(Reading time: 14 - 28 minutes)

மாமா எல்லா சொத்தையும் சேகர் பெயர்ல இருந்து என் பெயர்க்கு மாத்த சொல்லிட்டாரு....

சேகரும் ஏதும் பேசாம எல்லா சொத்தையும் என் பெயர்க்கு மாத்தி கொடுத்துட்டு இந்த வீட்டை வீட்டையே போய்ட்டான்... அதோட என்னை விட்டு மொத்தமா போய்ட்டான் ...என்று கூறிய பர்வதம் அம்மாள் அந்த நாள் ஞாபகத்தில் கதறி அழுதார்....

ரிஷி, எழுந்து வந்து அவர் கண்ணீரை துடைத்து விட்டான்.

அத்தையின் வாழ்க்கையில் இவ்ளோ சோகம் இருக்கும் என்று ரிஷி சிறிதும் நினைக்கவில்லை.

அத்தை, மாமா மீது வைத்து இருக்கும் காதல் கூட அவனுக்கு பிரமிப்பாக இருந்தது..... இந்த வீட்டு வாரிசுக்காக மாமாவையே சிவகாமி அத்தைக்கு  விட்டு கொடுத்து இருக்கிறார்.

கீதாவை, தன்னால் சேகரயுடன் போட்டோவில் கூட பார்க்க முடியவில்லை .... ஆனால், அத்தை மாமாவை சிவகாமி அத்தைக்கு திருமணம் செய்து வைக்கவேயே சம்மதித்து உள்ளார்....

அவரது, கண்ணீரை துடைத்த ரிஷியின் கைகளை பருவதம் அம்மாள் கெட்டியாக பிடித்து கொண்டார்.

ரிஷி, இது எல்லாம் உனக்கு ஏன் தெரியுமா சொல்றேன்???? நீ எல்லா விஷயத்துலையும் ரொம்ம்ப அவசர படுற...

கீதா, எனக்கு தெரிஞ்சு ரொம்ம்ப நல்ல பொண்ணு டா.... உன் அப்பாக்கு உடம்பு சரி இல்லனு சொன்னதும் அவதான் அண்ணாக்கு தேவையான எல்லாம் செய்யுறா.....

ஆனா, எதையும் அவ நேரிடையாக செய்யல.... என் மூலமாத்தான் செய்யுற.... நாணாய எதாவது அண்ணாகிட்ட கொடுக்க சொல்லி அனுப்புனா கூட போகமாட்டேங்குற....

கீதா, அண்ணா மேல ரொம்ம்ப மரியாதை வச்சு இருக்க. அக்கறையும் இருக்கு. ஆனா, அதை வெளிக்காட்ட பயப்படுற....

இந்த அக்கறையும் மரியாதையும் உன் மேல இருக்குற காதலால் தான் அவளுக்கு வந்து இருக்கு ரிஷி.

பருவதம் அம்மாள் கூறியதை கேட்ட ரிஷிக்கு கீதாவின் மேலிருந்த காதல் இன்னும் அதிகம் ஆனது.

நீ சொன்ன மாதிரியே, கீதாவா உண்மையை சொல்ற வரைக்கும் நாம ஏதும் பண்ணமுடியாது. நீ கீதா கால்லா விழுவியோ???? இல்ல கையா பிடிப்பியோ எனக்கு தெரியாது ....

ஏதாவது செஞ்சு அவளா உண்மையா சொல்ல வச்சுடுடா.... என்று கெஞ்சுவதை போல கேட்ட பருவதம் அம்மாளை சிரித்த முகத்துடன் பார்த்தான் ரிஷி....

அவனது சந்தோசம், பருவதம் அம்மாளையும் தொற்றி கொண்டது.....

சேகர் குடும்பத்தோட வாழ்ந்ததா  தான் என்னால பார்க்க முடியல..... நீயும் கீதாவாயும் ஒன்னய வாழறதையாவது நான் பார்க்கணும்  ரிஷி.

அத்தை, நீங்க ஏன் கவலைப்படுறீங்க ??? ஒன்னய வாழ்றது  என்ன??? ......

வருஷ வருஷம் ராஜகுட்டி மாதிரி ஒரு பேரனையும் பெத்து தரேன் போதுமா.... என்று குறும்புடன் கேட்ட ரிஷியை  சந்தோசத்துடன் பார்த்தார் பருவதம் அம்மாள்.

போடா  போக்கிரி, பாரு நான் சொல்ல வந்தாய்யே  மறந்துட்டேன்....  ரிஷி, கீதா காட்டுன போட்டோஸ்ல ஒரு பொண்ணு இருந்த பார்த்தியா???? என்று தன் சந்தேகத்தை கேட்டார்.

பொண்ணா..... எந்த பொண்ணு அத்தை.....  என்று புரியாமல்  கேட்ட ரிஷியை முறைத்து  பார்த்தார் பருவதம் அம்மாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சுத்தம்..... ஏன் டா உன் கண்ணுக்கு கீதா மட்டும் தான்  பெண்ணாய தெரிவாளா???? நீ இப்படி இருந்த கீதா கிட்ட இருந்து உண்மையை எப்படி டா  வர வைப்பா????

ஒன்னு அவகிட்ட சண்டை போடா போற???? இல்ல அவளை பார்த்து நல்ல ஜொள்ளு விடுறா .....

அத்தை, இது டூமச் நான் கீதாவை பார்த்து எப்ப ஜொள்ளு விட்டேன்.... நீங்க அதை  எப்ப பார்த்திங்க ????

டேய், அன்னைக்கு தோட்டத்துல என்னை நடுவுல வச்சுட்டு நீ கீதாவை பார்த்ததை தான் நான்  பார்த்தேனேயே????

அத்தையிடம் வசமாக மாட்டிக்கொண்டதை உணர்ந்த ரிஷி அசடு வழிந்தான்..... விட்டால் அத்தை இன்னும் தன்னை ஒட்டுவார்  என்று எண்ணியவன்....

அத்தை, என்ன இப்ப .... அந்த பொண்ணு யாருன்னு தெரிஞ்சுக்கணும்.... அவ்ளோதானாய......

நான் என் நண்பனக்கு இந்த போட்டோவை மெயில் பண்ணி விசாரிக்க சொல்றேன் போதுமா..... என்று கூறியவனை பார்த்து நிம்மதியுடன் தலை அசைத்தார்.

சரி, நீ வா வந்து சாப்பிடு ரிஷி .... நைட் எல்லாம் முழிச்சு இருக்காதா.... உடம்புக்கு ஒத்துக்காது.... விடிஞ்சதும் கீதாகிட்ட பேசு.....

ரிஷியோ, இல்ல அத்தை இன்னைக்கேயே கீதாவிடம் எல்லாம் பேசி விட வேண்டும்.

விடை தெரியாத என்னுடைய எல்லா கேள்விக்கும் கீதா இன்னைக்கு பதில் சொல்லித்தான் ஆகணும்.என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

கீதா, ரிஷி கேட்க போகும் கேள்விக்கு பதில் கூருவாளா.... அவளது பதில் ரிஷி கீதாவின் உறவில் மீண்டும் ஒரு பிரிவை உண்டாகுமா???? இல்லை இவர்களை சேர்த்து வைக்குமா??? என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்

Thanks for your Support Chillzee Team & Viewers...

தொடரும்

Episode # 10

Episode # 12

Go to Ennavale story main page

{kunena_discuss:1184}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.