Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 06 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes

”மீனா அமைதியா இரு, எதுக்காக அவரை வெறுப்பேத்தற ஆமா நீ இங்க என்ன செய்ற”

“சாப்பிட வந்தேன் அக்கா”

“அப்பாவோட சாப்பிடாம இங்க வந்தா எப்படி”

“அங்க அத்தை இருக்காங்க அதான், அதுவும் இல்லாம டாக்டர் அத்தான் என்கூட சாப்பிடறதா சொன்னாரா அதான் வந்தேன், நாங்க நிலா சாப்பாடு சாப்பிடப் போறோம் அக்கா” என  குதூகலமாகச் சொல்ல ஈஸ்வரனோ

”வாட் நிலா சாப்பாடா அப்படின்னா”

“இன்னிக்கு நிறைஞ்ச பௌர்ணமி, சின்ன வயசுல என் அப்பா முற்றத்தில என்னை உட்கார வைச்சி நிலாவை காட்டிக்கிட்டே கதை சொல்வாரு, நானும் அம்மாவுமா சேர்ந்து கதை கேட்டுக்கிட்டே சாப்பிடுவோம்”

“ஓ அப்படியா” என வியந்தான் நிரஞ்சன்

“ஆமாம் இன்னிக்கு பௌர்ணமி, அதோட டாக்டர் அத்தான் என் கூட டின்னர் சாப்பிடறேன்னு சொன்னாரா, அதான் கிளம்பி வந்துட்டேன், சரி சரி நீங்க சாப்பிடுங்க மிஸ்டர் ஈஸ்வரன், நான் அத்தானை கூட்டிட்டுக் கிளம்பறேன்”

“எங்கப் போற ஓட்டலுக்கா”

“இல்லை மொட்டை மாடிக்கு” என சொல்லியவள் நிரஞ்சனைப் பார்த்து

”அத்தான் வாங்கத்தான் மொட்டை மாடிக்கு போய் பௌர்ணமி நிலா வெளிச்சத்தில கூட்டாஞ்சோறு சாப்பிட்டுக்கிட்டு கதை பேசலாம் சூப்பரா இருக்கும் அத்தான்” என சொல்ல நிரஞ்சனும் சந்தோசத்துடன் பலமாக தலையாட்டியவன் அவளிடம்

”அது என்ன கூட்டாஞ்சோறு” என கேட்டான் நிரஞ்சன்

“ஓ அதுவா இருக்கற சாதம், சாம்பார், கூட்டு, பொறியல், அப்பளம்னு எல்லாத்தையும் ஒண்ணா கலந்து கலவை சாதமாக்கி ஒவ்வொரு உருண்டையா உருட்டி தர தர அதை வாங்கி ஆ போட்டு சாப்பிட்டா சூப்பரா இருக்கும் அத்தான் வாங்க போலாம்” என சிரித்தபடியே சொல்லிவிட்டு அவள் வெளியே செல்ல அவள் பின்னாடியே நிரஞ்சன் செல்வதைக் கண்டு ஈஸ்வரன்

”டேய்” என கத்த சட்டென நின்ற நிரஞ்சனோ ஈஸ்வரனின் கோபத்தை கூலாக்க எண்ணி

”அண்ணா நீயும் வாயேன், ரூம்லயே ஏன் அடைஞ்சிக் கிடக்கற கொஞ்சம் வெளிக்காத்து பட்டா உடம்புக்கு நல்லது, டாக்டரா என்னோட அட்வைஸ் இது வாண்ணா” என சொல்ல அவன் எப்போதடா தன்னை கூப்பிடுவான் என நினைத்துக் கொண்டிருந்தானோ என்னவோ சட்டென கட்டிலை விட்டு துள்ளிக் குதித்துக் கொண்டு முதல் ஆளாக அறையை விட்டு வெளியேறினான் ஈஸ்வரன்.

நிரஞ்சனோ ஈஸ்வரனின் செயலைக் கண்டு திகைத்து நின்றவன், பாவமாக எதையோ பறிகொடுத்ததைப் போல நின்றுக் கொண்டு இருந்த ஆனந்தியைக் கண்டு வருத்தப்பட்டான்

”அடப்பாவி அண்ணா உனக்குன்னு இருக்கற பிகர் இங்க தனியா இருக்கு, இதை விட்டுட்டு உன்னை வேணும்னே வெறுப்பேத்தறவளை தேடிப் போறியே, எனக்குன்னு அவள் ஒருத்தி இருக்கா அது பொறுக்கலையா உனக்கு, இந்த ஆனந்தி வேற பாவம் சமாதானம் செய்யலாம்” என நினைத்தபடியே ஆனந்தியிடம் வந்தான்

”ஆனந்தி கவலைப்படாத அண்ணாவுக்கு இன்னும் இங்க செட் ஆகலை அதான் இப்படியிருக்காரு, செட் ஆனதும் உன்கூட நல்லா பேசுவாரு” என சொல்ல

”நிஜமாவா” என்றாள் ஆசையாக அவளது கண்களில் தெரிந்த ஏக்கத்தைக் கண்ட நிரஞ்சனோ ஈஸ்வரனது கனவுகளைக் கண்டு எதையோ யோசித்துவிட்டு

”ஆனந்தி எதுக்கும் நீ உன் மனசுல என் அண்ணன் மேல ரொம்ப ஆசை வைச்சிக்காத, உன் நல்லதுக்குதான் சொல்றேன் தப்பா நினைக்காத” என சொல்ல அவள் முகம் சூம்பிப் போனது. அதைப் பார்க்கவே பாவமாக இருந்தது அவனுக்கு

”கவலைப்படாத ஆனந்தி முதல் நாள் இல்லையா அண்ணாவுக்கு நிறைய டென்ஷன், டயர்டா வேற இருக்காரு, புது இடம் புது ஆளுங்க என்னைப் போல அண்ணா யாரோடவும் சீக்கிரமா மிங்கில் ஆனதில்லை, எல்லா விசயத்திலயும் தனித்துவமா இருப்பாரு, தனியாளா நிப்பாரு அதான் போக போக சரியாயிடும் நீ போய் சாப்பிடு ஆனந்தி”

“பரவாயில்லை நீங்களும் மொட்டை மாடிக்குதான் போறீங்களா”

“ஆமாம் அங்க எனக்காக மீனு காத்திருப்பா”

”அவள் உங்க கூட பழகறது வெறும் விளையாட்டுக்குத்தான், அவரை வெறுப்பேத்த உங்ககிட்ட பழகறதா என்கிட்ட சொன்னா நீங்களும் மனசுல மீனு மேல எந்த ஆசையையும் வளர்த்துக்காதீங்க”

“எனக்கும் அந்த விசயம் நல்லாவே தெரியும் ஆனந்தி ஆனா, எனக்கு இங்க பொழுது போக வேணாமா சொல்லு, அண்ணா ப்ரான்ச் ஆரம்பிக்கறப்ப எனக்கு வேலை வந்துடும், அதுவரைக்கும் ஜாலியா மீனுவோட பேசி பழகறேனே, அவள் அண்ணாவை வெறுப்பேத்த என்கிட்ட பேசினா கூட எனக்கு அவள் பேச்சு பிடிச்சிருக்கு சரி வா நாமளும் மொட்டை மாடிக்குப் போவோம்” என சொல்லவும் அவளும் சரியென தலையாட்டிவிட்டு முன்னே செல்ல அவள் பின்னாடியே நடந்தான் நிரஞ்சன்

About the Author

Sasirekha

Sasirekha

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 06 - சசிரேகாnithicloudy 2018-12-21 14:11
Nice epi mam .antha kanavula vantha ponnu meenu va irupangalo :Q: waiting mam.meenu and doc dialogue nalla iruku.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 06 - சசிரேகாAdharvJo 2018-12-19 23:07
:D :lol: ivaroda kanavu mudinja piragu kodukura reaction mattum sema fun sasi ma'am :P Meenu ippo eppadi react panuvanga :Q: Ivaroda kanvu oru flow va pogama ippadi varudhey madam ji hope madhavan is not baby bro ;-)

Scene sinappa dialogue ellam nala adichittu mudhal ala kuttanchoru ellam sapittu thoonga poraru :grin: pavam baby bro en pa indha oravanjanai? But ivaru meenu vishyathil thelivaga irupadhu :cool: however I pity anandhi baby bro solliyum avanga purinjikitta mathiri theriyalaiye ?

Dr sir ninga baby-a thaan pina oru doctor k household work seitha fit aga irukalamn kudava theriyadhu still ninga sema downto earth 8) Cool and interesting update sasi ma'am :clap: :clap: look forward to know more abt padmavati :yes: thank you and keep rocking...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 06 - சசிரேகாmadhumathi9 2018-12-19 20:27
Nice epi. :clap: romba azhaga, arumaiya irunthathu.waiting ti read more. :thnkx: 4 this epi. :GL: :clap: :clap: (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 06 - சசிரேகாmahinagaraj 2018-12-19 18:20
அச்சோ சோ கியூட்... :clap: :clap:
ஈஸ் அன் மீனு ரெண்டு பேரும் பேசிகரது அவ்வளவு அழகா இருக்கு.. wow :lol: :GL:
ஆனந்திக்கு கொஞ்சம் புரியவையுங்க மேம்.. பொண்ணு ரொம்ப ஆசை வச்சு ஏமாந்திர போகுது.. :sad: :eek:
நிலா சோறு செம..ஈஸ்வர் செம கேட தான்.. ;-) :grin:
:thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top