அவனாக விலகி நிற்கவும் அவன் மனம் ஒத்துக்கொள்ளவில்லை... அவளின் அருகாமை தந்த சுகத்தை இழக்க விரும்பாமல் அதை ரசிக்க ஆரம்பித்தது அவன் உள்ளம்
ஓரக்கண்ணால அவள் அறியாமல் அவளை கண்டவன் அவளும் அதே நிலையில் உருகி நிற்பதை கண்டு மனதுக்குள் சிரித்துக்கொண்டான்.. அதற்குள் அவள் கொஞ்சம் விலகி நிற்கவும்
“அப்பாடா... இந்த கேடி என்னை காப்பாத்திட்டா... இன்னும் கொஞ்ச நேரம் இவ பக்கத்துல இருந்திருந்தால் என்னையே கட்டுபடுத்த முடியாமல் போய்ருக்கும்...இந்த கேடி ரொம்ப டேஞ்சரானவ போல... இனிமேல் அவள் பக்கத்துலயே போகக்கூடாது.. “ என்று புலம்பியவாறு தன் வேலையை தொடர்ந்தான்..
ஒரு முட்டையை உடைத்து அவள் அடுப்பில் வைத்திருந்த சட்டியில் ஊற்றவும் அந்த வாசத்துக்கு பாரதிக்கு திடீரென்று குமட்டி கொண்டு வந்தது... எவ்வளவு முயன்றும் கட்டுபடுத
...
This story is now available on Chillzee KiMo.
...
கண்ணெல்லாம் இருட்டி கொண்டு வந்தது.. அப்படியே கண் மூடி படுத்தாள்.. அவளுடைய மொத்த சக்தியும் வடிந்ததை போல இருந்தது....
சே!! என்ன இப்படி இருக்கு?? .. எப்படித்தான் இந்த அம்மா நாலு புள்ளைய பெத்துச்சோ!! .. “என்று நினைத்தவளுக்கு தன் அப்பா எப்படி தன் அம்மாவை தாங்கினார் என்று நினைவு வந்தது...