Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 15 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 15 - சசிரேகா

Nodikkoru tharam ennai ninaikka vaithaai

அன்று

2002

திலோவும் சித்தார்த்தும் சுதந்திர பறவைகள் போல சந்தோஷமாக ஜோடியாக சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை கேள்வி கேட்பதற்கு மகாதேவன் இல்லை, தாத்தாவும் மனதளவில் திலோவை ஏற்றுக் கொண்டதால் அவரும் சித்தார்த்தின் செயல்களை தடை செய்யவில்லை.

கடந்த 3 வருடங்களாக சித்தார்த்தின் நிழல் போல மாறினாள் திலோத்தமா. சித்து எங்கு சென்றாலும் அவளை அழைத்துச் செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டான். 2 வருட விடுமுறையின் போதும் அவளுக்கு பாட்டு க்ளாஸ், டான்ஸ் க்ளாஸ் என சேர்த்துவிட்டான். அவளும் அனைத்து கலைகளிலும் சிறந்தவளாக தேறினாள். அவளை அழகாக தனக்கேற்ப செதுக்க ஆரம்பித்தான்.

குழந்தை குரலில் அவள் பாடும் கர்நாடக சங்கீதப் பாடலை கேட்க பாட்டிக்கும் தாத்தாவுக்கும் மிகவும் பிடித்திருந்தது. சித்து அவளுக்கு ஆங்கில பாடல்களை வேறு கற்றுக்கொடுத்தான்.

”ஏய் டால் ஒரு பாட்டு பாடு” என சித் கேட்க அவளும் ஒரு அழகான கண்ணன் பாடலை பாட கத்தினான்

”இந்த பாட்டு வேணாம், இங்கிலீஷ் சாங் பாடு” என சொல்ல அவளும் பாடினாள். 4 வரி பாடி முடிப்பதற்குள் அவளிடம்

”இது வேணாம் நீ முதல்ல பாடினியே கண்ணன் பாட்டு அதையே பாடு” என சொல்லிவிட்டு மெத்தையில் படுத்துக் கொள்ள அவளும் பாடினாள். அதை கேட்டபடியே உறங்க ஆரம்பித்தான். இப்போதெல்லாம் அவள் பாடும் பாடலே சித்துவுக்கு தாலாட்டுப் பாடலாகி போனது. தினமும் அவள் பாடி அவனை உறங்க வைத்தாள்.  

நடனத்தை முறையாக கற்றுக் கொண்டு வந்தாள். அதனால் தினமும் அவள் டான்ஸ் கூட பிரமாதமாக ஆடினாள். தாத்தாவிற்கும் பாட்டிக்கும் பொழுது நன்றாகவே ஓடியது. அவளது இனிய குரலில் அவளே பாடி அதற்கு ஏற்ப அவள் நடனமாடுவது பார்க்கவே ஆனந்தமாக இருந்தது. வயதான காலத்தில் இப்படியொரு இன்பமான நிகழ்வுகள் பார்க்க பார்க்க இருவருக்கும் இளமை திரும்பிக் கொண்டிருந்தது. தங்கள் வயதையும் மறந்து சிறு குழந்தைகளுடன் சிறு பிள்ளைகள் போல விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.

அவ்வப்போது திலோவின் ஆடலையும் பாடலையும் மகாதேவனும் பார்வதியும் பக்கத்து வீட்டிலிருந்து எக்கி எக்கி பார்த்து ரசித்தனர்.

எப்படியோ திலோ 5-ம் வகுப்பு பரீட்சையை வெற்றிகரமாக எழுதி விட்டாள். சித்தார்த் கூட கான்வென்ட்டின் கடைசி வகுப்பிற்கான பரிட்சையும் எழுதிவிட்டான். முழு ஆண்டு லீவு வந்தது.

இப்பொழுது சித்தார்த்தின் வயது 16 என்பதால் அந்த வயதிற்குண்டான வளர்ச்சியில் இருந்தான். நல்ல உயரமாக இருந்தான்.

உயரத்திற்கு ஏற்ப எடையுடன் இருந்தான். இயற்கையிலேயே வெண்மை நிறமும் தினமும் ஜிம்முக்கு செல்வதால் உடம்பை நல்லக் கட்டுக்கோப்பாக திம்மென்று வைத்திருந்தான். தன் உடைகளையும் மாற்றினான். நடை உடை பேச்சு அனைத்தும் அவன் வளர வளர மற்றவர்களுடன் பழகி பழகி விரைவாகவே மாறியது.

அவனின் முகத்தில் இருக்கும் அந்த பணக்காரக்களை இன்னும் மெருகேறியது. அதிலும் திலோவிற்காக மற்றவர்களிடம் அதிகாரமாக பேசும் போது இன்னும் அவன் முகம் பிரகாசமாக தெரிய ஆரம்பித்தது.

திலோவிடம் இருக்கும் நேரத்தைக் கடந்து மற்ற நேரங்களில் வெளியில் தன்னுடன் படிக்கும் நண்பர்களுடன் ஜிம்முக்கு செல்வது, சண்டை பயிற்சி கற்றுக் கொள்வது, அடிக்கடி கிரிக்கெட் ஆடுவது என பிசியாக இருந்தான் சித். வெளியே சென்று விட்ட சித்து வீட்டில் இருக்கும் திலோவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை பாட்டியிடம் ஒப்படைத்தான். அவரும் அவளுடன் நன்றாகவே இணைந்துவிட்டார். தனக்கு பேத்தி இல்லாத குறையே இல்லாமல் அவளை அன்பாக வளர்க்க ஆரம்பித்தார். அதிலும் சித்தார்த்தின் பொண்டாட்டி என்ற நினைப்பில் அவர் திலோவை வருங்காலத்தில் சக்கரவர்த்தி குடும்பத்தின் மூத்த மருமகளாகவே எண்ணிக் கொண்டு அதற்கேற்ப அவளை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிக் கொண்டிருந்தார்.

தன் வீட்டுப் பழக்கங்களை எப்படி கடைப்பிடிக்க வேண்டும்? எப்படி பேச வேண்டும்? எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்? என்பது போன்ற மருமகளுக்கான சில அடிப்படை விவரங்களை இப்போதிருந்தே அவர் கற்றுக்கொடுக்க அதைக் கண்ட தாத்தாவிற்கு மட்டும் ஒரு பக்கம் பெருமையாகவும் மறுபக்கம் தன் மகன் சக்கரவர்த்தியை நினைத்து கவலையாகவும் இருந்தது.

இப்போது லீவு விட்ட காரணத்தால் பைக் ஓட்டுவதையும் கற்றுக் கொண்டான் சித்தார்த். முழுமையாக கற்று தேர்ந்த கையோடு அவனுக்கு பைக் வாங்கித் தந்தார்கள் பெரியவர்கள். லைசன்ஸ் இல்லாமலே அவன் வண்டி ஓட்டினான். போலீஸ் ஆட்கள் அவனை தடுத்தாலும் அவன் பின்னாடி இருக்கும் சக்கரவர்த்தி மற்றும் தாத்தாவின் மீதான மரியாதையில் அவனை விட்டார்கள். அதனால் திலோவை பாட்டு மற்றும் டேன்ஸ் க்ளாஸ்க்கு தன் புது பைக்கில் கொண்டு போய் விடுவது கூட்டி வருவது என பிசியாக மாறினான் சித்.

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 15 - சசிரேகாsaaru 2018-07-17 15:45
Nice update sasi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 15 - சசிரேகாThenmozhi 2018-07-16 05:57
interesting update Sasirekha (y)

Pazhaiya part-la iruvarum epadi pirinjanganu terinthu kolla curious aga iruku.

Indru paguthiyum viruvirupaga poguthu.

Looking forward o read more :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 15 - சசிரேகாmahinagaraj 2018-07-13 11:02
romba nalla irundhathu... :clap: :clap:

sithu & doll rendu perukkumtana tata business solli koduthtaru apdi irukkum podhu thelovala eppdi oru problem ku kuda solution silla mudiyala..??!!!~! :Q:

:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 15 - சசிரேகாmadhumathi9 2018-07-13 06:27
:clap: nice epi.sidhu edukkum mudivugal, vegam superb.fabtastic epi.but thilo eppo thaan thannai patri solla pogiraal. (y) waiting to read more. :thnkx: :clap: :GL: :thnkx: 4 big epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 15 - சசிரேகாvijayalakshmi 2018-07-12 22:47
சித்தார்த் சக்ரவர்த்தி is back :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 15 - சசிரேகாராணி 2018-07-12 22:46
சித்து பாவம் :yes:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 15 - சசிரேகாAdharvJo 2018-07-12 19:59
Siddharth charavarthi returns part 3 :D I guess ivara bad businessman-n sonnadha pidikala pola anayalaandhu pavam adhai ninaichi ninaichi ippudi feel panurare facepalm :grin: ippo podura indha adhiradi thittam niraiveruma?? Indha thatha potta bit ala than ippadi. Employees nambi emandhutare what a pity :sad: anyway ippovavdhu sari pana sid returns :dance:

Enakku pidicha andha kutti sid-a ippadi bad sid-a mathitingale sasi ma'am andha pinji manasukula indha stupid ashok ippadi bad thoughts vara vachi irukkane baddy boy :angry: 3:) indha China vaysula ivanukku ethukku buddhi ippadi pogudhu :Q: adhai en did mele implement panuran any reason behind??? So now doll have to go with their parents good but fb athodu mudinjiduma :sad:

Indha employees fire panuradhu best idhunga thirundhumn thonalai sasi ma'am...look forward to see how sid solves all the issues and find his love....sid katchi thavadhir ;-)

Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top