Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 17 - ராசு - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 17 - ராசு

handsTogether

புயல் வந்து ஒரு மாதம் ஓடிவிட்டது.

இதற்குள் என்னவெல்லாம் நடந்துவிட்டது.

நகரத்திற்கு மின்சாரம் வரவே இரண்டு வாரங்கள் ஆயின. இன்னும் சில கிராமங்களுக்கு மின்சாரம் வரவேயில்லை.

மக்களுக்கு இப்போது புதிதாய் ஒரு வேலை உண்டாகியிருந்தது. மரம் அறுக்கும் தொழில்.

தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் தொழிலை செய்யும் தொழிலாளிகளுக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்காமல், பிழைப்பிற்காக அவர்களும் இந்த வேலையைத் தொடங்கிவிட்டனர்.

குழந்தைபோன்று வளர்க்கப்பட்ட மரங்கள் துண்டு துண்டாக வெட்டப்படுவதை காண சகிக்க முடியவில்லை.

ஒரு வழியாக மரங்கள் எல்லாம் அகற்றப்பட்டு புதியதாய் நடப்பட்டன. சரவணன் துவண்டு விடாமல் இதிலேயே மூழ்கிவிட்டான்.

மரங்கள் வளரும் வரையில் ஊடுபயிராக உளுந்து, கடலை, எள் போன்ற தானிய வகைகளை பயிரிட்டால், முன்போல் இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு வருமானம் வரும். வீட்டு உபயோகத்துக்கும் வாங்கத் தேவையில்லை. மகனது தெளிவைக் கண்டு சண்முகமும் உற்சாகமாய் உழைக்க ஆரம்பித்துவிட்டார்.

கருப்பையாதான் எல்லா வேலைகளுக்கும் பணம் ஏற்பாடு செய்து தந்தான்.

ஊருக்கு வந்தவன் தம்பியிடம் தெரிந்த தெளிவைக் கண்டு மகிழ்ந்தான்.

வீடு, வேலை என்று இயந்திரம் மாதிரி மற்றவர்கள் இருப்பது கண்டு அவர்களுக்கு ஒரு மாற்றம் வேண்டும் கருப்பையாவிற்கு தோன்றியது.

காலை உணவின்போது அவன் பேச்சை ஆரம்பித்தான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“எந்திரன் படத்தோட இரண்டாவது பாகமா 2.ஓ வந்திருக்குன்னு உங்களுக்குத்தான் தெரியுமே. நாம இன்னிக்குப் போகலாமா?”

சிறியவர்கள் அதை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பெரியவர்கள் வரவிருப்பப்படவில்லை.

அவர்களின் மாமா மகள் மேனகா கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறாள். இப்போது பருவத்தேர்வு நடந்து முடிந்து அவளும் விடுமுறைக்காக அத்தை வீட்டுக்கு வந்திருந்தாள். கூடவே அவளது தம்பி பாபுவும் வந்திருந்தான். கவிதாவும் தாய் வீடு வந்திருந்தாள். பிரபாகரன் வரவில்லை என்றுவிட்டான்.

சிவரஞ்சனி எதார்த்தமாக மனோரஞ்சனியிடம் சொல்ல அவள் தனது தந்தையிடம் சொல்லி காருடன் வந்துவிட்டாள்.

அதனால் அனைவரும் காரிலேயே சென்றனர்.

படம் பார்க்கச் செல்லும்போது இருந்த ஆர்வம் படம் முடிந்து வெளிவந்த உடன் யாருக்குமே இல்லை. முகத்தில் ஒருவித இறுக்கம் இருந்தது.

யாரும் படத்தைப் பற்றியும் பேசிக்கொள்ளவில்லை.

படம் பார்த்ததினால் வந்த மனஅழுத்தம் இரண்டு மூன்று நாட்கள் வரையிலும் மனதை விட்டு அகலவில்லை.

படம் பார்க்கச் செல்வதற்கு முன்பு ஹிந்தி நடிகர் அக்சய்குமார் வில்லன் என்றுதான் நினைத்திருந்தனர். ஆரம்பக் காட்சிகளிலேயே செல்போன் பறந்து செல்லும்போது அதில் சிட்டுக்குருவியைக் காண்பிக்கும்போதே இது நாம எதிர்பார்த்தது மாதிரியில்லை. என்னவோ முக்கியமான விசயத்தைச் சொல்ல வருகிறார்கள் என்று தோன்றியது.

எப்போது அக்சய்குமாரை வயதான பேராசிரியர் தோற்றத்தில் காண்பித்தார்களோ அப்போதே இவரையா வில்லன் என்று சொன்னார்கள் என்ற எண்ணம் எழுந்தது.

பறவையினங்களுக்காக அவர் போராடும்போதும், அவற்றிற்காக உயிரை விட்டபோதும், படத்தின் இறுதியில் அந்தப் பறவையினங்களுக்காகவே தனது ஆத்மாவையும் விட்டுக்கொடுப்பது என்று அதில் அவரைக் காணும்போது அவர்தான் அந்தப் படத்தின் கதாநாயகன் என்று சொல்லத்தோன்றியது.

எத்தனை பேர் எத்தனை விதமாய் சொன்னாலும் நாம் அதைக் கேட்டுவிட்டு இதுவும் கடந்து போகும் என்று கடந்து போய்க்கொண்டே இருக்கிறோம்.

எந்த ஒரு விசயமும் நம்மை நேரடியாகப் பாதிக்காத வரைக்கும் அதன் வீரியம் பற்றித் தெரிந்து கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ நாம் தயாராக இல்லை.

செல்போனிலால் வெளிவரும் கதிர்வீச்சை ஒருவேளை கண்ணால் காண நேர்ந்தால் மட்டுமே நாம் அதன் பாதிப்பைப் பற்றி உணர்வோம் போலிருக்கிறது.

அன்றைய இரவில் உறங்கிக்கொண்டிருக்கும்போதே சிவரஞ்சனி அலறி எழுந்தாள். அவள் அலறல் சத்தம் கேட்டதுமே அவனும் விழித்துவிட்டான்.

எழுந்தவள் தன் மேலே தட்டிவிட்டுக்கொண்டாள்.

“ரஞ்சிம்மா. என்னாச்சு? என்ன தட்டி விடறே?”

“மாமா. சாம்பல் மாமா.”

சொன்னவள் மேலும் மேலும் தட்டிவிட்டுக்கொண்டே இருந்தாள். தன் மேல் மட்டும் இல்லாமல் கட்டிலிலும் தட்டிவிட்டாள்.

முகம் தெளிவில்லாமல் இருந்தது.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 17 - ராசுmaya deva 2019-01-08 09:01
super super.....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 17 - ராசுRaasu 2019-01-08 22:54
Thank you Maya Deva.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 17 - ராசுsaaru 2019-01-07 21:42
SUPER rasu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 17 - ராசுRaasu 2019-01-07 22:55
Thank you Saaru.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 17 - ராசுAdharvJo 2019-01-07 20:32
wow double dhamaka :dance: Mr BB ungalukku shy feel super and such an emotional person ah ninga so cute :cool: Excellent update Rasu ma'am :hatsoff: Parents aga ana piragu kids point of view-la parkanumn sonadhu really nice :clap: :clap: But ore padal-la rich ana mathiri ore epi la oru varusham ottitingale ini unga vision 2020 enan yosika vendum pole irukke rasu ma'am :P most important as always festival flavor is heart warming...it gives a spl feel to read ur festival updates :yes: thank you and keep rocking. Bogi panigai andru parkalam 8)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 17 - ராசுRaasu 2019-01-07 22:52
Thank you Adharv.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 17 - ராசுSAJU 2019-01-07 19:24
SUPER UD
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 17 - ராசுRaasu 2019-01-07 22:48
Thank you Saju.
Reply | Reply with quote | Quote
# Nee irundhal naan iruppenAruna 2019-01-07 18:37
Nice epi mam :clap:
Reply | Reply with quote | Quote
# RE: Nee irundhal naan iruppenRaasu 2019-01-07 22:46
Thank you Aruna.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 17 - ராசுmadhumathi9 2019-01-07 18:32
:clap: nice epi. :clap: waiting to read more. :thnkx: :thnkx: 4 this epi. :GL: (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 17 - ராசுRaasu 2019-01-07 22:44
Thank you Madhumathi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 17 - ராசுmahinagaraj 2019-01-07 18:28
வாவ்.. வாவ்.. :clap: :lol: :GL:
கதை ரொம்ப வேகமா.. அழகா போகுது.. சீக்கிரம் முடியப்போகுதா... :Q:
கருப்பு சிவாகிட்ட பேசுன வார்த்தைகள்ல ஏதாவது மர்மம் இருக்கா.. :Q:
சூப்பர் மேம்.. :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 17 - ராசுRaasu 2019-01-07 22:38
Thank you Mahinagaraj.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 17 - ராசுrspreethi 2019-01-07 18:01
Super update... Oru episode yenna badhikkara kalavayana unarvugal... Cell phone kadhir veechu kannala pathadhan puriyumo... Unmai... Gramathula kondadra ponga... Niraya theriyala aana naa anga irundha sandhosham... Romba mukyama kadhal la suyanalam irukalam petrorgal aana pinna kandipa irukka kooda dhu nu badhicha family patthi solrirundhadhu yevlo nijam... Nanum adikadi idhupola kelvi pattu kobapatruken andha pillaingala ninachu varutha patruken...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 17 - ராசுRaasu 2019-01-07 22:35
Thank you Preethi.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top