(Reading time: 11 - 22 minutes)

றுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டு, “சொல்லு ஆனந்தி..” என்ற தந்தையின் குரல் சுடரின் உயிர் வரை தொட்டு விட்டு வந்தது.

“கதிர்.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்.. அது என்ன தெரியுமா? சொன்னா நீ ரொம்ப சந்தோஷப்படுவ..” என்று உற்சாகத்தோடு ஆனந்தி பேச,

“ஹேய் என்ன ரொம்ப சந்தோஷமா இருக்க.. சொன்னா தானே தெரியும் ஆனந்தி..” என்றார் கதிர்.

“கதிர் நான் இங்க யார் பார்த்தேன் தெரியுமா? உன்னோட பொண்ணு சுடரொளியை.. அமுதன் படிக்கிற யூனிவர்சிடில தான் படிக்கிறா.. என்னம்மா வளர்ந்துட்டா தெரியுமா?” என்று அதிக மகிழ்ச்சியோடு பேச, மறுமுனையில் சத்தமே இல்லை.

“கதிர் இருக்கியா?” என்று ஆனந்தி கேட்க,

“ஆனந்தி.. எனக்கு ரெண்டு பசங்க தான்.. தமிழ், புவி மட்டும் தான் என்னோட பசங்க.. எழில் என்னோட மனைவி.. இதைத்தவிர நீ வேற யாரை என்னோட பொண்ணுன்னு சொல்ற?” என்று கதிர் கேட்க, அவர் இப்படி பேசுவார் என்று ஆனந்தியே எதிர்பார்க்கவில்லை. அமுதனுக்குமே கதிரின் பேச்சு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இருவருமே சுடரின் முகத்தை பார்க்க, அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

“என்ன பேசற கதிர்.. உனக்கு தெரியுமா சுடர்..” என்று முழுவதுமாய் இங்கு என்ன நடக்கிறது? என்று ஆனந்தி சொல்ல வருவதற்குள்ளேயே,

“இங்கப்பாரு ஆனந்தி.. வெண்மதி, சுடர் எல்லாம் என்னோட கடந்தகாலம்.. இப்போ என்னோட குடும்பத்தோட சந்தோஷமா இருக்கேன்.. பழைசை ஞாபகப்படுத்தி குடும்பத்துக்குள்ள சங்கடத்தை ஏற்படுத்தாத..” என்று கதிரின் வார்த்தைகளில் ஆனந்திக்கு அளவுக்கடந்த கோபம் வந்து.. அலைபேசியின் தொடர்பை துண்டித்தார்.

தந்தையிடம் இருந்து இப்படி ஒரு பேச்சை எதிர்பார்க்காத சுடரொளி அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்திருக்க, அமுதன்  அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்தான்.

“பைத்தியம் தான் பிடிச்சிருக்கு சுடர் அவனுக்கு.. வெண்மதி மேல இருக்க கோபத்தை உன்கிட்ட காட்டறான் போல.. எல்லாம் எடுத்து சொன்னா புரிஞ்சிப்பான்..” என்று ஆனந்தியும் சமாதான வார்த்தைகள் கூறினார். கதிரவனின் மகள் என்று தெரியாவிட்டாலும் சுடரின் பிண்ணனியை ஏற்கனவே அமுதன் மூலம் அவர் அறிந்து வைத்திருந்தார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஆனால் சுடரொளியோ, “வேண்டாம் ஆன்ட்டி.. என்னைப்பத்தி எதுவுமே நீங்க அப்பாக்கிட்ட சொல்லக் கூடாது.. நான் அம்மாக்கூட ரொம்ப நல்லப்படியா இருப்பேன்னு அவர் நினைச்சுக்கிட்டு இருப்பாரு.. அதுவும் இல்லாம இப்போ அவர் குடும்பத்தோட ரொம்ப சந்தோஷமா இருக்கார்.. என்னைப்பத்தி சொல்லி அவரை கஷ்டப்படுத்தாதீங்க.. என்னைப்பத்தி எப்பவும் அப்பாக்கிட்ட சொல்லக் கூடாது..” என்று ஆனந்தியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாள்.

சுடரொளியும் இனி தந்தையை நேரில் சந்திக்கவே கூடாது.. அவரின் நிம்மதியான குடும்ப வாழ்வில் இடையூறாக இருக்கக் கூடாது என்று தான் முடிவெடித்திருந்தாள். ஆனால் இப்போது கார் விபத்தில் மூவருமே இறந்து போக ஆனந்தி அவளை தந்தையோடு சென்று இருக்க சொல்லவும் அவளுக்கு அது அவசியமானதா என்று தான் தோன்றியது. கூட அமுதனும் அதையே தான் கூறினான். ஆனால் சுடரின் மனதில் உள்ள தந்தையின் ஏக்கத்தை அறிந்ததாலேயே ஆனந்தி பிடிவாதமாக ஆனந்தியை அங்கே அனுப்பும் பிடிவாதத்தோடு இருந்தார்.

சுடரொளிக்குமே தந்தையை நேரில் சென்று பார்த்தால் தான் என்ன? ஆனந்தி ஆன்ட்டி சொன்னதற்காக கொஞ்ச நாட்கள் மட்டும் அவரோடு இருந்துவிட்டு திரும்ப லண்டனுக்கே வந்துவிடலாம் என்ற நினைப்போடு தான் இந்தியா செல்ல தயாராக இருந்தாள்.

ஆனால் அங்கு மகிழ்வேந்தனோ, “என்னோட அக்கா வரப் போறாங்களா மாமா..” என்றுக் கேட்ட எழிலரசியின் இரண்டாவது மகன் புவியிடம்..

“யாருடா அக்கா.. அவ வந்தா நீயும் தமிழும் பேசவே கூடாது.. பேசினீங்க ரெண்டுப்பேரையும் அப்புறம் கிரிக்கெட்ல சேர்த்துக்க மாட்டேன்..” என்று இருவரிடமும் சொன்னவன்,

“இங்க வந்த கொஞ்ச நாளிலேயே.. ஏண்டா இங்க வந்தோம்னு நினைச்சு திரும்ப அவ லண்டனுக்கே போகணும்டா.. அவளை நம்ம ஓட ஓட விரட்டணும்..” என்று அங்கிருந்த அறிவு, அருள் அனைவரிடமும் பொதுவாக சொல்ல, அனைவரும் தலையை ஆட்டினர்.

உறவு வளரும்...

Episode # 20

Episode # 22

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.