“அது வந்து சிஷ்டர்.... “என்று இழுத்து...
“அது நீங்க மே மு சொன்னது சிஷ்டர்... மே பி நீங்க மச்சானுக்கு பெர்பெக்ட் மேட்ச் னு சொன்னேனே... அதை சொல்லலலையா அவன்... ” என்று அசடு வழிந்தான்
“மே மு .. மே பி ... அப்படீனா “என்று புரியாமல் அவனை பார்த்தாள்....
“ஹீ ஹீ ஹீ அது வந்து ... மேக்கப் க்கு முன்னாடி , மேக்கப்க்கு பின்னாடி...
நீங்க கல்யாணத்திற்கு முன்னாடி கிளம்பி வந்தீங்க இல்லை...”
“ஆமாம் ஒரு எருமை வந்து எங்களை கூட்டிகிட்டு போச்சு.... “
“அந்த எருமை நான் தான் சிஷ்டர்... “
“ஹீ ஹீ ஹீ தப்பா எடுத்துக்காதிங்க ப்ரதர் “என்று சமாளித்தாள்
“இதெல்லாம் அரசியல் ல சாதாரணம் சிஷ்டர்... நீங்க என்ன வேணாலும் சொல்லி திட்டுங்க.. உங்களுக்கு முழு உரிமையும் இருக்கு “ என்று சிரித்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட பவித்ரா கோபமானாள்.. பின் அவனை பார்த்து
“யெஷ் மிஷ்டர் ரிஷி... அவர் இப்பதான் தட்டு தடுமாறி சொந்த கால்ல நடந்து வளர்ந்து வருகிறார்... அவருக்கு சிறந்த தொழிலதிபருக்கான விருது கூட போன வருடம் கிடைச்சிருக்கு... உங்களை மாதிரி அப்பன் சம்பாதிச்ச சொத்துல பெருமை அடிச்சுக்கல” என்று திருப்பினாள்..