Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 23 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes

“இந்த செயின கொஞ்சம் ஒபன் பண்ணிக்கொடு “ என்றார்.

“என்னது மா இது??  இது அவளுக்கு எதுக்கு இப்ப?? “ என்று புரியாமல் அவரை பார்த்தான்

“ஹ்ம்ம்ம் இது உங்கப்பா போட்டிருந்த செயின் கண்ணா... இதை போட்டுகிட்டா அவரே பாரதி கூட இருக்கிற மாதிரி...  உன் இளவரசி இன்னும் ஆரோக்கியமா பிறப்பாளாம்.. “ என்று கண்ணடித்தார் பாரதியை பார்த்து,,,

“அத்த..  நீங்க பெரிய கேடி தான் “ என்று முனகியவாறு அவனுக்கு தெரியாமல் சிரித்தாள் பாரதி...

அதை வாங்கியவன் “அப்படினா முன்னையே அவள போட்டுக்க சொல்ல வேண்டியது தான... “  என்று சொல்லி அதை திறந்தான..அதற்குள் ஜானகிக்கு ஒரு ஐடியா வர

“கண்ணா.. இத அப்படியே பாரதி கழுத்துல போட்டு விட்டுடுப்பா... “ என்றார்...

அதை கேட்டு திகைத்தவன்

“நான் எப்படி மா இதை போடறது???  “ என்று புரியாமல் அவரை பார்த்தான்...

“இது வெரும் செயின் தான் கண்ணா.. அதோட நீ உன் பிரின்ஷஷ்க்கு தான் போடற.. அதனால ஒன்னும் தப்பு இல்லை.. நீ போட்டு விடு.. “ என்றார் தன் சந்தோஷத்தை மறைத்துக்கொண்டு...

“ஹ்ம்ம்ம்ம் “ என்று  முனகியவன் பாரதியின் அருகில் சென்றான்...

இதை எதிர்பார்த்திராத பாரதி சிலையாகி நின்றாள்.. அவள் கழுத்து மட்டும் அவன் முன்னே தானாக குனிந்து அவன் செயினை போட வசதியாக நின்றது...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

பாரதியின் கழுத்தில் அந்த செயினை போட்டு அதன் கொக்கியை நன்றாக அழுத்தி விட்டான் ஆதி... அவன்  கை ஷ்பரிசம் பட்டு உடல் சிலிர்த்தது பாரதிக்கு.. மனம்  முழுவதும் இனம் புரியாத பரவசம் படர்ந்தது... மௌனமாகிப் போனாள் பெண்..

ஆதிக்கு மே அவள் கழுத்தில் அவன் விரல் படவும் மின்சாரம் பாய்ந்ததை போல சிலிர்த்தது.. அவனுக்கும் அதே மனம்  முழுவதும் இனம் புரியாத பரவசம் படர்ந்தது...அவனுமே மௌனமாகிப் போனான்..

இருவரும் சிறிது நேரம் மோன நிலையில் நிற்க

ஜானகியோ அந்த முருகனுக்கு பால் அபிஷேகம் பண்ணிக் கொண்டிருந்தார் மனதில். இந்த  காட்சியை கண்டு..

மனதார இருவரையும் ஆசிர்வதித்தார்.

“முருகா!! இதே மாதிரி அவன்  அந்த மங்கல்யத்தையும் அணிவிக்க வைத்து விடு... உனக்கு காவெடி எடுக்கறேன்.. “ என்று வேண்டிக்கொண்டார்..

பின் இருவருக்கும் அந்த முருகனின் திருநீற்றை எடுத்து வைத்து விட்டார்...

சிறிது நேரத்தில் மாரி திரும்பி வரவும் அவள் அவசரமாக காலை உணவை தயாரித்து மூவரும் சேர்ந்து உண்டனர்.

பின் ஜானகி

“நான் கிளம்பறேன் பாரதி மா .. ஆதிக்கு இங்க வேலை முடிஞ்சிடுச்சாம்..இன்னையில் இருந்து சிட்டியில் இருக்கிற ஆபிஷ் ல வேலையாம்...  அவன் கூடவே நானும் கிளம்பறேன்.. ”  என்றார்.. அதை கேட்டு பாரதியின் முகம் வாடியது..

“அத்தை... இன்னும் இரண்டு நாள் இருக்கலாம் இல்லை.. “ என்றாள் ஏக்கமாக..

“ஹ்ம்ம்ம் ஆதி அங்க இருந்து தினமும் இவ்வளவு தூரம் வர முடியாதுடா.. உனக்கு மாரி கூடவே இருப்பா பாரதி மா. எதும் பிரச்சனை னாலும் உடனே போன் பண்ணு.. அடுத்த நிமிடம் வந்து நிப்பேன்.. “ என்று அவளை கட்டி அணைத்து அவள் முன் உச்சியில் முத்தமிட்டு நகர்ந்தார்...

பாரதிக்கும் அதற்கு மேல் அவரை வற்புறுத்த முடியவில்லை..

“அதற்கு தனக்கு எந்த உரிமையும் இல்லையே...தான் வந்திருப்பதே ஒரு வாடகைத்தாயக... இதுவரை அவர் வந்து தன்னை பார்த்துக் கொண்டதே பெருசாம்..இதில் இன்னும் இருக்க சொல்லி எப்படி கேட்பதாம்... “ என்று சமாதானப் படுத்திக்கொண்டாள்..

ஆதிக்கும் ஏனோ  அவளை பிரிய மனமே இல்லை... பின் கண்களால் விடை பெற்று சென்று காரை எடுத்து கிளம்பினான்..

வாயில் வரை சென்ற பாரதி அவர்கள் இருவரையும் ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள்... இதுவரை தனியாக இருந்த பொழுதிலும் இந்த இரண்டு நாட்கள்  அவர்களோடு இருந்து பழகி விட்டதால் மனம் அந்த சூழலையே மீண்டும் தேடியது...

அவள் வாயிலில் நின்று அவர்களை ஏக்கமாக பார்ப்பது காரின் பின்பக்க கண்ணாடியில் தெரிய அவள் நின்ற கோலம் அவன் மனதை பிசைந்தது...அவன் மனமோ பாரதியை விட்டு பிரிய முடியாமல் அடம் பிடித்து அவளிடமே சென்று நின்றது…   

🌺 🌺 மலரும் 🌺 🌺

Episode # 22

Episode # 24

 

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Padmini Selvaraj

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 23 - பத்மினிAdharvJo 2018-11-28 20:56
Ahem Ahem Padmini ma'am kanna verkka vaikura velaiya mattum parungal heart varaikkum vara kudadhu :no: (heart veruthu pochi ji facepalm ) Ore feelings of india epi Padmini ma'am appadi-a juice mathiri pulinjinga :clap: :clap: beautifully portrayed :hatsoff: Janu aunty vandhala thani spl thaan :dance: Suma dhool kalakitinga ji (y) vomiting session-la Bharathi-a princess pada padathinalum ivanga moonu peroda unarchigala padika nala irundhadhu….Adhi and Janu aunty ninga too bad ippadi-a baru-va enga vaipinga :angry: next epi landha ungalai ellam onnave irukka vaikanum vela :P thank you for such a lovely treat. Keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 23 - பத்மினிPadmini 2018-11-29 12:05
Thanks adharv!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 23 - பத்மினிsaaru 2018-11-28 16:17
Super paddu
Velan than veliya start pannitaro
Payapulla ponadum trumbi varuma ila thanodave kootitu poiduma waiting
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 23 - பத்மினிPadmini 2018-11-28 20:09
Thanks saaru
Reply | Reply with quote | Quote
# EMPM by PadminiSahithyaraj 2018-11-28 15:01
Pregnancy explanation and aunty's flashback superb and very touching. Aadhi Ku Princess vittu poga mudiyalaya illa Bharathiya vitta. Avan feelings avanukke puriyala. Ingeyum velanukku Vela irukku. :cool: :dance: :hatsoff: (y)
Reply | Reply with quote | Quote
# RE: EMPM by PadminiPadmini 2018-11-28 20:08
Thanks sahithya
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 23 - பத்மினிmahinagaraj 2018-11-28 14:52
wow தாருமாறு தக்காளிசோறு... :grin: :clap:
ரொம்ப சூப்பரா இருந்தது மேம்... :clap: :lol:
கர்பினி பெண்கலின் நிலையையும், மனதையும் ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க செம... :hatsoff:
அத்தையும்,மருமகளும் கொஞ்சுகிட்டது சூப்பர்.. :GL:
ஆதியின் ப்ளிங்க்ஸ் செம.. ;-) :GL:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 23 - பத்மினிPadmini 2018-11-28 20:06
Thanks mahi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 23 - பத்மினிNaseema Arif 2018-11-28 12:34
😍😍😍
Evlo pages neenga eluthinalum pathathu
Just want to read more and more
Keep writing Mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 23 - பத்மினிPadmini 2018-11-28 19:48
:no: Naseema
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 23 - பத்மினிPadmini 2018-11-28 20:02
Sorry. Pressed wrong emoji 8) .supposed to say :thnkx:
Reply | Reply with quote | Quote
# EMPMAkila 2018-11-28 11:48
Hi

Nice and EMOTIONAL epi.

Thank you very much for nice and very emotional epi with many pages.

Eppothan andha Velan, Adhi and Bharathi e sehtu vaikka poraru.

But leaving Bharathi alone is some what very pathetic and sorrow emotional feeling.

As a whole , it is mix of both happy and sad epi.

Thank you very much for the nice updation
Reply | Reply with quote | Quote
# RE: EMPMPadmini 2018-11-28 17:27
Thank you so much Akila.. :-)
As you pointed ,this week is little emotional ... I felt tears in my eyes while writing Bharathi situation ..but i think it’s all our Vel’s move to change Adhi :grin: keep reading and post your Comments... :yes:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 20 Feb 2019 18:39
அதிகாலை....

வெளியில் பனிக்காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தது.. பாரதி அயர்ந்து தூங்கிகொண்டிருந்தாள்... அந்த அறையின் கதவை திறந்து கொண்டு அந்த நெடியவன் உள்ளே வந்தான்.. உள்ளே வந்தவன் அவளின் அருகில் வந்து கையில் கொண்டு வந்திருந்த காபியை அருகில் இருந்த டீபாயில் வைத்தான்... பின் அவளை நோக்கி குனிந்து

“ஹே ரதி.. எழுந்திருடீ.. காலைல விடிஞ்சி மணி எட்டாயிருச்சு பார்...இன்னும் என்ன தூக்கம்?? “ என்று அவளை எழுப்பினான்

***********

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ha-malare-padmini-35
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 13 Feb 2019 18:35
மூன்று மாதத்திற்கு பிறகு:
“பாரதி மா.. இன்னுமா ரெடியாகற.. அந்த புடவையை எவ்வளவு நேரம் தான் கட்டுவா... சீக்கிரம் ரெடியாகி வாடா.. .எல்லாரும் வெய்ட் பண்றாங்க பார்... “ என்று கத்திகொண்டே ஜானகியின் அறைக்குள் வந்தார் ஜானகி....

பாரதியும் தன் தந்தை வாங்கி கொடுத்திருந்த அந்த பட்டு புடவையை கடந்த அரை மணி நேரமாக கட்டி கொண்டிருக்கிறாள்... அது அவள் பேச்சை கேட்காமல் அடம் பிடித்து கொண்டிருந்தது... கொஞ்ச நேரத்துக்கு மேல் சளித்து போய்,

“அத்தை.. இத எனக்கு கட்டவே வரலை... முந்தி எடுத்து பின் போடவே வரமாட்டேங்குது.. நீங்க கொஞ்சம் கட்டி விடுங்களேன்.. “

*************

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ha-malare-padmini-34
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 07 Feb 2019 05:13
ஆதி மஹா வளைகாப்பை பார்த்து வந்த பிறகு தன் மகளுக்கும் அது மாதிரி விழா வைக்கனும் என்று ஆரம்பிக்க, ஜானகிக்கு திருமணத்தின் பொழுதே பாரதி அவள் பெற்றோர்கள் இல்லாமல் மனம் வாடியது நினைவு வந்தது.. அட்லீஷ்ட் இந்த பங்சனுக்காவது அவள் பெற்றோர்களை அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்தார்..

அப்பொழுது உடனே போய் உண்மையை சொல்ல முடியாது.. தர்மலிங்கம் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று தெரியாமல் எதுவும் சொல்ல முடியாது என்று தெரிந்து அதை அப்போதைக்கு தள்ளி வைத்தார்...

*******************

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ha-malare-padmini-33
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 31 Jan 2019 04:26
ஒன்பதாவது மாதம்:

தன் திருமணப் பட்டு புடவையை கட்டி முன்னால் இருந்த பிளிட்ஷை அழகாக மடித்து எடுத்து தன் மேடிட்டிருந்த வயிற்றில் சொருகினாள் பாரதி...

கட்டி முடித்தவள் கண்ணாடியில் பார்க்க, அந்த பட்டு புடவை அவ்வளவு அழகாக இருந்தது அவளுக்கு... திருமணத்தன்று இருந்த மன உளைச்சலில் அப்பொழுது அந்த புடவையை ரசிக்க முடியவில்லை.. அதற்கு பிறகு இப்பொழுது தான் கட்டுகிறாள் அந்த புடவையை..

***************

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ha-malare-padmini-32
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 24 Jan 2019 02:30
ஆதி தன் இளவரசியிடம் உன் தாத்தா பாட்டி என்று பாரதியின் பெற்றோர்களை அறிமுகப்படுத்த, அதை கேட்டு உறைந்து சிலையாகி நின்றாள் பாரதி இன்ப அதிர்ச்சியில்..

ஆதி இதுவரைக்கும் அவனையும் ஜானகி மற்றும் சுசிலா வை மட்டுமே அவன் குழந்தையிடம் அறிமுகப்படுத்தி இருக்கிறான்... பாரதியை பற்றி எதுவும் சொல்லியதில்லை.. ஏன் இதுவரைக்கும் அவளை அவன் குழந்தைக்கு தாயாக அறிமுக படுத்தியதில்லை...

வழக்கமாக ஒரு தாய்தான் தன் குழந்தைக்கு அதன் அப்பாவையும் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அறிமுகபடுத்துவாள்.. இங்கு அந்த கதையே மாறி இருந்தது..

***********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ha-malare-padmini-31

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top