(Reading time: 54 - 107 minutes)

“என்னது நாங்க குழந்தைங்களா? அக்கா இது உங்களுக்கே ஓவரா இல்லையா? எல்கேஜி குழந்தை கூட ஒழுங்கா ஸ்கூலுக்கு போயிடும்.. ஆனா டெய்லி ஆஃபிஸ்க்கு போக துஷ்யந்த் மாமா செய்ற அலைப்பறையை நாங்க கண்டும் காணாமலும் இருக்கிறதால இதுவும் சொல்வீங்க.. இதுக்கும் மேலேயும் சொல்வீங்க..” என்று நர்மதா கூறும்போதே, கங்காவின் அலைபேசி அழைத்தது.

அதில் துஷ்யந்த் என்ற பெயரை பார்த்த நர்மதா.. இதோ இன்னும் ஆஃபிஸ் போய் சேர்ந்தாங்களான்னு தெரியல.. அதுக்குள்ள போன்..” என்று சொல்லப்படியே அழைப்பை ஏற்று நர்மதா அதை ஸ்பீக்கரில் போட்டாள்.

“கங்கா..”

“சொல்லுங்க மீட்டிங்கிற்கு போகல..’

“ அது கிளையண்ட் இன்னும் வரல.. அதான் மீட்டிங் கேன்சல் ஆயிடுச்சு.. அதான் உன்கிட்ட பேசிட்டு இருக்கலாம்னு போன் செஞ்சேன்..”

“நானும் நர்மதாவும் இப்போ ஹாஸ்பிட்டல் போறோம்.. உடனே ஸ்கூலுக்கு வேற போகணும்..’

“ஓ அப்போ மதியம் மீட்டிங் முடிஞ்சதும் பேசறேன்..”

“மதியம் ரிஜிஸ்டர் ஆபிஸ் போகணும்னு நேத்தே சொன்னேனே..”

“அப்போ மீட்டிங் முடிஞ்சதும் நான் அங்க வரேன்..” என்று துஷ்யந்த் சொன்னதும், இங்கே எல்லோரும் சிரித்தனர். தன்னைக் குறித்து கங்காவை கேளி செய்கிறார்கள் என்று உணர்ந்து அவன் அலைபேசியை அணைத்தான். கங்கா வெட்கத்தோடு நின்றிருக்க, அப்போது நர்மதாவிற்கு செல்வாவிடம் இருந்து அழைப்பு வந்தது. யமுனா அந்த அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட,

“மது.. மீட்டிங் மதியம் தான், அதனால நீ அண்ணிக் கூட ஹாஸ்பிட்டல் வா.. நான் இப்படியே ஹாஸ்பிட்டல் வரேன்.. இந்த முறை உன்கூட செக்அப்க்கு வர முடியலையேன்னு மனசுக்கு கஷ்டமா இருந்தது.. இப்போ தான் நிம்மதியா இருக்கு..” என்று பேசிவிட்டு செல்வா அழைப்பை துண்டிக்க, இப்போது வெட்கப்படுவது நர்மதா முறையானது.

“என்னோட பிள்ளைங்க மத்ததுல அவங்க அப்பா மாதிரி இருக்காங்களோ இல்லையோ.. ஆனா பொண்டாட்டியை பார்த்துக்கிறதுல அப்படியே அவங்க அப்பா தான்..” என்று கோமதி பெருமையோடு சொல்ல,

“ஆஹா அத்தை மாமாவை பத்தி சொல்லுங்க” என்று வெளியில் கிளம்பிய நர்மதா அப்படியே உட்கார்ந்து கதை கேட்க ஆயத்தமாக,

“அய்யோ நான் சொல்ல மாட்டேன்..” என்று கோமதி வெட்கப்பட அங்கே சிரிப்பு சத்தம் பெரிதாக கேட்டது.

அலையென பொங்கும் அவனது நேசம்..

நதியென பெருகும் அவளது நேசம்..

அவள்(ன்) நேசமதே.. என்றென்றும்

அவன்(ள்) சுவாசமாய்!!

கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஒன்பது மாசம் இந்த கதையோடு பயணித்து இன்று இந்த கதை நிறைவுப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணருகிறேன்.. ஏனென்று கேட்கிறீர்களா? இன்று எனது பிறந்தநாள்.. இனி அடுத்து வரப் போகும் ஒவ்வொரு பிறந்தநாளிலும் இந்த கதையின் நிறைவு நாளும் அதனோடு சேர்ந்து பயணிக்கும்.. என் மனதிற்கு மிகவும் நெருக்கமான கதை இது.. செல்வா, நர்மதாவிற்கு என்று கூடுதல் காட்சிகள் சேர்த்ததை தவிர, கதை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை கதையை நான் ஆரம்பிப்பதற்கு முன்பே யோசித்து வைத்திருந்தேன்.. சின்ன சின்ன மாற்றங்கள் தவிர்த்து நான் நினைத்தது போல் தான் கதை அப்படியே வந்தது. அதை நீங்களும் அப்படியே ஏற்றுக் கொண்டீர்கள்.

இந்த கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து கருத்து பகிர்ந்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி..  ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் இவர்களின் கருத்து கண்டிப்பா வந்துவிடும் அப்படி எதிர்பார்ப்பை ஜான்சி, மதுமதி, தமிழ் தென்றல், தேன்மொழி, தேவி, சாஜு,சாரு இந்த வாசகர்களெல்லாம் பொய்யாக்க மாட்டாங்க.. அப்பப்போ வந்தாலும் அன்னி ஷரன், நசீபா, பிந்து வினோத், நந்தினி, அனு இவர்களின் கருத்து உண்மையிலேயே என்னை மகிழ்ச்சி கடலில் தள்ளிவிடும்..

தளத்தில் மட்டுமில்லாமல் முகநூலிலும் சில தோழிகள் அவர்களோட கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர். இந்த கதை ஆரம்பித்து பாதி கதை வந்த நிலையில் உடல் மற்றும் மனம் சோர்ந்து போய் சும்மா ஏமாற்றாமல் அத்தியாயம் கொடுக்க வேண்டுமே என்று இரண்டு மூன்று பக்கங்கள் மட்டும் எழுதிக் கொண்டிருந்த எனக்கு கங்கா என்ற தோழியின் கருத்து மீண்டும் புத்துணர்ச்சியை வர வைத்தது. அவர் கேட்டுக் கொண்டதால் தளத்திலும் முகநூலிலும் டீஸரை பகிர்ந்துக் கொண்டேன். அதற்கு அவருக்கு உண்மையிலேயே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்..

ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் சிட்டுவேஷன் பாட்டு பகிரும் ராணி, ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் விடாமல் முகநூலில் கருத்து பகிர்ந்துக் கொள்ளும் அனாமிகா, நம்ம கங்கா காணாமல் போனப்ப நம்ம வாணி துடிச்சதோட அதிகமா துடிச்ச வாணி சிஸ்.. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் இவர்களோட லைக்கும், கதைப்பற்றிய விஷயங்களுக்கு இவர்களின் ஊக்கமும் இருக்கும்.. அப்படி என்னை ஊக்கப்படுத்திய சங்கீதப் பிரியா, பிரியா, சித்ரா, காந்திமதி, கீர்த்தனா, தீபிகா, அருணா, யுகினா, துரை செல்வி மற்றும் இன்னும் நிறைய தோழிகள், அடுத்து என்னோட குடும்ப உறுப்பினர் சிலர் மற்றும் நண்பர்கள் சில பேர் கூட இந்த கதையோட பயணிச்சாங்க.. (சீக்கிரம் முடின்னு என்னை மிரட்டி கூட இருக்காங்க).

 அடுத்து இந்த கதைக்கு நிறையவே ஆதரவு கொடுத்த சில்சீ குழு, போட்டியெல்லாம் வைத்து என்னை உற்சாகப்படுத்தினாங்க.. நான் கேட்ட எதுக்குமே மறுக்காம என்னோட ஒவ்வொரு முயற்சியையும் ஊக்கப்படுத்துவாங்க.. இப்படி என்னோடும் இந்த கதையோடும் பயணித்த உங்கள் அனைவருக்குமே என்னுடைய ஆத்மார்த்தமான நன்றிகள். (யார் பேரையாவது விட்டிருந்தா மன்னித்துக் கொள்ளுங்கள்.) அடுத்து உங்களை இதே ஸ்லாட்டில் மையலில் மனம் சாய்ந்த வேளை என்ற கதையோடு சந்திக்க வருகிறேன். நன்றி. 

சுபம்

Episode # 42

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.