(Reading time: 20 - 40 minutes)

என் இரண்டு கேள்விகளுக்கு நீ என்ன பதில் கூறினாலும் அதை நான் அப்படியே ஏற்றுக்கொண்டு உன்னை என்னுடன் தொடர்ந்து பயணப்பட சொல்லவா.... அல்லது என் வாழ்வில் நான் விரும்பும் என் அன்பிற்கு பாத்திரமான என் உற்ற உறவை செல்வவளமுடன் என்னைவிட்டு தனித்து செல்ல பாதை ஏற்படுத்தி கொடுக்கவா... என்று முடிவு செய்யவேண்டும் என்றான் தீரன்.

அவன் வார்த்தைகளை கேட்ட இமாமி பாஸ்..., என் மேல் எனக்கு இருக்கும் நம்பிக்கையைவிட, உங்களின் மேல் எனக்கு இருக்கும் நம்பிக்கை அதிகம் .மேலும் நீங்கள் எங்கேயோ அங்கேதான் இந்த இமாமி இருப்பான் என்னுடைய கவலையெல்லாம் இதனால் என் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதனால் இல்லை, இதில் இறங்கிவிட்டால் உங்களின் நிம்மதி ஆயுளுக்கும் இனி இல்லாமல் போய்விடுமே! என்ற பயம்தான் எனக்கு.

நீங்கள் இவ்வளவு உறுதியாக இது நடக்கவேண்டும் என்று நினைத்தால் அதை நானும் உங்களுடன் சேர்ந்து செய்துமுடித்துவிடலாம் பாஸ் . இந்த நிமிசத்தில் இருந்து நான் அதற்கு தயாராகிவிட்டேன் அடுத்து நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான் இமாமி.

இமாமியின் பதிலில் நிம்மதியடைந்த தீரன், இமாமி நான்தான் உலகத்திலேயே லக்கிமேன் ஏனென்றால் உன்னைபோன்ற ஒரு உறவை நான் சம்பாதிக்கும் பாக்கியம் பெற்றுள்ளேன் என்று கூறியவன் மறுநிமிடமே, ஒகே..! இமாமி இப்போ நாம் வேகமாக செயல்படவேண்டிய நேரம்

நாம் கைவைக்கும் நபர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். எனவே அவர்கள் அலார்ட் ஆகும் முன் நீ அந்த பணத்தை நான் சொல்வதைபோல் செய்ய பிளான் செய்து வைத்துவிடு

நான் மாதவனிடம் யாழிசைக்கு டீமேட் அக்கவுன்ட் ஓபன் செய்யச் சொல்ல போகிறேன் .அதற்கு என்ன செய்யவேண்டுமென்பதை அவன் பார்த்துகொள்வான்.

 அதன் பின் என்று சில விசயங்களை செய்யச் சொல்லி இமாமியிடம் தீரன் கூறினான்.அவன் கூறிய விசயங்கள் அனைத்தும் யாழிசையை சுற்றியே செயல்படுத்தும்படி இருந்தது தீரனின் வார்த்தைகள்.

மேலும் இந்த வேலைகளை செய்யதொடகிய அந்த டுவண்டிபோர் ஹவர்ஸ்குள்ளேயே அடுத்து நீ அமெரிகாவைவிட்டு நகரவும் ஆரம்பித்து இருக்கணும் .

இதனை நீ செய்துமுடித்த மறுசெகன்ட் அமெரிக்காவில் இருந்து வெளியேறி நீ செல்லும் இடத்தை எதிரிகளுக்கு குழப்பம் ஏற்படும்படி உன் சொந்த ஊரான ஆப்ரிக்காவிற்கு போவதுபோல் பயண டிக்கட்டெல்லாம் அரேஞ் செய்து அங்கிருந்து கிளம்பிவிடு.

ஆனால் ஆப்ரிக்கா போகாமல் இடையிலேயே ஒரு இடத்தில் என்று அவ்விடத்தின் பெயரை கூறி அங்கு இறங்கி அங்கு இருக்கும் தனியார் விமான நிலையத்திற்கு செல்.

அங்கே உன் நேம் ஹெயில் என மாற்றப்பட்டு நியூ டெக் மொபைல் நிறுவன ஊழியராக நீ அடையாளப்படுத்தப்பட்ட வேலையுடன் உன் நேம் ஹெயில் என மாற்றப்பட்டு அடையாள அட்டையுடன் ஒருவன் உன்னை எதிர்பார்த்து இருப்பான். அவனுடன் விமானத்தில் ஏறி மூன்றாம் நாள் என்னுடன் இங்கே நீ இருக்கணும்.

மேலும், டீம் மெம்பர்களில் முக்கியமானவர்கள் சிலரின் பெயரை கூறிய தீரன், அவர்களை எப்போதும் நம் காண்டாக்டில் இருக்கும்படி கூறிவிடு.மேலும் நாம் தங்கபோகும் இடத்தை செக்யூர்ட் செய்ய நம் டீம் மெம்பர் சிலரை நான் இருக்கும் இடத்தில் அட்ரசை சொல்லி வரவழைத்துவிடு என்று கூறினான்.

தீரன் கூறியதை கவமாக கேட்ட இம்மாமி, நீங்க சொல்வதுபடியே எல்லாம் செய்துவிடுகிறேன் பாஸ் ஆனால் நீங்கள் சொல்லும் யாழிசை என்ற காலேஜ் கேர்ளை பற்றிய டீடைல்சை கலக்ட் செய்யச் சொன்ன விஷயத்தை பற்றி மாதவனிடம் நான் கூறியதும் அவன் கூறினான்,

ஏற்கனவே உங்களுக்கு யாழிசை பற்றிய அனைத்தும் தெரிவிக்கபட்டு விட்டதாக கூறிவிட்டான் மேலும் அந்த யாழிசை பற்றி மாதவன் கூறியதில் மிகவும் எளிமையான கேர்ள் என தெரிந்துகொண்டேன்.

அப்படிபட்டவங்களை சுற்றி நாம் அவள் அறியாமல் செய்யும் இந்த செயலால் நமக்கு ஏற்படும் நன்மை, முதலில் நம் எதிரிகளால் அடையாளம் காணப்படும் அந்த கேர்ளுக்கும் நமக்கும் சம்மந்தம் இருக்கும் என்று யாரும் நினைத்துகூட பார்க்க மாட்டார்கள். அதனால் நம்மை அவர்கள் அனுக கொஞ்சம் காலதாமதமாகும். அதற்குள் நாம் அந்த பணத்தை கொண்டே நம்மை வலுப்படுத்திகொள்ள முடியும்..

அதேபோல் இவ்வாறு நாம் செய்வதால் அவளை பாய்ன்டவுட் செய்யும் நம் எதிரிகலால் அவள் சிறைப்பிடிக்கப்பட்டால் அத்துடன் நாம் செய்த செயல் எல்லாம் வீணாகி அவளை வைத்தே அவளிடம் உள்ளதை அவர்கள் எளிதாக கைப்பற்றிவிட முடியும். அத்துடன் அவளுடைய வாழ்க்கையும் முடிந்துவிடும் என்றான் இமாமி.

அவன் அவ்வாறு கூறிய மறுநிமிடம் தீரன் கூறினான், நோ.... இமாமி என்னை மீறி அவளை யாரும் அனுக முடியாது நீ இங்கு வருகையில் அவள் என்னிடம் இருப்பாள் என்றான் தீரன்.

தனது வாழ்க்கை பாதையை வேறு ஒருவன் முடிவு செய்ததை பற்றி உணராமல் வகுப்பில் அமர்ந்திருந்த யாழிசைக்கு பாடம் எதுவுமே மனதில் ஏறவில்லை. அவளின் நினைவு முழுவதுவும் காலையில் நடந்த சம்பவத்தின் தாக்கமே நிறைந்திருந்தது.

அவளின் அருகில் அமர்ந்திருந்த சந்தியா எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் தன தோழி யாழிசை எதோநினைவிலேயே இருப்பதை கண்டவள் தனது வீட்டில் அவளுக்கு ஏற்பட்ட அனுபவத்தை நினைத்துதான் இன்னும் கலங்கிகொண்டு இருக்கிறாள் என்று எண்ணிக்கொண்டு... யாழி...அடியே யாழி ப்ளீஸ் நான் என் வீட்டிற்கு உங்களை எல்லாம் அழைத்துகொண்டு போனது என் தவறுதான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.