(Reading time: 25 - 49 minutes)

அந்த எண்ணம் தோன்றிய மறுநிமிடமே தனது கார் கீயை எடுத்தவன் அந்த லாக்கர் கீயை எடுத்து விரைந்து வங்கிக்குச் சென்றான்.

அவன் சென்று தனது அக்கவுன்ட் நம்பரை கூறிய மறுநிமிடம் அவனுக்கு அவன் லாக்கரை திறந்து கொள்ள அனுமதிவழங்கப்பட்டதும் அதில் என்ன இருக்கிறதோ என்ற எதிர்பார்போடு சென்று லாக்கரை திறந்தான். அதில் ஒரு சின்ன தேக்கால் செய்த அழகிய வேலைப்பாடுள்ள மரப்பெட்டியும் அதன் அருகில் ஒரு டைரியும் இருந்தது. இரண்டையும் எடுத்துகொண்டு தனது அம்மா வாழ்ந்த வீட்டிற்கு வந்து அந்த பெட்டியை திறந்து பார்த்தான் தீரன்.

அவனின் தந்தை யார் என்பதையும் அவரின் முகவரியையும் பற்றியும் அவனிடம் அந்த டைரியில் தெரிவித்திருந்தார் பத்மினி.

சிங்கிள் பேரன்டாக தனது அம்மாவின் அனைப்பிலேயே வளர்ந்த தீரனுக்கு அவனின் தந்தையை பற்றிய தேடல் இதுவரை இருந்ததில்லை. ஒருவேளை அவன் இந்தியாவில் இருந்திருந்தால் உன் அப்பா யார் என்ற மற்றவர்களின் கேள்வியில் அவனுக்கும் அவரை பற்றிய தேடல் இருந்திருக்குமோ என்னவோ!. ஆனால் அவனின் நியாயமான தேவைகள் அனைத்தையும் அவன் அம்மா நிறைவேற்றி கொடுத்ததினாலேயோ என்னவோ அவன் தந்தையை பற்றிய கேள்வியை தனது அம்மாவிடம் கேட்கவே இல்லை. மற்ற அவனின் சகவயது பையன்களின் அப்பாக்களை பார்க்கும் போது தன்னுடைய அப்பா யார் என்ற கேள்வி எழுந்தாலும் அவன் மனதுக்குள்ளேயே தனது அம்மா கூறிய உன் அம்மாவும் நானே! அப்பாவும் நானே! உன் அப்பாவிடம் என்னென்ன கேட்கணும் என்று நினைக்கிறாயோ அதெல்லாம் என்னிடம் கேள், நான் நிறைவேற்றிக் கொடுக்கிறேன் என்று கூறியதை நினைவில் கொண்டு மை மாம் இஸ் ஆல்சோ மை டாட். என்று தனக்குதானே கூறி அப்பாவின் தேடலை தவிர்த்திருந்தான் .

ஆனால் அவனின் அம்மாவின் மறைவுக்குப்பின் லாக்கரில் இருந்த போட்டோவில் அவனின் அம்மாவும் அப்பாவும் இருந்தனர் அவனின் அப்பாவை பார்த்தவன் அவரின் டிட்டோவாக இருந்த தனது உருவத்தை கண்ட உதடுகள் அவனை அறியாமலே டாட்..... என்று முணுமுணுத்தது. மேலும் அந்த புகைப்படத்தில் அவன் அம்மா அணிந்திருந்த நகைகள் இப்பொழுது அவன் கையில் இருந்தது

  அந்த நகை பத்மினிகிக்கு அவரது மாமியார் கொடுத்த அவர்களின் பரம்பரை நகை என்றும் அவரின் தந்தை ஜமீன்தார் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் அவர்களின் குடும்பத்தின் பாரம்பரிய நகை அந்த நகை என்றும் அதில் உள்ள கற்கள் அனைத்தும் விலை அதிகமுள்ள வைரங்கள் என்றும் பத்மினி தீரனுக்காக குறிப்பு எழுதிவைத்திருந்தார்.

அதில் இருந்த தங்கநிற வைரக்கல் விலை அதிகமுள்ளது. உலகத்தின் அரிதான அந்த வைரம் அவர்களின் குடும்பத்திற்குச் சொந்தமானது. அவர்களின் குடுமத்தின் முதல் ஆண்வாரிசுக்கு வரும் மனைவிக்கு அவர்களின் மாமியார்கள் அதனை பத்திரப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு கொடுக்கச் சொல்லி கொடுக்கப்படும் ஆபரணம் அது.

அவனின் தந்தை அவரின் வாரிசாக தீரமிகுந்தனை ஏற்றுகொண்டால் மட்டுமே அந்த நகையை தீரன் உரிமை கொண்டாட வேண்டும் என்றும், இல்லையேல் அதனை அவரிடமே ஒப்படைத்துவிடச் சொல்லியும் அவனது அம்மா குறிப்பு எழுதி வைத்திருந்ததார். எனவே தனது அம்மாவின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்கும் நோக்கத்துடன் இந்த பயணத்தின் போது தனது தந்தையை கண்டறிந்து அவரை சந்திப்பதற்காகவும் அவன் இந்தியா வந்திருந்தான்

ஆனால் அவன் உறவுகளை தேடி இந்தியா வரும் விஷயம் ப்ராங்கிற்கு தெரிந்தால் கட்டாயம் ப்ராங் தன்னை இந்த வேலையில் ஈடுபடுத்த மாட்டன் என்பதை தீரன் உணர்ந்திருந்தான் .

இந்தியாவின் மீதும் அவனின் இனத்தின் மீதும் தீரனுக்கு சிறு ஒட்டுதல் இருப்பதாக தெரிந்திருந்தால் கட்டாயம் அவனை இந்த ப்ராஜெக்டில் இருந்து ஒதுக்கிவைத்திருபான் ப்ராங் .தீரனுக்கு தமிழ்நாடு என்றாலே அலர்ஜி என்றும் அவனுக்கு அந்த கலாச்சாரம் ஒத்துவராது என்று தனது குழந்தை பருவத்தில் இருந்து நண்பனாக இருக்கும் தீரனின் வாயினாலேயே கூற கேட்டிருந்த பிராங், இந்த ப்ராஜெக்ட்டை அவனிடம் கொடுக்க கொஞ்சம் கூட யோசிக்கவில்லை அதில்தான் பிராங் முதல் தவறு செய்தான். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்ற பழமொழியை ப்ராங் உணராமல் விட்டுவிட்டான்.

அமெரிக்க மக்கள் அறிந்த பாரம்பரியமிக்க தொழில் குடும்பங்களின் வரிசையில் வீழ்ச்சியை சந்தித்துகொண்டிருந்த ப்ராங்கின் குடும்பத் தொழிலான இரும்பு எ@கு தொழில் ப்ராங் தலைஎடுத்தபிறகு திரும்பவும் ஏற்றத்தில் அடிஎடுத்துவைத்தது. அவ்வாறு ப்ராங் வெற்றிகரமாக தங்களின் குடும்பத்தொழில்களுடன் மற்ற தொழில்களையும் எடுத்து செய்து அதில் வெற்றியும் பெற்று மற்ற தொழில் அதிபர்களின் கவனத்தையும் ஈர்த்தான். பொதுஜன மக்களின் பார்வையில் வேண்டுமானால் ப்ராங் ஹீரோவாக தெரிந்தான். ஆனால் மற்ற தொழில்துறை ஜாம்பவான்கள் ஹீரோவாக பார்த்தது பிராங்கின் மூளையாக செயல்பட்ட தீரனைதான்.

தங்களின் தொழில் எதிரியான ப்ராங்கை வீழ்த்த வேண்டுமானால் அவனின் மூளையாக செயல்படும் தீரமிகுந்தனை ஒழித்தாலே போதும் என்பதை உணர்ந்த பிராங்கின் தொழில் எதிரிகளால் தீரன் நிறைய தடவை ஆபத்தின் விளிம்பை எட்டி பார்த்திருக்கிறான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.