(Reading time: 54 - 107 minutes)

இதுவரை பொம்மைகளை பார்த்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கட்டிலையே ஒரு சுற்று சுற்றி வந்து அருகில் இருந்த தந்தை முகத்தை பார்த்ததும் தூக்கச் சொல்லி அழுதான். உடனே வேலையை அப்படியே விட்டுவிட்டு குழந்தையை தூக்கி சமாதானம் செய்த துஷ்யந்த்.. “உங்க அம்மா நம்ம ரெண்டுப்பேரையும் கண்டுக்கிறதே இல்லடா செல்லம்..” என்று பேசிக்கொண்டிருக்க,

“ஆமாம் அப்பாவும் பையனும் கண்டுக்கலன்னா சும்மா இருப்பீங்களா? ஊரை கூட்டிட மாட்டீங்க..” என்று கூறியப்படியே வந்த கங்கா.. குழந்தையை துஷ்யந்த் கையில் இருந்து வாங்கிக் கொண்டவள், “நீங்க ஆஃபிஸ்க்கு ரெடியாகுங்க.. நான் இவனுக்கு சாப்பாடு ஊட்டிட்டு வரேன்..” என்று சொல்லிவிட்டு குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள். அங்கே ஏற்கனவே கோமதியும் விஜியும் அமர்ந்திருக்க, அப்போது தான் நர்மதாவும் யமுனாவும் அவர்களோடு வந்து அமர்ந்தனர். கங்கா கையில் இருந்த குழந்தை இரண்டு சித்தியையும் பார்த்ததும் அவர்களிடம் தாவிக் கொண்டு சென்றது.

குழந்தைக்கு விளையாட்டு காட்டியப்படியே சாப்பாடு ஊட்டிக் கொண்டிருக்க, துஷ்யந்த் அறையிலிருந்தப்படியே கங்காவை அழைத்தான். இது வழக்கமாக நடக்க கூடிய ஒன்று என்பதால், “அக்கா பரத்க்கு நாங்க சாப்பாடு ஊட்றோம்.. நீங்க போய் மாமாவை பாருங்க..” என்று நர்மதா சொல்ல, யமுனா குழந்தையை மடியில் வைத்துக் கொண்டாள். நர்மதா சாப்பாடு ஊட்டினாள்.

“இப்போ எதுக்கு இப்படி கத்தறீங்க..” என்று கங்கா அறைக்குள் வந்தாள்.

“ஆஃபிஸ் கிளம்பறது தெரியாதா கங்கா..”

“எனக்கு தெரியுது.. உங்க பையனுக்கு தெரியலையே.. அவன் சாப்ட்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுது.. அவனுக்கு எல்லோரும் கும்பலா ஆளுங்க இருக்கணும்னு எதிர்பார்க்கிறான்.. அப்போ தான் சாப்பிட்றான்..”

“இருக்கட்டும் என்னை மாதிரி தனிமையில் இல்லாம என்னோட பையன் சொந்தபந்தம்னு எல்லோரோடவும் வளறனும்..”

“என்ன தனிமை.. இப்படியெல்லாம் பேசாதீங்க.. உங்க மேல எல்லோரும் எப்போதும் அன்பும் பாசமும் வச்சிருக்காங்க..”

“நான் எப்போ இல்லன்னு சொன்னேன்.. அதை சின்ன வயசுல புரிஞ்சிக்காம ஒதுங்கியே இருந்துட்டேன்.. மத்தப்படி எக்லோருக்கும் என்மேல அன்பு இருக்கு.. அதுக்கும் மேல எல்லாமுமா என்னோட கங்கா இருக்கப்போ என்ன கவலை..” என்றுக் கேட்டு அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டான்.

“இதெல்லாம் நல்லா பேசுங்க.. இது என்ன கெட்டப்பழக்கம்.. நான் ஆல் தி பெஸ்ட் சொன்னதும் தான் ஆஃபிஸ்க்கு கிளம்புவேன்னு சொல்றது.. உங்க திறமையில் தான் எல்லாத்தையும் நீங்க வெற்றிகரமா முடிக்கிறீங்க அதை தெரிஞ்சுகோங்க..”

“இருந்தாலும் உன்னோட வார்த்தை தான் என் எனர்ஜி பூஸ்டர்.. எங்க ஆல் தி பெஸ்ட் சொல்லு..” என்றதும் அவன் கன்னத்தில் இதழ் பதித்து அவள் ஆல் தி பெஸ்ட் சொல்ல,

“இன்னைக்கு பெரிய டீல் சைன் செய்ய வேண்டியிருக்கு ம்மா.. அதனால இதெல்லாம்.பத்தாது என்றவன், அவளது இதழை சிறை செய்தது மட்டுமில்லாமல் சில சில்மிஷங்கள் செய்து தான் அவளை விடுவித்தான்.

ஆடைகளையும் தலைமுடியையும் சரி செய்துக் கொண்டு வந்தாலும், கங்காவின் வெட்கச் சிவப்பை மறைக்க முடியவில்லை. அதைப்பார்த்து நர்மதாவும் யமுனாவும் புன்னகைத்துக் கொண்டனர். பின் துஷ்யந்தும் செல்வாவும் செல்ல மனமில்லாமல் அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றனர்.

சிறிது நேரம் கழித்து கங்கா நர்மதாவை செக்அப்பிற்கு அழைத்து செல்வதற்காக  போகலாமா நர்மதா என்று கேட்க, நர்மதா செல்வா வரவில்லையே என்று செல்லம் கொஞ்சினாள்.

“ஏ நர்மதா.. இது உனக்கே ஓவரா இல்லையா? இந்த ஒரு செக்அப்க்கும் மட்டும் தான் மாமாவால வர்அ முடியல.. அதுக்கு ரொம்ப தான் ஓவரா பண்ற..” என்று யமுனா கேளி செய்ய,

“ஆமாம் இளங்கோ அண்ணா வேலையை விட்டுட்டு உன்னை பார்க்க ஓடி வந்தா.. எதுக்கு இளன் டெய்லி வேலை நேரத்துலேயும் கஷ்டமா வர்றிங்க.. ஒருநாள் விட்டு ஒருநாள் வாங்கன்னு சொல்லிட்டு, அன்னைக்கு சாயந்திரமே வாசலையே பார்ப்பியே அப்போ சொல்றேன் இந்த வார்த்தையை..” என்று பதிலுக்கு நர்மதா அவளை கேளி செய்தாள். அதை கங்கா சிரிப்போடு பார்த்தப்படி நின்றிருந்தாள்.

“அத்தை நாங்க ஹாஸ்பிடலில் இருந்து அப்படியே ஸ்கூல் போயிட்டு தான் வருவோம்.. பிரின்ஸிபல் வர சொல்லியிருந்தாங்க.. அப்புறம் நர்மதாவை கூட்டிட்டு வந்து விட்டிட்டு நான் ரெஜிஸ்டர் ஆஃபிஸ்க்கு போயிடுவேன்.. என்னோட அந்த வீட்டை ரம்யாவோட கல்யாணப் பரிசா கொடுக்க முடிவு செஞ்சிருக்கோம்.. அதனால இளங்கோவும் ரம்யாவும் எனக்காக வெய்ட் பண்ணுவாங்க அத்தை.. நான் வர வரைக்கும் இந்த 3 குழந்தைங்களை பத்திரமா பார்த்துகோங்க..” என்றாள் கங்கா..

“என்னது 3 குழந்தையா?” என்று அனைவரும் கேள்வியாக பார்க்க,

“ரெண்டு குழந்தைங்களை கூட சமாளிச்சிடலாம் அத்தை.. இந்த குழந்தை தான் நான் இல்லாததால பத்திய சாப்பாடு சாப்பிட அடம்பிடிக்கும்.. அதனால் 3 பேரும் இந்த குழந்தையை பத்திரமா பார்த்துகோங்க..” என்று யமுனாவை காட்டி சொன்னவள், “இந்த குழந்தையை நான் பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வரேன்..” என்று நர்மதாவை காட்டி கூறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.