(Reading time: 20 - 40 minutes)

நான் இருக்கும் போது என்னை மீறி என் அப்பாவோ அவரை சேர்ந்தவர்களோ என் தோழிகளை ஒன்றும் செய்துவிட முடியாது என்று நினைத்து உன்னை கூப்பிட்டுகொண்டு போனதால் வந்த வினைதான் இது. ப்ளீஸ்டீ.... நீ நடந்ததையே நினைத்துகொண்டு இருக்காதே என்று தன வீட்டில் நடந்ததுக்கு அவளுக்கு சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

யாழிக்கோ உன்வீட்டில் நடந்தது மட்டும்த்தானே உனக்குத் தெரியும் அதன்பின் நடந்ததை நான் யார்கிட்ட சொல்ல? குறிப்பா உன்கிட்ட சொல்லவே முடியாதே! அவன் சொல்வது உண்மைபோலவும் உள்ளது அவன் சொல்வதற்காக என் உயிர் தோழி உன்னிடம் கூட என் நிலைமையை சொல்லி அவன் சொல்வதை கேட்கலாமா? கூடாதா? என்று கேட்கவும் தயக்கமாக இருக்குதே.... என்று மனதினுள் புலம்பிகொண்டிருந்தாள் யாழி .

அப்பொழுது காலேஜ் பியூன் அவள் கிளாசிற்கு வந்து இந்த கிளாசில் இருக்கும் யாழிசை என்ற ஸ்டூடண்டோட பர்ஸ் கீழே கிடந்ததென்று ஆபீஸ் ரூமில் ஒருவர் எடுத்துவந்து கொடுத்திருக்கிறார்.

ஆப்டர்நூன் லஞ்ச் பிரேக் டைமில் ஆபீஸ் ரூமிற்கு வந்து ஒரு சைன் போட்டுவிட்டு அந்த பர்சை வாங்கிட்டு போகசொல்லிடுங்க என்று கூறிவிடுச் சென்றான்.

அவன் கூறியதை கேட்டதும் அந்த ஆசிரியர் யாழிசை என்று அழைத்தார். எழுந்துநின்ற அவளை பார்த்து இப்படியாமா உன் திங்சை கேர்லஸ்சாக மிஸ் செய்வாய்? என்று கேட்டபிறகே, என்ன நான் பர்சை மிஸ் செய்துட்டேனா! என்றவள் பரபரப்பாக அவள் பேக்கை எடுத்து அவள் பர்ஸ் அதில் உள்ளதா? என்று தேடிப்பார்த்தாள்.

அதில் இல்லாததை பார்த்தவள் ஆமாம் மிஸ் என் பர்ஸ் என் பேகில் இல்லை என்று கூறினாள்.

அவள் கூறியதை கேட்ட ஆசிரியர், இங்க பாருப்பா.... அவள் பர்ஸ்சை தொலைத்ததை கூட அவள் தெரியாமல் இருக்கிறாள். ஆனால் அதை யாரோ ஒரு நல்லவர் அதுவும் இந்தகாலத்தில் பொறுப்பா எடுத்து ஆபீசில் வந்து கொடுத்திருகிறார் யார் அந்த நபர் என்று விசாரித்து முடிந்தால் அவர்களுக்கு தாங்க்ஸ் சொல்லிடு என்று கூறிவிட்டு அவளை அமரச்சொன்னார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவள் அமர்ந்த மறுநொடி மதிய லஞ்சுக்கு பெல் அடித்ததும் ஆசியர் அடுத்த வகுப்பில் சந்திப்போம் என்று கூறி வெளியேறிய மறுநொடி யாழிசை சந்தியா என்னோடு ஆபீஸ் ரூம் வாடி! என் பர்ஸ்சை வாங்கிட்டுவந்துவிடலாம் என்று இழுத்துக்கொண்டு விரைந்தவள் அதில்தான் என் போன் ஏடீஎம் கார்டு எல்லாம் இருக்குது. நம் காலேஜ் காம்பஸில் இருக்கும் ஏடீஎம்மில் நம் குரூப்டான்ஸ் காஸ்டியூம் அமொவ்ன்ட் எடுத்து தர கொண்டு வந்தேன். கடவுளே எல்லாம் பத்திரமாக இருக்கணும் என்று புலம்பியபடி சென்றாள்.

அவள் சொல்வதை கேட்ட சந்தியா ,அதெல்லாம் இருக்கும் கவலை படாத யாழி, உன் பர்சினுள் உள்ளதை அமுக்கிடனும் என்று நினைப்பவர் கையில் அதுகிடைதிருந்தால் ஆபீஸ்ரூமில் வந்தெல்லாம் கொடுத்திருக்க மாட்டான் .என்று கூறிக்கொண்டே இருக்கும் போதே அவர்கள் ஆபீஸ் ரூமை அடைந்திருந்தனர்,

அங்கிருக்கும் இன்சார்சிடம் கேட்டு தனது பர்சை வாங்கியவள், சைன் பண்ணிவிட்டு யார் சார் கொடுத்தா? என்று கேட்டதும் வாடச்மேன்தான் யாரோ ஒருவர் வந்து கொடுத்ததாக சொன்னார் அவரிடமே நீங்க விசரித்துக் கொளுங்கள் என்று கூறனார்.

வெளியில் வந்ததும் தனது பர்சை திறந்து பார்த்தவள் அதில் இருந்த போனை எடுத்ததும் சந்தியா எப்படி சாம்சங் கேலக்சி s9 ஐபோன் வாங்கின! இது பிப்டி தவுசன்ட் ரூபாய்க்கும் மேல! இதன் விலை இருக்கும் என்று நினைக்கிறேன். இதையெல்லாம் உன்னால் வாங்க முடியுது. இன்னும் கோஞ்சம் காஸ்ட்லியா நாம டான்ஸ் காஸ்ட்யூம் பர்சேஸ் செய்யலாம் என்று சொன்னதுக்கு மட்டும் முடியாது என்று சொல்லிட்டல்ல நீ என்று கேட்டாள் சந்தியா .

தனது பர்சினுள் அந்த போனை பார்த்ததும் இல்ல... அது நான் வாங்கல என்றவள் அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்தவள் தனது மடியில் அந்த பர்ஸில் இருந்த திங்சை எல்லாம் கொட்டி பார்த்தாள். அதில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இருபதும் மேலும் தனது பேனா, பென்சில் மற்றும் சில்லரை இருப்பதை பார்த்தவளுக்கு எவ்வாறு ரியாக்ட் செய்வது என்றே புரியவில்லை.

ஏனெனில் அவள் அதில் வைத்திருந்தது வெறும் இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்கள் மற்றும் அவளது போன் மற்றும் ஏ.டி.எம் கார்ட் முதலியவை அதில் இல்லை .

ஆனால் புதுபோன், சார்ஜர் மற்றும் பல ஆயிரம் ரூபாய் தாள்கள் ஆகியவற்றை கண்டவளுக்கு இது தீரனின் செயல்தான் என்று உரைத்தது. வேகமாக அந்த ஐ போனை ஆன்செய்த மறுநிமிடம் நியூ மெசேஜ் வந்ததற்கான இண்டிகேட்டர் அதில் வந்ததை பார்த்தவள் மெசேஜ் ஓபன் செய்ததும் அதில் யாழி பெர்சனல் போன் நம்பர் என்று ஒருநம்பர் குறிக்கப்பட்ட்கிருந்தது.

வேகமசக காண்டாக்ட்ஸ் எடுத்து பார்த்தவளுக்கு தனது போனில் இருந்த காண்டாக்ட்ஸ் நம்பர் அனைத்தும் அதில் பதியப்படிருந்ததை பார்த்தவள் படபடப்பானாள். வேகமாக அந்த போனிலேயே தனது நம்பரை டயல் செய்தால் ஆனால் ரிங் போய்கொண்டே இருந்தது ஆனால் யாரும் அதை அட்டன் செய்யவில்லை.

முழுரிங் போய் கட்டானபின்பு அதில் மீண்டும் மெசேஜ் வந்ததை இண்டிகேட் செய்ததை பார்த்ததும் அந்த இரண்டு மெசேஜ்களும் தனது போனில் இருந்துதான் வந்திருக்கு என்பதே அவள் புத்தியில் உரைத்தது வேகமாக அதை ஓபன் செய்து பார்த்தவள் அதில் “Meet soon” … என்று இருந்ததை பார்த்ததும் திரும்பவுமா…. ? என்ற பயம் எழுந்தது யாழிக்கு.

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1212}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.