்கும் என்று உறுதியாக சொல்லுவார்கள். ஆனால் சரவணன் விஷயத்தில் மித்ராவிற்கு எதுவுமே புரியவில்லை.

இந்த எண்ணங்களோடு மித்ரா இருக்க, மற்ற எல்லோரும் உற்சாகமாக ஷாப்பிங் மூடில் இருந்தார்கள்.

றுநாள் காலையில் கல்யாண புடவை எடுக்க என்று நல்ல நேரம் பார்த்து , சிறியவர்களையும் அதே நேரம் ரெடியாக இருக்க சொன்னார்கள்.

முதல் நாள் இரவு ஷ்யாம் சென்னை வந்துவிட்டான். அவன் வருவது யாருக்குமே தெரியாது. அவன் வந்ததும் மைதிலிக்கு நிஜமாகவே தெம்பாக இருந்தது.

மித்ராவிடம் எதுவும் கேட்டு குழப்பவில்லை என்றாலும், பட்டும் படாமல் விசாரித்ததில் சரவணன் எந்த அளவிற்கு இவளுக்கு சூட் ஆவான் என்று கலக்கமாக இருந்தது.

இந்த நேரம் ஷ்யாம் வந்தது அவரின் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.

“மா.. என்னம்மா.. இவ்ளோ எமோஷன் ஆகறீங்க?

“ஒன்னும் இல்லை ஷ்யாம்.. சொல்ல தெரியல..  தட்ஸ் ஆல்.. நீ அத்தை வீட்டுக்கு இப்போ போறீயா ஷ்யாம்”

“மா.. மணி என்ன பாருங்க? காலையில் போறேன்”

“ஒஹ்.. ஆனா காலையில் எல்லோரும் மிதுக்கு புடவை எடுக்க போறோமே”

“இட்ஸ் ஓகேமா.. அப்போ நான் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு ஈவினிங் போறேன்”

“சரிப்பா.. இப்போ சாப்பிட்டியா? “

“ஹ்ம்ம். ஏர்போர்ட்லே சாப்பிட்டேன்.. நீங்க தூங்கிருப்பீங்கன்னு நினைச்சேன்..”

“தூங்கத்தான் கிளம்பினேன்.. என்னவோ யோசனையில் உக்கார்ந்துட்டேன். அப்புறம் பார்த்தா நீ வந்து நிக்கற”

“டாட் எங்கமா? “

“அப்பா .. இன்னிக்கு ஒரு பிசினஸ் டின்னெர் போய் இருக்காங்க.. வந்த்டுவாங்க”

“தாத்தா, பாட்டி எல்லாம் எப்படி இருக்காங்க? நம்ம சுமி வாலு எப்படி இருக்கா?’

“எல்லோரும் பைன்.. சரி நீ போய் ரெஸ்ட் எடு” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, ராம் வர,

“ஹேய்.. ஷ்யாம்.. எப்ப வந்தே?”

“ஜஸ்ட் கேம் டாட்”

“ஹொவ் வாஸ் தி ட்ரிப்? “

“ஹ்ம்ம். சூப்பர் ..”

“அங்கே பிசினஸ் எப்படி போகுது?” என்று ஆரம்பிக்க

“ஷ்.. ராம் போதும்.. ரெண்டு பேரும் இப்போதானே வரீங்க.. அவனும் ரெஸ்ட் எடுக்கட்டும்.. நீங்க நாளைக்கு பேசிக்கோங்க”

“சாரி ஷ்யாம்.. அம்மா சொல்றது கரெக்ட் தான்.. கோ அண்ட் டேக் ரெஸ்ட்”

“குட் நைட் மா, குட் நைட் டாட்..” என்று விட்டு தன் அறைக்கு வந்தவன், ரெப்ரெஷ் ஆகிவிட்டு படுத்து விட்டான்.

காலையில் எழுந்து வந்த சுமியிடம் ஷ்யாம் வரவை பற்றி சொல்ல, அவள் நேராக அண்ணனின் அறைக்கு சென்று அங்கிருந்த ஜக்கில் இருந்த தண்ணீரை அவன் முகத்தில் தெளித்தாள்

“ஹேய்.. குட்டி பிசாசு.. ஏண்டி இப்படி பண்ற”

“பின்னே .. ஊருக்கு போய் எத்தனை நாள் ஆச்சு.? எனக்கு இப்படி விளையாடா ஆள் இல்லாம பயங்கர போர்..”

“அதுக்கு இப்படிதான் பண்ணுவியாடி”

“சரி.. சரி .. சீக்கிரம் கிளம்பு.. இன்னிக்கு ஷாப்பிங் போறோம்’

“அடிபாவி.. நான் ஜெர்மன்லேயே உங்க எல்லோருக்கும் பர்சேஸ் பண்ணிட்டு வந்துட்டேன்.. சாயந்திரமா எடுத்து தரேன்”

“ஹா.. அது இங்கிருந்து ஜெர்மன் போனதுக்கு.. இப்போ ரிடர்ன் வந்துட்ட இல்லை.. அதுக்கு ஷாப்பிங் இப்போ பண்ணனும்”

“ஹேய்.. நான் பாவம்டி..”

“நீதான் நல்லா சம்பாதிக்கிறியே ? அப்புறம் என்ன?

“ஹா.. அதுக்காக .. இதுக்கு எல்லாம் நான் அந்த ரூல்ஸ் ராமானுஜம் கிட்டே கணக்கு சொல்லணும் “

“அது உன் தலைவலி.. சீக்கிரம் கிளம்பு.. இன்னைக்கு மிதுக்கு புடவை எடுக்க போறோம்.. பாவம் அவ உன் செலெக்ஷன்லே தான் திருப்தி ஆவ.. வந்து ஹெல்ப் பண்ணு” என

“சரி சரி வரேன்.. ஆனால் நான் வந்துருக்கேன்னு யார் கிட்டேயும் சொல்ல வேண்டாம் சரியா?

“சீன் போடாத அண்ணா.. கிளம்பி வந்து சேர் “ என்று விட்டு தன் வேலையை பார்க்க சென்றாள் சுமித்ரா.

ஷ்யாம் தன் அன்னை மைதிலி, மற்றும் தங்கை சுமியை அழைத்துக் கொண்டு கடைக்கு செல்ல, அங்கே அவனை சற்றும் எதிர்பார்த்திராத மித்ரா துள்ளி குதித்தாள்..

“ஹாய் ..அத்தான்.. கரெக்டா வந்துடீங்களே.. சப்பா.. இனிமேல் டிரஸ் செலெக்ஷன் பத்தி எனக்கு கவலை இல்லை.. “ என்று சந்தோஷமாக கூறுவதை, சற்று கடுப்போடு இரு கண்கள் பார்த்தது.

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.