(Reading time: 13 - 26 minutes)

அனைவரும் கிரிக்கெட் விளையாடச் சென்றனர். சுடர் மட்டும் தனக்கு விளையாட தெரியாது என்று மறுத்தாள்.

“எங்களுக்கெல்லாம் மட்டும் விளையாடவா தெரியும்.. மகி தான் எங்களுக்கெல்லாம் சொல்லிக் கொடுத்தான். அப்படியும் அடிக்கடி அவுட் ஆயிடுவோம். இது என்ன போட்டிக்கு விளையாட்றதா சும்மா ஜாலிக்கு தானே அதனால வா சுடர்..” என்று மணியும் மலரும் அவளை அழைத்தனர்.

“அக்கா நீயும் விளையாடினா ஜாலியா இருக்கும் வா க்கா..” என்று புவியும் வற்புறுத்தினான்.

“எனக்கு இப்போதைக்கு இதுல இண்ட்ரஸ்ட் இல்ல, நீங்க விளையாடுங்க.. நான் சும்மா வேடிக்கை பார்க்கிறேன்..” என்று மறுத்தாள். என்னத்தான் அனைவரும் அவளிடம் பேசி பழகினாலும் அவர்களிடம் உரிமையாக பழக அவளுக்கு தயக்கமாக இருந்தது. மகிக்கு அவள் மனநிலை புரிந்ததோ என்னவோ..

“பரவாயில்ல விடுங்க.. சுடர் சும்மா நாம விளையாடுவதை பார்க்கட்டும்..” என்று அவளுக்காக பேசினான். அதில் அவனை பார்த்து அவள் புன்னகைத்தாள். அதற்காகவே அவளுக்கு அடிக்கடி பரிந்து பேசலாம் போல அவனுக்கு தோன்றியது. ஏனெனில் இத்தனை நாட்களில் அவள் புன்னகை புரிந்து இன்று தான் பார்க்கிறான். அவள் சிரிக்கவே மாட்டாளோ என்று கூட நினைத்தான். “என்னவோ அவளை நெடுநாள் கவனித்தது போல் அவள் சிரிக்க மாட்டாளா? என்று நினைக்கிறாயே.. அவளை நீ கவனிக்க ஆரம்பித்ததே இப்போது தான்” என்று அவன் மனசாட்சி எடுத்துரைத்தது. அதில் தனக்கு தானே சிரித்துக் கொண்டான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அனைவரும் விளையாடுவதை வேடிக்கைப் பார்த்தப்படி சுடரொளி அமர்ந்திருந்தாள். பெரியவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தனர். சிறியவர்களில் அவளை தவிர மற்றவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதனால் முதலில் விளையாட்டை வேடிக்கை பார்த்தவள், பின் தன் பையிலிருந்து ஓவியம் வரையும் புத்தகத்தை எடுத்தவள், அவர்கள் கிரிக்கெட் விளையாடும் காட்சியை மனதில் நிறுத்தியவள், பின் அதை ஓவியமாக வரைய ஆரம்பித்தாள்.

ஒருப்பக்கம் விளையாடிக் கொண்டிருந்தாலும் மகி சுடரை அவ்வப்போது கவனித்துக் கொண்டு தான் இருந்தான். அவள் ஓவியம் தான் வரைகிறாள் என்பதை யூகித்தவன், விளையாட்டுக்கு நடுவில் வந்த இடைவேளையில் அவள் அருகில் வந்தவன், அவள் வரைந்ததை வாங்கி பார்த்தான்.

அவர்கள் விளையாடியக் காட்சியை அப்படியே அதில் படம் பிடித்தது போல் ஓவியங்களாய் தீட்டியிருந்ததை பார்த்து வியந்தவன், “வாவ் சூப்பரா வரைஞ்சிருக்க சுடர்.. புவி அன்னைக்கே நீ அழகா வரைவாய்னு சொன்னான். ஆனா இந்த அளவுக்கு எதிர்பார்க்கல.. சூப்பர்..” என்று பாராட்டினான்.

 அனைவரையும் அருகே அழைத்து அந்த ஓவியங்களை காட்டினான். அருள்மொழியை தவிர அனைவரும் அவளை பாராட்டினார்கள். விளையாட்டு முடிந்து வீட்டிற்கு சென்றதும் பெரியவர்களிடமும் காட்டினான். பூங்கொடி, புகழேந்தி இருவரும் அவளை மெச்சிக் கொண்டனர். ஏனோ முத்து பாட்டிக்கு அது பிடிக்கவில்லை.

பின் ஞாயிறு இரவானதும்  எழில் வீட்டுக்கு கிளம்ப தயாரானாள். அப்போது மகியை அழைத்து, “சுடர் இங்கேயே காலேஜ்ல ஏதோ மேல படிக்கணும்னு சொன்னா.. அதைப்பத்தி காலேஜ்ல போய் விசாரிக்கணுமாம்.. நீ கூட துணைக்கு போயிட்டு வர்றியா” என்றுக் கேட்டாள்.

அதற்குள் அவசரமாக மறுத்த சுடர்.. “வேண்டாம் சித்தி.. நீங்க பஸ்ரூட் சொன்னா நானே போயிக்குவேன்.. எதுக்கு அவங்களை தொந்தரவு செஞ்சுக்கிட்டு” என்று சொல்ல,

“இதுல என்ன தொந்தரவு இருக்கு.. கூட துணைக்கு வருவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எப்போ போகணும்?” என்றுக் கேட்டான்.

“நான் எப்போன்னு யோசிச்சு சித்திக்கிட்ட சொல்றேன்.. அவங்க உங்களுக்கு தகவல் சொல்வாங்க..” என்று அவள் பதில் கூறியதும், நால்வரும் வீட்டுக்கு கிளம்பினர். இதையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்திருந்த பாட்டிக்கு எதுவும் சரியாகபடவில்லை.

உறவு வளரும்...

Episode # 24

Episode # 26

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.