(Reading time: 54 - 107 minutes)

முனா வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு சாத்தப்பட்டிருந்தது. “ஒருவேளை இளன் தூங்கிட்டாரா? என்று நினைத்து அவள் அதிர்ந்தாள். “பொண்டாடியை நைட் வீட்டுக்கு கூப்பிட்டா போதுமா? மனசுல இருக்க எதிர்பார்ப்பை உணர்த்த வேண்டாமா?” என்று திட்டியப்படியே, கதவைத் தட்டினாள்.

சில நிமிடங்களுக்கு பிறகு கதவு திறக்கப்பட்டது. ஆனால் இளங்கோவை காணவில்லை. அதுமட்டுமில்லாமல், வீட்டின் உள்ளே இருள் சூழ்ந்திருந்தது. பக்கத்து வீடுகளில் வெளிச்சமாக  இருக்க, “இங்கு மட்டும் கரண்ட் இல்லையா? இளன் எங்கே சென்றார்?” என்று நினைத்தப்படியே, அலைபேசியை உயிர்பித்து அந்த வெளிச்சத்தில் வீட்டுக்குள் நுழைந்தாள். “இளன்.. இளன்..” என்று குரல் கொடுத்து பார்த்தால், ஆனால் அவனை காணவில்லை..  “இளன் விளையாடாதீங்க.. எங்கே இருக்கீங்க நீங்க?” என்றப்படி படுக்கை அறை கதவை திறந்த போது, திடிரென விளக்குகள் உயிர்ப்பெற்றது. அதற்குள் அவனோ அவளை தூக்கியிருந்தான். அவள் திகைப்பில் இருக்கும் போதே அவளை அறைக்குள் அழைத்துச் சென்றான். அந்த அறையை பார்த்து அவள் இன்னும் திகைத்தாள்.

“ஓ இதுக்கு தான் என்னை விட்டிட்டு முன்ன ஓடி வந்துட்டீங்களா? தெரிஞ்சிருந்தா அடம்பிடிச்சாவது அங்கயே தங்கியிருப்பேனே..”

“அடப்பாவி..  இந்த அப்பாவி புருஷன்க்கிட்ட உனக்கு இரக்கமே இல்லையா?”

“யாரு அப்பாவி.. சரியான ஃப்ராட்..  எனக்கு தெரியாம என்னல்லாம் ப்ளான் போட்ருக்கீங்க.. கொஞ்சமாவது எனக்கு புரியற மாதிரி காமிச்சிக்கிட்டிருந்தா..  நான் அங்க பல்ப் வாங்காம இருந்திருப்பேன்ல்ல..” என்று அவள் பாவமாக கூற, “ஹாஹா” என்று சத்தமாக அவன் சிரிக்க,

“சிரிக்காதீங்க..” என்று அவன் வாயை அவள் கைகளால் மூட,

“கையால வாயை மூடினதுக்கு பதிலா..” என்று சத்தமாக கூறியவன், பின்பு அவள் காதில் கிசுகிசுக்க,

“அப்பாவியா நீ.. அடப்பாவி..” என்று அவனை அவள் செல்லமாக அடிக்க, அவள் காதில் கிசுகிசுத்ததை, இப்போது செய்கையால் செயலாற்ற தொடங்கினான்.

குட்டி போட்ட பூனை போல் அறையிலேயே செல்வா சுத்தி சுத்தி வந்துக் கொண்டிருந்தான். அறையின் அலங்காரத்தை பார்த்தும் ஒன்றும் சொல்லாமல் போனவளை நினைத்து நொந்து நூடுல்ஸ் ஆகிக் கொண்டிருந்தான். எதற்கு வந்தாள்? இப்போது வெளியில் எதற்கு போயிருக்கிறாள்? இவ்வளவு நேரம் என்ன செய்கிறாள்?  வெளியில் சென்று பார்க்கலாமா? என நினைத்து பின்பு வேண்டாமென்று விட்டுவிட்டான். முன்பானால் வீட்டில் அம்மாவும் விஜி அத்தையும் சீக்கிரம் உறங்கிவிட இவர்கள் இருவர் மட்டும் தான் இருப்பார்கள். இப்போதோ கங்கா அண்ணியும் வாணி அக்காவும் அவளோடு இருக்கிறார்கள். வாணி அக்கா வேறு அறை வரைக்கும் வந்தவர், அப்படியே நின்றுவிட்டார். அவர் உள்ளே வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும். ஒருவேளை அவர் கண்டுப்பிடித்திருப்பாரோ.. இப்படியெல்லாம் நினைத்து குழம்பிக் கொண்டிருக்கும் போதே, அறை கதவு தட்டப்பட்டது.  

“ஹப்பா ஒரு வழியா வந்தாளே..” என்று மகிழ்ச்சியோடு சென்று கதவை திறந்தவன், அங்கே அழகிய அப்சரஸ் போல நின்றிருந்த மனைவியை பார்த்து மயங்கி விழாத குறை தான்.. அவன் நின்றிருந்த நிலையை பார்த்து சிரித்தப்படியே நர்மதா உள்ளே வந்தாள். அதன்பின் தான் வேறு லோகத்திலிருந்து இந்த லோகத்திற்கு வந்தவன், அடுத்த நொடி அவளை தன் அணைப்புக்குள் கொண்டு வந்தான்.

“மது.. கொஞ்ச நேரம் என்ன தவிக்க விட்டுட்ட தெரியுமா? கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அலங்காரத்தை பார்த்துட்டு ஒரு ரியாக்‌ஷனும் காட்டாம மனுஷனை பாடாய் படுத்திட்டியே..”

“ஹலோ நான் யாரு..? நர்மதா ரிஷப செல்வன்.. எனக்காக நீங்க இவ்வளவு கூட மெனக்கிடலன்னா எப்படி?”

“அதுக்காக இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட் இருக்கா.. இல்லையான்னு யோசிக்க வச்சிட்டியே செல்லம்..”

“ம்ம் நீங்க மட்டும் தான் எனக்கு சர்ப்ரைஸ் கொடுப்பீங்களா? நாங்களும் கொஞ்சம் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான்..”

“நல்லா கொடுத்த போ..” என்று அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

“ரிஷப் என்னை நீங்க காதலிக்கிறீங்க தானே..”

“என்ன கேள்வி இது மது..”

“அது என்னால இப்போ கூட நம்ப முடியல.. உங்கக் கூட எனக்கு கல்யாணம் நடக்கும்.. என்னை நீங்க இவ்வளவு அளவுக்கு காதலிப்பீங்க.. இதெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்ல.. நமக்குள்ள எல்லாமே அந்த காலேஜ் காம்பஸ்ல என்னோட காதலை நீங்க நிராகரிச்சப்பவே முடிஞ்சு போச்சுன்னு தான் நான் நினைச்சேன்..”

“ம்ம் உண்மை தான் மது.. அப்போ எனக்கு அப்படி ஒன்னும் தோனல.. ஆனா அதுக்க்குப்பிறகு உன்னை நான் ரொம்பவே மிஸ் பண்ணேன்.. இனி என்னோட நீ வர மாட்டியோன்னு எவ்வளவு வேதனைப்பட்டேன் தெரியுமா? இப்போ என்னோட மனைவியா நீ என்னோட இருக்க.. என்னால நம்பவே முடியல..”

“ரிஷப் உங்களுக்கு இப்போ என்னோட காதல் மட்டும் தானே தெரியுது.. நான் உங்க பணத்துக்காக உங்களை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்னு நீங்க நினைக்கலல்ல..”

“எங்க வந்து என்ன பேசற மது.. இன்னும் உனக்கு சந்தேகமா? நான் உன்னை அப்படி தப்பா நினைக்கலன்னு எப்படி நிரூபிக்கிறது?”

“இன்னும் ரொம்ப பேசி போரடிக்காம, ஆக்‌ஷன்ல இறங்கினா நம்பறேன்..” என்று கண்ணடித்தாள்.

ஏதோ சீரியஸாக சொல்ல போகிறாள் என்று எதிர்பார்த்தவன், அவளின் இந்த பதிலை கேட்டு ஆ வென்று வாயை பிளந்தான்.

“நீங்க யாரு நர்மதா ரிஷப செல்வன் என்பதை கொஞ்ச நேரத்துல மறந்துட்டேன்.. சான்ஸே இல்லை மது..” என்றவன் அடுத்து ஏதாவது வாயை திறப்பான். நேரடியாக களத்தில் இறங்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.