(Reading time: 25 - 49 minutes)

தீரனின் உயிருக்கு ஆபத்திருப்பதை உணர்ந்த ப்ராங் ஆடிப்போய்விட்டேன் தனக்கு அவனின் துணை எவ்வளவு முக்கியமானது என்பதனை உணர்ந்தவன் அவன். எனவே தீரனுக்கு எப்போழுதும் அவனை சுற்றி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி இருந்தான் .

தீரன் ப்ராங்கிடம் அவ்வாறு ஏற்படுத்திய பாதுகாப்பு ஏற்பாட்டால் தனது சுதந்திரம் பாதிக்கபடுவதாக கூறி அதனை விலக்கிவிட சொன்னான் .மேலும் தன்னுடைய பாதுகாப்பை இமாமி பார்த்துகொள்வான் என்றும் அவனிடம் கூறினான் தீரன் .

எனவே பிராங் தீரனின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பங்கம் வராதவாறு தான் அவனுக்கு போட்டிருந்த பாதுகாப்பு வலயத்தை கொஞ்சம் தள்ளியே வைத்திருந்தான். ப்ராங், தீரன் சொன்னதுபோல அதை முற்றிலும் விளக்கவும் இல்லை ஏனெனில் தீரனை கொல்ல முயன்றவற்களால் இமாமியை தாண்டி அவனை அணுக முடியவில்லை தோல்வியை தழுவியவர்கள் தங்களது யுத்தியை மாற்றிக்கொண்டு தீரனை விலைக்கு வாங்க முயன்றனர்.

ஆனால் தீரமிகுந்தன் திமிராக தன்னை விலைபேச முயன்றவர்களின் பணத்தினை இகழ்ச்சியோடு ஒதுக்கினான். அவர்களிடம் ஆணவத்தோடு தன்னை விலைபேசும் அளவு பணம் இன்னும் உலகத்தில் ஒருத்தனுக்கும் இல்லை என்றான். தான் நினைத்தால் அவர்கள் தனக்கு கொடுக்கும் பணத்தை ஒருசில வாரங்களிலேயே சம்பாதிக்கும் திறன் உள்ளதாக கூறி திருப்பியனுப்பிவிட்டான்.

தீரனை விலைபேச முயன்றதை தன்னுடைய ஆட்களால் பிராங் அறிந்திருந்தான் எனவே தீரனுக்கு தனக்கு நிகராக சுகபோக வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருந்தான் பிராங்.

இப்பொழுது தீரன் இந்தியாவிற்கு செல்வதற்கு தனிவிமானம் ஏற்பாடு செய்திருந்தான். மேலும் அவன் இந்தியாவை அடையும் முன்பே அவன் அங்கு தங்க தனி பிளாட். சகல சௌகரியத்துடன் பாதுகாப்புவலயத்துடன் ஏற்பாடு செய்திருந்தான் .

தீரன் வந்து இறங்கியதுமே அங்கு அவன் வருவதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த தொழில் துறை அமைச்சர், உலகமே திரும்பி பார்க்கும் ஒரு தொழில் நிறுவனத்தின் பிரதிநிதி தன்னை சந்திக்க வருகிறான் என்றால் ஏதேனும் பெரிய தொழில் ப்ராஜெக்ட் நம் நாட்டில் ஆரம்பிக்கவே இருக்கும் என்ற அனுமானத்தில், அதில் நாட்டுக்கும் அப்படியே அவர் வீட்டிற்கும் கொஞ்ம் ஆதாயம் பார்க்கலாம் என்ற ஆவலில் தீரனை சந்திக்க விமானநிலையத்திற்கே வந்து தீரனை வரவேற்க சந்தனமாலையோடு காத்திருந்தார்.

விமானநிலையத்தில் தீரன் கால்பட்டவுடனே அவனை நோக்கி அவன் பாதுகாப்புக்கு நியமிக்கபட்டிருந்த இருவர் விரைந்து வந்து சார் என்று சல்யூட் செய்து வி ஆர் அப்பாய்ன்டென்ட் பை சி.என் .ஜி போர் யுவர் செக்யூரிட்டி என்று கூறியவர்கள் கார் ரெடியா ஏர்போர்ட் வாசலில் இருக்குது என்று கூறினார்கள் .

அப்பொழுது சந்தன மாலையோடு தன் கட்சி பிரமுகர்கள் இருவருடன் மினிஸ்டர் ரங்கராஜன் தீரனை நெருங்குவதை கண்டு அவனுக்கு அரணாக நிற்க முயன்ற செக்யூரிட்டீசை தீரன் கண்காலாலேயே தடுத்தான் . தீரன் மினிஸ்டரை நோக்கி தானும் இரண்டு எட்டுவைத்து அவருக்கு கைகுலுக்க கையை நீட்டினான் .

தீரன் இந்தியா வரும் முன்னேயே அவன் இந்தியாவில் சந்திக்க வேண்டிய நபர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் முதலியவற்றை நன்கு அலசி ஆராய்ந்திருந்தான். அவ்வாறு அவன் சந்திக்க முடிவெடுத்து ப்ராஜெக்டை செயல்படுத்துவதில் முக்கியமானவர் மினிஸ்டர் ரங்கராஜன்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவரிடம் தான் இட்டுக்கட்டி தயாரித்துள்ள (உண்மைக்கு புறம்பான) எதிர்கால வளர்ச்சி புள்ளிவிபரங்களை தக்க ஆதாரத்துடன் காண்பித்து தமிழ்நாட்டின் காவேரி ஆற்றுப்படுகைகளின் ஆழத்தில் ஏராளமான கனிமவளங்கள் இருப்பதாகவும் அதனை எடுத்து சந்தை படுத்துவதன் மூலம் இந்தியா அரபு நாடுகளைப்போல் செல்வம் கொழிக்கும் நாடாக இன்னும் பத்து ஆண்டுகளில் மாறிவிடும் என்றும், ஆனால் அவ்வாறு அக்கணிம வளங்களை பூமியில் உள்ளிருந்து எடுக்க ஹை டெக்னிக் மெசின்ஸ் மற்றும் யுத்திகள் தேவைபடுகிறது. அதனை எங்களின் சி.என்.ஜி நிறுவனம் சிறப்பாக உங்களுக்காக செய்து கொடுக்கும் மேலும் அதனை சந்தை படுத்துவதற்கு கனிமவளங்களை துறைமுகங்களுக்கும் விமானநிலையங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு காவேரி படுகைகளில் நான்குவழிச்சாலை அமைத்து தருவதற்கு தங்களின் நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் அதற்கான செலவினங்களுக்கு ஆகும் நிதியை தங்கள் நாட்டின் வங்கிகள் உங்கள் நாட்டுக்கு கடனாக வழகுவதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறி அதற்காக அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை மேற்கொள்வதற்கான கோரிக்கை வைப்பதே தீரனின் முதல் வேலை.

தீரன் நீட்டிய கையை பயபக்தியுடன் பிடித்து குலுக்கிய மினிஸ்டர் ரங்கராஜன் அருகில் நின்றிருந்த தனது பி.ஏவிடம் இருந்து சந்தனமாலையை பெற்று தீரனுக்கு போடுவதற்கு திரும்புகையிலேயே தீரனின் செக்யூரிடி தனது உள்ளங்கையில் மறைத்துவைத்திருந்த மெட்டல் டிடைக்டர் வைத்து கொஞ்சம் பொறுங்க சார் என்று கூறுவதுபோல் மாலையை தடுத்தவாறு அதனை ஆராய்ந்தான்.

தீரன் மினிஸ்டருக்கு கைகொடுத்த மறுநொடி அவர் மாலையை வாங்க திரும்பிய அந்த நேரத்தில் தனக்கு பின் நின்றிருந்த செக்யூரிடியிடம் எதுவோ திரும்பி கேட்டான் .

எதுக்கு மாலையை போடுவதை தடுக்கிற என்று கேள்வி எழுப்புவதுபோல் பார்த்த அமைச்சரிடம், செகயூரிட்டி கூறினான் சார் பேசிட்டு இருகிறார் என்று .

அவன் கூறிகொண்டிருகும்போதே திரும்பிய தீரன் ஓ சாரி மினிஸ்டர் ரங்கராஜன் என் செக்யூரிடியின் ஐ டி கார்டை சரி பார்த்தேன் என்று கூறியபடி அவர் மாலை அணிவிப்பதற்கு தோதாக தலையை குனிந்து காண்பித்தான்

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1212}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.