Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes
Pin It

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா

Kaanum idamellam neeye

சென்னை நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை

ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பிய ஒரு மினிவேன் சென்னையை நோக்கிச் செல்லும் ஹைவே ரோடில் வேகமாக சென்றுக் கொண்டிருக்க அதில் மயங்கிய நிலையில் ஈஸ்வரன் ஒரு சீட்டில் படுத்திருந்தான். அவன் விழுந்துவிடக் கூடாதென கயிறுகளால் அவனை சீட்டோடு கட்டி வைத்திருந்தார்கள் இருவர், அவர்கள் பார்க்கவே நடுத்தர வயது உடையவர்களாக இருந்தார்கள்.

”தூங்கிகிட்டே இருக்கானே எப்பதான் பேசுவான்” என அதில் இருந்த ஒருவர் கோபமாக கத்த அதற்கு மற்றவர்

”பொறுங்க சந்திரன் என்ன அவசரம், ஆத்திரப்பட்டா நாம நினைச்ச காரியம் கைகூடாது அமைதியா இருங்க” என சொல்ல சந்திரனோ

”எப்படி பொறுமையா இருக்கறது 2 மணி நேரமாச்சி ஒரு வார்த்தை கூட பேசாம இருக்கானே, இவனை என்ன செய்றது நீங்களே சொல்லுங்க பிரபு” என சொல்ல பிரபுவோ கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த டாக்டர் சுவாதியிடம்

”என்ன சுவாதி இது ஊசி போட்டா உளறுவான்னு சொன்ன, ஒண்ணும் பேசாம இருக்கானே”

“இருங்கண்ணா பேசுவாரு”

“நல்லா தெரியுமா இவன்தானா இல்லை ஆளை மாத்தி கொண்டாந்துட்டேனா”

“இல்லைண்ணா இவரேதான், ஈஸ்வரன் பிசினஸ்மேன் அதோட கனவு காணறதும் இவர்தான், நான் சொன்ன கதைகள் எல்லாமே இவர் சொன்னதுதான்.”

“எல்லாம் சரி ஆனா இவனுக்கு எப்படிம்மா அந்த ரத்தினங்கள் பத்தி தெரியும், நாங்க எத்தனை வருஷமா அகழ்வராய்ச்சி செஞ்சி கண்டுபிடிச்ச தகவலை விட இவன் அதிகமான தகவல்களைச் சொல்றானே” என சந்திரன் சொல்ல அதற்கு பிரபுவோ

”என்னத்த சொன்னான் இவன் காதல் கதையில்ல சொன்னான், அந்த ரத்தினங்கள் பத்தி ஒரு வார்த்தை சொல்லலையே”

“சொல்வான் சொல்வான், 5 வருஷமா அந்த ரத்தினங்களுக்காக காத்திருக்கோம் நேத்து லண்டன்ல இருந்து வந்தவன் இன்னிக்கு அந்த ரத்தினங்களை அடைய நினைச்சா விடுவேனா நானு” என சந்திரன் சொல்லியபடியே மெல்ல ஈஸ்வரனது கன்னத்தை தட்டி தட்டி

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் " காதோடுதான் நான் பாடுவேன்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

”ஈஸ்வரன் மிஸ்டர் ஈஸ்வரன் அந்த ரத்தினங்களை பத்திச் சொல்லுங்க” என கேட்க ஈஸ்வரனிடமிருந்து எந்தவொரு பதிலும் வராமல் போகவே நொந்துப் போனான்

”சே 5 வருஷ உழைப்பு, கடைசி நேரத்தில இவன்தான் க்ளு போல நமக்கு கிடைச்சான். இவன் சொன்ன கதையை வைச்சிப்பார்த்தா நாம தேடறது அந்த நாகேந்திரன் வைச்சிருந்த ரத்தினங்கள், இவன் என்னடான்னா தர்னேந்திரன் பத்மாவதி அவங்க காலத்தில இருந்த ரத்தினங்கள் வேற சொல்றான். ரெண்டு வகையான ரத்தின புதையல் நமக்கு இவன் மூலமா கிடைக்கப் போகுது, அதைப் பத்தி நினைச்சாலே சந்தோஷமா இருக்கு பிரபு” என சொல்ல சுவாதியோ

”அமைதியா இருங்க இப்படி பேசிக்கிட்டே இருந்தா, அவருக்கு டிஸ்டர்பா இருக்கும்” என சொல்ல பிரபுவோ

”சுவாதி அந்த நிரஞ்சன் எப்படிப்பட்டவன், ஒருவேளை அவனுக்கு ரத்தினங்களை பத்தி ஏதாவது தெரிஞ்சிருக்குமா”

“இல்லை இவங்க பெரிய கோடீஸ்வரங்க, ரத்தினங்களை வைச்சி இவங்க என்னத்த செய்யப் போறாங்க, அதோட இவங்க ரெண்டு பேருக்குமே கனவுல வந்த பொண்ணுங்களுக்கு என்னாச்சிங்கற கவலைதானே தவிர அதைத் தாண்டி ரத்தினங்களை பத்தி இவங்க யோசிக்கலை”

”பாஸ்கரன் நமக்கு உதவி செஞ்சது நல்லதா போச்சி, அவன் அன்னிக்கு நாகேந்திரன் வீட்டு முன்னாடி நின்னதா சொன்னான் பாரு அன்னிக்கு எனக்கு பயம் வந்துடுச்சி, யார்டா அது நமக்கு எதிரியான்னு நினைச்சேன், நல்லவேளை சுவாதி சொன்னப் பிறகுதான் தெரிஞ்சது இவன்தான் போன ஜென்மத்தில நடந்ததை சொல்லிக்கிட்டு நான்தான் நாகேந்திரன்னு சொல்றான். எப்படியாவது இவனை உலுக்கினா கோடிக்கணக்கான பணமதிப்புள்ள ரத்தினங்களை நாம அடையலாம்” என பிரபு சொல்லவே சுவாதியோ

”அண்ணா எதுக்கும் கவனமா இருங்க, இவர் பாரின் ரிட்டர்ன் ஏதாவது ஆச்சின்னா அவ்ளோதான், அந்த டாக்டர் நிரஞ்சன் இருக்கானே அவன் பார்க்க வெகுளியா இருந்தாலும் ஈஸ்வரன் மேல உயிரையே வைச்சிருக்கான். நாமதான் இவரை கடத்தினோம்னு தெரிஞ்சது அவ்ளோதான்”

“இதப்பாரு சுவாதி நமக்கு தேவை ரத்தினங்கள்தான், இவன் உயிரை எடுக்க நாங்க நினைக்கலை இவன் உண்மையை சொல்லிட்டா பத்திரமா கொண்டு போய் விட்டுடுவோம்”

“சரிண்ணா அதுக்கு எதுக்கு சென்னைக்கு போகனும், தஞ்சைக்கே போகலாமே”

“இவனை போலீஸ் தேடும் அதான் சென்னைக்கு போறோம்” என பிரபு சொல்லவும் சந்திரனோ

”பாஸ்கரன் கூட இருக்கறவரைக்கும் அங்க என்னவெல்லாம் நடக்குதுன்னு நமக்கு தகவல் சொல்லிக்கிட்டே இருப்பான். நாம பிடிபடறமாதிரி சூழ்நிலை வந்தா உடனே இவனை விட்டுடலாம் அதுக்குள்ள எப்படியாவது இவன்கிட்டேயிருந்து உண்மையை வரவழைச்சிடனும்.” என சொல்லியவன் மீண்டும் ஈஸ்வரனை உலுக்க அவனோ நிம்மதியாக உறங்குவதைக் கண்டு சுவாதியிடம்

Add comment

Comments  
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகாvijayalakshmi 2019-04-18 07:37
nice epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகாShanthi S 2019-04-18 03:58
interesting ud Sasireka 👌

Gems pathina details intah petiyila irukumanu parpom.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகாJebamalar 2019-04-17 21:27
Very interesting story... Waiting for nxt epi mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகாmadhumathi9 2019-04-17 20:14
wow fantastic epi sasi. :clap: (y) very.v.v.v interesting aaga irukku. (y) waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகாராணி 2019-04-17 19:19
அருமையான பதிவு இனி இரண்டு வாரத்தில் கதை முடியும் என்றால் ப்ளாஷ்பேக் படிக்க ஆர்வமாக உள்ளது
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகாAdharvJo 2019-04-17 19:02
wow :clap: :clap: Sasi ma'am kalakuringa (y) Ninga adutha kadhaiku kadhai thedava thevai illai indha funny kidnappers and rathingalai vachi oru kadhai eluthalam pole irukku :D Pavam kadathinadhukku ana selavu avdhu koduthidunga :D Ivalo careless ah irundha rathinagal kidaitha mathiri thaan…. facepalm Irundhalum pavam andha dr-a ippadi use pani irukakudadhu :P Interesting screen play ma'am!! Meena oda appa and Esh oda dad-ku oru tie up :Q: Engayo poitinga :cool:

Oru vazhi indha love matter-ku clarity kedichadhu :dance: Meen's past pathi ethume theriyadha :sad: Indha aavani and Padmavathi urugi urugi love panangale appo kuda nyabagam varalaya steam

Anyway Ippo full focus on "The END Of" past life ;-) and Nirajan and Anandhi life oda "Beginning" :yes: Niranja rocks :hatsoff: Waiting to read the next update. Thank you and Keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகாதீபக் 2019-04-17 18:18
Sis semma interestingly going sis :hatsoff: . Vera level this episode. :clap: . Eagerly waiting for next episode sis.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top