(Reading time: 54 - 107 minutes)

று மாதங்களுக்குப் பிறகு,

கங்காவும் வாணியும் சமையலறையில் காலை உணவை தயார் செய்துக் கொண்டிருந்தனர். இன்று முக்கியமான மீட்டிங் என்பதால் துஷ்யந்த் காலையில் விரைவாக எழுந்து அன்றைய மீட்டிங்கிற்கான வேலையில் மடிக்கணினியில் மூழ்கியிருந்தவன் நடு நடுவே அருகில் கட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த தன் மகன் மீதும் ஒருப்பார்வையை பதித்திருந்தான். அம்மா எழுந்ததுமே உடன் எழுந்து கொண்ட குழந்தை கட்டிலில் கவிழ்ந்தப்படி பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருந்தான்.

பிறந்து பத்து நாளே ஆன குழந்தை பால் குடித்துவிட்டு மடியிலே உறங்கி விட, அந்த நேரம் பார்த்து அலைபேசியில் இளங்கோவிடம் இருந்து அழைப்பு வந்தது. அலைபேசியை சைலண்ட் மோடில் போட்டிருந்ததால், குழந்தையை கிழே கட்டிலில் படுக்க வைத்து விட்டு, கொஞ்சம் தள்ளி சென்று  அலைபேசி அழைப்பை ஏற்றாள் யமுனா.

“சொல்லுங்க இளன்..”

“குட்டிம்மா என்ன செய்றா?’

“ம்ம் இப்போ தான் குட்டிம்மா துங்கினா..”

“ம்ம் எப்போ 3 மாசம் முடியுமோன்னு இருக்கு.. எப்போ என்னோட மகாராணியும் இளவரசியும் வீட்டுக்கு வருவீங்கன்னு எதிர் பார்த்துக்கிட்டு இருக்கேன்..”

“அதுக்கு தான்.. வாணிம்மாவை கூட  வச்சிக்கிட்டு குழந்தை பிறந்ததும் நான் நம்ம வீட்டிலேயே இருக்கேன்னு சொன்னேன். நீங்க தான் வேண்டாம்னு சொன்னீங்க..”

“கங்காவுக்கு உன்னோட ஹார்ட் ஆபரேஷன் அப்பவே உன்கூட இல்லாதது ஒரு குறை.. அதான் இப்போ அவ உன்கூட இருந்து உன்னை கவனிச்சக்கணும்னு நினைச்சேன்.. அதுமட்டுமில்ல கங்கா குழந்தையோட இருக்கா.. நர்மதாவுக்கும் எப்போ வேணா குழந்தை பிறக்கலாம்.. இந்த நேரம் வாணிம்மாவை நம்மக் கூட கூப்பிட்டுக்கிட்டா எப்படி சொல்லு..”

“அதுக்கு தான் இளன் நானும் இங்க இருக்க சரின்னு சொன்னேன்.. 3 மாசம் கண்ணிமைக்கறதுக்குள்ள ஓடிடும்.. ஆமாம் என்ன பேர் வைக்கலாம்னு மாமாக்கிட்ட கேட்டீங்களா?”

“அப்பா குலதெய்வம் பேரை முதலில் கூப்பிட்டிருவோம்.. அப்புறமா நல்ல பேரா நம்மளையே செலக்ட் செஞ்சுக்க சொல்லிட்டாரு.. எனக்கென்ன யோசனைன்னா.. என்னை சுத்தி அம்மால இருந்து நீ, நர்மதா, அண்ணா பொண்ணு சரஸ்வதினு எல்லாம் நதி பேரா இருக்கறதால நம்ம குட்டிம்மாக்கும் நதி பேரையே வச்சிடுவோம்..”

“நல்ல ஐடியா இளன்.. நதி பேர்னா புதுசா ஏன் பேர் தேடணும்.. பேசாம காவேரின்னு உங்கம்மா பேரையே வச்சிடுவோமே..”

“ம்ம் சூப்பர் யம்ஸ்.. அதையே வச்சிடுவோம்.. பங்ஷன் எப்போ வைக்கலாம்னு நான் சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும் பேசிக்கலாம்.. இப்போ பதிப்பகத்துக்கு நேரமாச்சு..” என்று அலைபேசியை அணைத்தான்.

செல்வாவும் தன் அறையில் இருந்தப்படி தன் அண்ணனுடன் மீட்டிங் கலந்துக் கொள்வதற்காக மடிக்கணினியில் வேலை செய்துக் கொண்டிருந்தான். அப்போது நிறை மாத வயிற்றை தாங்கியப்படி செல்வாவிற்கு நர்மதா டீ எடுத்துக் கொண்டு வந்தாள். அதை கையில் வாங்கி மேசையில் வைத்தவன், அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.

“உன்னை எந்த வேலையும் செய்யாம ரெஸ்ட் எடுக்க சொன்னேன் இல்ல மது..’

“ இது ஒரு வேலையா ரிஷு.. டீ அக்கா தான் போட்டாங்க.. அதை எடுத்துக்கிட்டு மட்டும் தான் வந்தேன்..”

“இருந்தாலும் கேர்ஃபுல்லா இருக்கணும் மது..” என்றப்படி டீயை பருகியவன், முகத்தை சுழித்தான்.

“ஹே இன்னும் நீ இந்த பழிவாங்கும் படலத்தை விடலையா? டீ காரமா இருக்கு.. அதுல என்னத்தை போட்ட..” என்று கேட்டதும், அவன் தலையில் தட்டியவள்,

“நைட்டெல்லாம் இருமிக்கிட்டே இருந்தீங்களேன்னு இஞ்சி தட்டி நானே டீ போட்டு எடுத்துக்கிட்டு வந்தா..” என்று பாதியிலேயே நிறுத்தியவள், தான் உளறியதை நினைத்து நாக்கை கடித்துக் கொண்டாள்.

“மது எப்போ வேணாலும் டெலிவரி நடக்கலாம்.. இந்த நேரம் நீ ஜாக்கிரதையா இருக்கணும்.. நீ உங்க அம்மா வீட்டுக்கு போனா சும்மான்னு இருக்க மாட்டேன்னு தான், உன்னோட வளைகாப்பு முடிஞ்சு கூட உன்னை உங்க வீட்டுக்கு அனுப்பல.. இருந்தும் நீ இப்படி செஞ்சா என்ன அர்த்தம்?” என்று கோபப்பட்டான்.

“அய்யோ ரிஷு.. ஒரு டீ போட்றதால என்னாக போகுது.. டெலிவரி டைம்ல அப்படியே உக்கார்ந்திருக்காம.. இப்படி சின்ன சின்ன வேலை செய்யணும் ரிஷு..”

“சரி கேர்ஃபுல்.. அப்புறம் இந்த மீட்டிங்கை நான் கண்டிப்பா அட்டண்ட் பண்ணனும்.. இது பெரிய டீல்..  உன்கூட இன்னைக்கு செக்அப்க்கு வர முடியாது.. அதனால அண்ணியோட ஜாக்கிரதையா போயிட்டு வா.. டாக்டர் உடனே அட்மிட் ஆக சொன்னாலும் அட்மிட் ஆயிடு.. நான் மீட்டிங் முடிஞ்சதும் உன்னை வந்து பார்க்கிறேன்..” என்று குழந்தைக்கு சொல்வதை போல் சொல்ல அவளும் தலையாட்டி கேட்டுக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.