(Reading time: 25 - 49 minutes)

அட போக்கிரீங்களா என் வாயில வந்த வார்த்தையை வைத்து என்னையையே கேனச்சியாக்குறீங்களே .நீ சொல்றதால நான் அவளை போய்ட்டுவர ஒத்துக்கொள்கிறேன்.யாழியை விளக்கேத்துரதுகுள்ள வீட்டிற்கு வரச்சொல்லு. மேலும் இதுபோல அடுத்த வீட்டுக்கு போறது இதுதான் கடைசித்தடவையா இருக்கணும். சரி தாயி மதியம் சாப்டாச்சா? இல்ல இங்க சாப்பிடுகிறாயா? என்று கேட்டார் .

இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை அதனால என் அம்மா எனக்கு அசைவம் சமைத்து வச்சுருப்பாங்க .நீங்கதான் அசைவம் சமைக்கவோ சாப்பிடவோ மாட்டீங்களே. அதனால் நான் என் வீட்டில் நான்வெஜ் சமைக்காதநாளில் உங்க வீட்டுக்கு சாப்பிட வருகிறேன் என்று பேசியபடி இருக்கும் போதே வெளியில் சென்றிருந்த கணேசப்பிள்ளை உள்ளே வந்தவர் வாங்க பிருந்தாம்மா என்று கேக்கும்போதே அவரின் காதில் வாசலில் வந்து நிற்கும் காரின் ஓசை கேட்டதும் நம்ம வீட்டு வாசலில் கார் நிறுத்தும் சத்தம் கேட்குதே என்றபடி வாசலை திரும்பி பார்த்தார்

அந்த சமயத்தில் யாழிசையும் கிளம்பி வந்தவள் தன அப்பாவை பார்த்ததும் தாழ்ந்த குரலின் என் பிரன்ட்ஸ் தான்பா வந்திருக்கிறார்கள் காலேஜ் டான்ஸ் ப்ரோகிராமிற்கு ட்ரெஸ் வாங்குவதற்கு கூப்பிட வருகிறார்கள். பாட்டிகிட்ட கேட்டுட்டுத்தான் கிளம்பியிருக்கிறேன் என்று சொல்லும் போதே,

சந்தியா, லலிதா, காவேரி, மற்றும் யாசிகா ஆகியரோடு யாழிசை... என்றபடி உள்ளே வந்தார்கள்.

வாங்க வாங்க என்று சொல்லியபடி அப்பா இதுதான் என் பிரண்ட்ஸ் என்றவள் பாட்டி எல்லோருக்கும் குடிக்க டீ எடுத்துட்டு வாங்க என்றாள் .

வீட்டிற்கு வந்த பெண்களின் முன்னாள் வேறு எதுவும் பேச முடியாத கணேசப்பிள்ளை வாங்கம்மா ட்ரெஸ் எடுக்க போறீங்களாமே பத்திரமா போய்ட்டுவங்க என்றார் .

சரி அங்கிள் என்று கோரசாக சொன்ன பெண்கள், பாட்டி எங்களுக்கு இப்போ குடிக்க எதுவும் வேண்டாம் யாழிசையை நான் வந்து விடும் பொது வேணா ஏதாவது சாப்பிடுகொள்கிறோம் என்றாள் சந்தியா.

அப்பொழுது லலிதா, ஆமாம் வேகமா போனா ட்ரெஸ் எல்லாம் நேரத்துக்கே செலக்ட் பண்ணி முடித்து சாயந்தரத்துக்குள்ள வீட்டிற்கு வந்திடலாம் என்றாள்

யாசிகா பிருந்தாவை பார்த்து , ஏய் யாழி இது நீ சொல்ற ஜமீன் வீட்டு பொண்ணு பிருந்தவா? பார்க்க க்யூட்ட இருக்கா என்றாள்.

அவள் அவ்வாறு சொன்னதும் பிருந்தா கோபமாக என்ன நீ உன் தங்கச்சின்னு சொல்லாம ஜமீன் வீட்டு பொண்ணு என்றுதான் உன் பிரண்ட்ஸ் கிட்ட சொல்லி வச்சிருக்கியா? என்று கோபமாக யாழிசையை பார்த்து கேட்டாள் .

அதற்கு யாழிசை பதில் சொல்வதற்குள் சந்தியா முந்திக்கொண்டு. ஏய் பிருந்தா குட்டி உன்னை அப்படித்தானே அவள் கூப்பிடுவாள். அவள் உன்னை அவ குடும்பத்தில் ஒருத்தியாக நினைத்துத்தான் எங்களிடம் பேசுவாள் இன்னொருநாள் நாம நிறைய பேசலாம். உங்க வீட்டு வாசலில் ரொம்ப நேரம் காரை நிறுத்த முடியாது ட்ராபிக் பிரச்சனை ஆகிடும் இன்னொருநாள் மீட் பன்னும் போது பேசலாம். போலாமா யாழிசை என்று கேட்டள்.

ம்...சரி என்றவள் அப்பா போய்ட்டுவருகிறேன். பாட்டி, பிருந்தாகுட்டி , டாட்டா... என்றபடி தனது தோழிகளுடன் சென்றாள் யாழிசை.

Poogampathai poovilangal poottiya poovai

கோயம்புத்தூர் விமானநிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் இறங்கிய தீரமிகுந்தன் கண்களை நாலாபுறமும் அலையவிட்டபடி முன்னேறினான்.

தீரமிகுந்தனின் தாய் இறந்து ஒருமாதம் ஆகிய நிலையில் தீரன் ப்ராங்கிடம் தனது தாய் இறந்த துக்கத்தில் இருந்து தன்னை மீட்டுக் கொள்ள ஒரு மாறுதல் தேவை என்பதால்தான் இந்தியா சென்று பணி செய்ய ஒப்புக்கொண்டதாக கூறியிருந்தான்.

ஆனால் அவன் ப்ராங்கிடம் கூறாத காரணம் ஒன்றும் இருந்தது அது அவன் அம்மா பத்மினி இறக்கும் போது அவனிடம் விட்டுச்சென்ற குறிப்புகளே!

தனது அம்மா இறந்து அவரை அடக்கம் செய்த மறு நாள் தனிமையில் இருந்த தீரனுக்கு தனது அன்னையின் நினைவே அதிகம் வாட்டியது. கடைசியாக தன்னிடம் சொல்ல நினைத்த செய்தி எதுவாக இருக்கும் என்று யோசித்தவன் ஹாஸ்பிடலில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட தனது அன்னையின் ஹேண்ட்பேக்கை எடுத்து அதில் தனக்கு எதுவும் சேதி விட்டுவிட்டு போயிருகிறார்களோ? என்று ஆராய்ந்தான் .

அதில் ஒரு பேங்கின் லாக்கர் சாவியிருந்தது அவன் சிறு வயதாக இருக்கும் போதே, அவனது பேரில் ஒரு பேங்க் லாக்கர் ஓபன் செய்தது நினைவில் வந்தது. எதுக்கு அம்மா? என்று தீரன் கேட்டபோது நீ பெரிய பையனாகும் போது சொல்கிறேன் என்று கூறியதும் அவனின் ஞாபக்கத்தில் வந்தது. அந்த லாக்கர் சாவியுடன் கோர்க்கப்படிருந்த கீசெயினில் குட்டி பாகெட் டைரி ஒன்று கோர்க்கப்பட்டிருந்தது. அதில் அந்த சாவி தீரனின் லாக்கர் சாவி என்றும் அதன் சீரியல் நம்பரும் பாஸ்வர்டும் எழுதப்பட்டிருந்தது .

அதை பார்த்த தீரனுக்கு தன அம்மா தனக்காக அந்த லாக்கரில் ஏதோ ஒன்றை விட்டுபோயிருகிறாள் என்று தோன்றியது. தன் அம்மா தன்னிடம் சொல்லநினைத்த சேதியை பற்றி அதில் ஏதாவது குறிப்பு கிடைக்குமோ! என்ற எண்ணமும் எழுந்தது .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.