(Reading time: 20 - 40 minutes)

அதற்கு வகுலா, பிராங் மாதிரி மில்லினியர்ஸ் மற்றும் பிஸ்னஸ் மேன்கள் இந்தமாதிரியிருப்பது சகஜம்தான். பின் உன்னை மாதிரியா பியான்சியிடம் கூட தள்ளிநிற்க அவர் என்ன திருப்திபடுத்தயியலாதவரா? இல்லை எப்படி என் அழகைவைத்து அவரை என்னுடன் கட்டிபோட என்று தெரியாமல் இருக்க நான் என்ன அழகில்லாதவளா?

எனிவே உன்னுடன் எனக்கு என்கேஜ்மென்ட் ஆனதால் நான் அடைந்த நன்மை மில்லினியர் பிராங்கின் அறிமுகம் எனக்கு கிடைத்ததே அதற்கு தாங்க்ஸ் என்று கூறியவள் விறுவிறுவென்று வெளியேறினாள்.

அவளின் வார்த்தைகள் தீரனை ரணப்படுத்தியது. இதெயெல்லாம் கேட்டுகொண்டிருந்த பத்மினிக்கு தனது மகனின் ரணம் கண்டு இதயம் வலித்தது .

போய்கொண்டிருந்த வகுலாவின் முதுகைப் பார்த்து தீரன் கத்தினான். போ..போ... உன்னைமாதிரி ஒருத்தியுடன் என் திருமணம் நின்றது எனக்கும் சந்தோசமே, ஹ... உனக்கு லஸ்ட் தான் முக்கியம் லவ், இரண்டாம் பச்சம்தான் என்று எனக்கு முன்பே தெரிந்திருந்தால் உன்னை நான் எப்பொழுதோ லஸ்டில் மூழ்கடிச்சிருப்பேன்,

ஆனால் கல்யாணத்தை உன்னுடன் நான் யோசித்தே பார்த்திருக்கமாட்டேன். பிராங் பணக்காரன் என்ற காரணத்தால் என்னைவிட்டு பிராங்கிடம் போன உனக்கும், நண்பனின் காதலியின் மேலேயே கன்னம் வைத்த அந்த பிராங்கிற்கு உரிய தண்டனையும் இந்த தீரன் கொடுக்காமல் அடங்கமாட்டான் என்று கத்தியது போய்கொண்டிருந்த வகுலாவின் காதுகளில் விழுந்தது அதை அவள் சட்டை செய்யவில்லை.

ஆனால் காலம் அதற்கு பதிலடிகொடுக்க காத்திருந்தது.

இவ்வாறு வகுலாவினாள் தான் அடைந்த துன்பத்தை இன்றைய பிராங்குடனான உரையாடலில் அசைபோட்டு மேலும் ரணமாகிகொண்டிருந்த தீரனின் காதில் திரும்பத்திரும்ப ஒலித்த மொபைலின் ஒலி கலைத்தது .

தனது பேக்பேகினுள் இருந்து சத்தம் கேட்டதும் அதை ஓபன் செய்து எடுப்பதற்குள் அழைப்பு நின்றுவிட்டது.

அதில் தான் வைத்திருத பட்டன் போனில் இமாமிதான் போன்செய்திருப்பான் என்று நினைத்து மொபைலை எடுத்தவன் கையில் அகப்பட்டதோ யாழிசையின் மொபைல் .

அதனை எடுத்தவன் கை அன்னிச்சையாக அதன் கேலரியில் இருந்த போட்டோஸ் களைக்சனை ஓபன் செய்தது .

அதில் அவள் தோழிகளுடன் எடுத்தபோட்டோஸ் சிலதும் பிருந்தாவுடன் எடுத்த போட்டோஸ் சிலதும் இருந்தது

பிருந்தாவை பார்த்தவன் தனக்கும் பிருந்தாவிற்கும் தோற்றத்தில் ஏகப்பட்ட ஒற்றுமை இருப்பதை கண்டவனுக்கு தனது தங்கை அவள் என்ற ஒட்டுதல் ஏற்பட்டது, பிருந்தா ஆணாக பிறந்திருந்தால் தன்னைப்போலவே இருப்பாள் என்று அவனால் எண்ணாமல் இருக்க இயலவில்லை.

மேலும் அதில் யாழிசைக்கும் பிருந்தாவிற்கும் உள்ள அன்னியோன்யம் இருவரும் சேர்ந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்தவிதத்திலேயே அவனுக்கு புரிந்தது.

அவனின் விரல்கள் யாழிசையின் உருவத்தை பெரிதுபடுத்தி உனக்கு உங்க அய்யாவின் மகளைதான் பிடிக்குமோ..? இந்த மகனையும் பிடிக்கணும் பிடிக்க வைப்பான் இந்த தீரன் என்று அவளின் போட்டோவிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே மீண்டும் இமாமியிடம் இருந்து மொபைல் அழைப்பு வந்தது.

எனவே அதை எடுத்து அட்டன் செய்ததும் இமாமி கொஞ்சம் பதற்றத்துடனே பாஸ்... என்றான்.

அவ்வளவு சீக்கிரம் இமாமி எதற்கும் பதற்றம் கொள்ளமாட்டான் எனவே அவனின் பதற்றத்தை குறித்துகொண்ட தீரன், இமாமி... எனி ப்ராப்ளம்? எனக்கேட்டான்.

பாஸ், மிஸ்டர் பிராங்கின் அக்கவுன்ட்டிரான்ஸர் டீடெய்ல்ஸ் ஹக்செய்து சொல்லச் சொன்னீர்களல்லவா? என்று கூறியதும்.

எஸ் அதில் என்ன பிரச்சனை என்று தீரன் கேட்டான்.

ஹாக்கிங் செய்ததில் ஒன்றும் பிரச்சனை இல்லை ஆனால் ட்ரான்ஸக்சன் செய்த நபர்களும் அந்த அக்கவ்ண்டின் இருக்கும் பணத்தின் மதிப்பும் என்னை மிரட்டுகிறது என்று இமாமி கூறினான்.

இதை தீரன் ஓரளவு எதிர்ப்பார்த்திருந்தான். இருந்தாலும் தான் எதிர்பார்த்ததை விட மேலும் வன்மையான தகவலை இமாமி கூறபோகிறான் என்று அவன் உள்மனம் கூறியது.

அதை ஆமோதிக்கும்படி வேர்ல்ட் டாப் மோஸ்ட பிஸ்னஸ் மற்றும் கார்பரேட்டார்சின் தலைமை புள்ளியில் உள்ளவர்கள் மூன்றுபேரின் பெயர்களை கூறி அந்த அக்கவ்ண்டில் பணம் போட்டிருகிறார்கள் அதுவும் இந்தியாவை போன்ற இன்னும் சில வளரும் நாடுகளை விலைக்கு வாங்கும் அளவு பணம் அதில் தற்போது உள்ளது என்றும் அவ்வளவு பெரியதொகையை நாம் கையாடல் செய்தால் இந்த உலகத்தையே கண்ரோல் பண்ணிகொண்டிருக்கும் கார்பரேட்டார்களின் எதிரிகளாக நாம் அவர்களால் அடையாளம் காணப்படுவோம். அவ்வாறு அடையாளம் காணப்படுவது புதைகுழிக்குள் நம்மை நாமே இழுத்துச் செல்வதற்கு சமமானது என்று கூறினான்.

அவன் அவ்வாறு கூறிய மறுநிமிடம் இமாமி உனக்கு என்மேல் நம்பிக்கை இல்லையா? அல்லது என் கூட இனி பயணிப்பது உனக்கு நல்லதில்லை என்று நினைகிறாயா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.