Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 06 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes

“சொல்கிறேன் கேள், என் பெயர் தர்னேந்திரன் சுதர்சனனது இறப்பிற்கு காரணமான உன்னை பழிவாங்க இங்கு வந்தேன், ஆனால் இங்கு வந்த பின்பு உன்னுடைய பேச்சும் செயலும் எனக்கு ஒன்றை புரியவைத்தது, சுதர்சனனது இறப்பிற்காக நீ வருத்தப்படுகிறாய், ஒருவேளை நீ பிழைத்தால் தாராளமாக என் பெயரை மாதவனிடம் சொல்லிக்கொள், உன்னை பார்த்ததாலே ஒருவனது கண்களை பறித்தவனாயிற்றே, இன்று உன்னை பார்த்தது மட்டுமல்ல உன்னை தொட்டு தூக்கியிருக்கிறேன், மாதவன் என்னை என்ன செய்கிறான் என நானும் பார்க்கிறேன்” என கோபாவேசமாக சொல்லியவன் பக்கத்தில் இருந்த அழகிய ஜாடியை எடுத்து திடீரென்று தரையில் போட்டு உடைத்தான். இந்தச் சத்தம் கேட்டு யார் வந்தாலும் பத்மாவதியின் நிலையைக் கண்டு அவளை காப்பாற்றட்டும் என நினைத்தான், அவன் நினைத்தது போலவே அந்த அறைக்கு வெளியே ஆட்கள் நடக்கும் சத்தம் கேட்கவே திருப்தியாக அங்கிருந்து வெளியே செல்ல நினைத்தவன் வந்த வழியே நடக்கலானான். பத்மாவதியோ

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”தர்னேந்திரா” என ஈனஸ்வரத்தில் அழைத்தாள். அவளது அழைப்பில் இருந்த வலியைக் கண்டவன் திரும்பி வந்து அவள் முன் நின்றான்

”என்னையும் அழைத்துச் செல், எனக்கு இந்த சிறையில் வாழ விருப்பமில்லை, ஒன்று என்னை கொன்றுவிடு இல்லை என்னை அழைத்துச் சென்றுவிடு” என அவள் சொல்வதைக் கேட்ட தர்னேந்திரன் குழம்பினான். அதற்குள் அந்த அறைக்கு வெளியே பலத்த சத்தங்கள் கேட்கவும்

”நீ ஒரு கோழை, உன்னை நான் ஆதரிக்கமாட்டேன், வீரமாக நீ பேசியிருந்தால் நிச்சயம் நீ சொன்னதை நான் கேட்டிருப்பேன், செய்தும் இருப்பேன். பரிதாபப்பட்டு உன்னை இங்கிருந்து நான் அழைத்துச் சென்றாலும், இறக்கும் வரை நிம்மதியான வாழ்க்கை உனக்கு அமையாது, பத்மாவதி உன் அழகுதான் என்றுமே உனக்கு ஆபத்து அதை மறவாதே” என சொல்லிவிட்டு அவசரமாக உப்பரிகை வழியே இறங்கியவன் வந்த வழியாகவே மாளிகையை விட்டு வெளியேறி அவசரமாக தனது இல்லத்திற்குச் சென்று சேர்ந்தான். தனது அறைக்குச் சென்று படுத்தவன் கண்கள் மூடி யோசித்தான்

”பத்மாவதி பிழைத்திருப்பாளா மாட்டாளா என்னவாகியிருப்பாள் அதை எப்படி தெரிந்துக் கொள்வது. கண்கள் கலங்க தன்னை அழைத்துச் செல்லும்படி சொன்னாளே அந்த மாளிகையை சிறை என்றாளே, நான் வேறு அவளை கோழை என்று பேசிவிட்டேனே, நான் பத்மாவதியை காணச் சென்றது மாதவன் அறிந்தால் என் நிலைமை என்னாகும், அதை விட அவளை விட்டுவிட்டு வந்தது பெரிய தவறு அவளை அழைத்து வந்தாலும் அவளை எவ்வளவு நாட்கள் என்னால் பாதுகாக்க முடியும், ஆண்டவா பத்மாவதியை காப்பாற்று அவள் ஒன்றும் அறியாதவள், நிரபராதி அவளைக் காப்பாற்று”

”அவளை காப்பாற்று அவளை காப்பாற்று” என ஈஸ்வரன் கைகூப்பி கண்கள் மூடி படுக்கையில் வேண்டிக் கொண்டிருப்பதையே கண் கொட்டாமல் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் மீனா, மெல்ல அவனது தோளை உலுக்கினாள் அவனோ அசையாமல்

”காப்பாற்று காப்பாற்று” என அவன் தூக்கத்தில் புலம்ப

”என்ன இது நேத்தும் காப்பாத்த சொல்லி உளறினாரு, இன்னிக்குமா நம்மளை விட இவருக்கு நிறைய கனவு வருதே, ஒருவேளை பேய் கனவா இருக்குமோ என்ன செய்யலாம் சீ பாவம் கனவுல வந்த பேயால இப்படியாயிட்டாரு போல” என நினைத்தவள் அவனது உடலை பலமாக அசைத்து உலுக்கி எழுப்ப சட்டென கண்விழித்து அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தவன் எதிரே இருந்த மீனாவைக் கண்டு சட்டென அவளது கையை பிடித்து இழுத்து தன்னுடன் இறுக்கமாக அணைத்துக் கொண்டு

”காப்பாத்து காப்பாத்து” என உளறலானான் ஈஸ்வரன்              

Episode # 05

Episode # 07

தொடரும்...

Go to Kaanum idamellam neeye story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 06 - சசிரேகாnithicloudy 2018-12-21 14:11
Nice epi mam .antha kanavula vantha ponnu meenu va irupangalo :Q: waiting mam.meenu and doc dialogue nalla iruku.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 06 - சசிரேகாAdharvJo 2018-12-19 23:07
:D :lol: ivaroda kanavu mudinja piragu kodukura reaction mattum sema fun sasi ma'am :P Meenu ippo eppadi react panuvanga :Q: Ivaroda kanvu oru flow va pogama ippadi varudhey madam ji hope madhavan is not baby bro ;-)

Scene sinappa dialogue ellam nala adichittu mudhal ala kuttanchoru ellam sapittu thoonga poraru :grin: pavam baby bro en pa indha oravanjanai? But ivaru meenu vishyathil thelivaga irupadhu :cool: however I pity anandhi baby bro solliyum avanga purinjikitta mathiri theriyalaiye ?

Dr sir ninga baby-a thaan pina oru doctor k household work seitha fit aga irukalamn kudava theriyadhu still ninga sema downto earth 8) Cool and interesting update sasi ma'am :clap: :clap: look forward to know more abt padmavati :yes: thank you and keep rocking...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 06 - சசிரேகாmadhumathi9 2018-12-19 20:27
Nice epi. :clap: romba azhaga, arumaiya irunthathu.waiting ti read more. :thnkx: 4 this epi. :GL: :clap: :clap: (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 06 - சசிரேகாmahinagaraj 2018-12-19 18:20
அச்சோ சோ கியூட்... :clap: :clap:
ஈஸ் அன் மீனு ரெண்டு பேரும் பேசிகரது அவ்வளவு அழகா இருக்கு.. wow :lol: :GL:
ஆனந்திக்கு கொஞ்சம் புரியவையுங்க மேம்.. பொண்ணு ரொம்ப ஆசை வச்சு ஏமாந்திர போகுது.. :sad: :eek:
நிலா சோறு செம..ஈஸ்வர் செம கேட தான்.. ;-) :grin:
:thnkx:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


sasi's Avatar
sasi replied the topic: #1 03 May 2019 07:49
நன்றி
ராணி's Avatar
ராணி replied the topic: #2 02 May 2019 19:22
சசிரேகா உங்களின் அம்மா போல எண்ணி எழுதுகிறேன். உங்கள் கதை அருமையாக இருந்தது. உங்களின் எல்லா கதைகளையும் படித்திருக்கிறேன். உங்கள் கதை இயல்பாக உள்ளது. படித்ததும் புரிந்துக் கொள்ளும் அளவிற்கு எளிய நடையில் வார்த்தைகள் இருக்கிறது. இதை என் வீட்டில் சொல்லவும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் (10 பேர்) உங்கள் கதைகளை விரும்பி படிக்கிறோம் எந்த இடத்திலும் படிக்கும் வரிகளோ வார்த்தைகளோ எங்களை கூச்சப்பட வைப்பதில்லை எந்தவித அலங்கார வார்த்தைகளும் அதிகப்படியாக இல்லை நடுத்தர குடும்பங்களில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை முறை பேச்சு வழக்கு வசதி வாய்ப்புகள் வீட்டில் புழங்கும் நடைமுறை பழக்க வழக்கங்கள் எளிய வாழ்க்கை முறை என நீங்கள் எழுதும் கதைகளின் எழுத்து நடை என் குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் இப்படியே தொடர்ந்து எழுத எங்கள் அனைவரின் ஆசிர்வாதங்கள் - ராணியும் என் குடும்பத்தினரும்
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 01 May 2019 19:24
தஞ்சையில் உள்ள மீனுவின் பழைய வீட்டில்

ஈஸ்வரன் தர்னேந்திரன் பத்மாவதி முடிவைப் பற்றிய கதையை கூறி நிப்பாட்டவும் சுவாதி தன் அண்ணனிடம்

”அண்ணா ஈஸ்வரன் சொல்றதைப் பார்த்தா ரத்தினங்கள் பரதன்கிட்ட இருக்கும்னு தோணுது”

“அப்ப பரதன் யாரு” என பிரபு கேட்க உடனே நிரஞ்சனோ

”ஓ உங்களுக்கு தெரியாதா நான் சொல்லவா” என கேட்க மற்றவர்களும் சொல்லு என தலையாட்டவும் அவனும் தனக்கு தெரிந்த பரதன் பற்றிய விவரங்களைக் கூறினான்

*****

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-neeye-sasirekha-25
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 24 Apr 2019 19:01
தஞ்சையில் உள்ள மீனாட்சியின் வீட்டில்

2 நாள் ஆராய்ச்சியின் முடிவில் ஈஸ்வரனும் நிரஞ்சனும் பெரிய உண்மையை கண்டுபிடித்தார்கள். அதன் படி ஈஸ்வரன் சொல்ல சொல்ல நிரஞ்சன் ஒரு பெரிய சார்ட்போர்டு ரெடி செய்தான். அதில் பல பல கோடுகளை கிளைகளாக வரைந்து முடித்தான்.

முழுவதும் வரைந்த பின் நிரஞ்சன் ஈஸ்வரனிடம் அதைக் காட்டினான்

”அண்ணா சரியா போச்சா பாருங்க” என அந்த சார்ட் போர்டை நீட்ட ஈஸ்வரனும் அதைப் பார்த்தான். அம்புக்குறிகளும் கோடுகளும் பெயர்கள் என பேமிலி ட்ரீ போல வரைந்திருந்தான். அதன்படி

***********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-neeye-sasirekha-24
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 17 Apr 2019 20:19
சென்னை நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை

ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பிய ஒரு மினிவேன் சென்னையை நோக்கிச் செல்லும் ஹைவே ரோடில் வேகமாக சென்றுக் கொண்டிருக்க அதில் மயங்கிய நிலையில் ஈஸ்வரன் ஒரு சீட்டில் படுத்திருந்தான். அவன் விழுந்துவிடக் கூடாதென கயிறுகளால் அவனை சீட்டோடு கட்டி வைத்திருந்தார்கள் இருவர், அவர்கள் பார்க்கவே நடுத்தர வயது உடையவர்களாக இருந்தார்கள்.

”தூங்கிகிட்டே இருக்கானே எப்பதான் பேசுவான்” என அதில் இருந்த ஒருவர் கோபமாக கத்த அதற்கு மற்றவர்

*********

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-neeye-sasirekha-23

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top