(Reading time: 15 - 30 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

தொடர்கதை - காணாய் கண்ணே - 30 - தேவி

ஹாய் பிரெண்ட்ஸ்.

காணாய் கண்ணே கதை கிரண் தேவியைப் பற்றி சில நாட்களுக்கு முன் படித்தேன். அதை அடித்தளமாக வைத்து என்னுடைய கற்பனையும் கலந்து இந்தத் தொடர் வந்து கொண்டு இருக்கிறது. அக்பர், மகாராணா இவர்கள் இருவரைப் பற்றியும் முழுதாக எழுதவில்லை. அவர்கள் கிரண் தேவியோடு எந்த இடத்தில் சம்பந்தப் படுகிறார்களோ அதை மட்டுமே எடுத்துள்ளேன். அதற்கு முன், பின் கால கட்டம் எல்லாம் நான் எடுக்கவில்லை.

சில சரித்திர நிகழுவுகள் முன், பின்னாக வரிசை மாறி இருக்கலாம். சில கற்பனைகள் இருக்கலாம். இவற்றிற்கு ஆதாரம் கீழ்கண்ட லிங்க்கில் இருந்து தான் எடுத்தேன். எதுவும் சந்தேகம் இருப்பின் அதில் சரி பார்த்துக் கொள்ளுங்கள். லிங்க் ராணா, அக்பர் பற்றியது. கடைசி லிங்க் கிரண் தேவி கதை.  

தமிழ் விக்கிப்பீடியா - அக்பர்

தமிழ் விக்கிப்பீடியா - மகாராணா பிரதாப்

When Akbar Was Almost Killed by a Hindu Queen

கிருத்திகாவிடம் விளையாட்டாகப் பேசி அனுப்பினாலும், இந்தக் கனவுப் பற்றி அவள் பெரியப்பாவிடம் சொல்லலமா வேண்டாமா என்று ப்ரித்விக்கு யோசனையாகவே இருந்தது.

கனவைப் பொறுத்தவரை படித்த அல்லது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களின் தாக்கமாக இருக்கலாம் என்று தான் எண்ணினான். ஆனால் அதில் வரும் சம்பவங்களே தற்போதைய காலத்திற்கேற்றார் போல் நடக்கிறது என்பதுதான் அவனின் சிந்தனையைத் தூண்டியது.

சிந்தித்தபடியே படுத்திருந்த ப்ரித்விக்கும் ஏதோ ஏதோ காட்சிகள் தெளிவில்லாமல் வந்தன. சட்டென்று விழித்து விட்டான். அருகில் இருந்த மொபைலில் மணி பார்க்க, அதிகாலை நான்கரை என்று காட்டியது. அதற்கு மேல் உறக்கம் வராமல் மேலும் சிந்தித்தபடி இருந்தான்.

இவர்கள் தங்கியிருந்தது லேக் வியு பாயிண்ட் ஹோட்டல். இரவின் இருள் அகல ஆரம்பிப்பதைக் கண்டவன், வெளியே வந்து காரிடாரில் நின்றான்.

அங்கிருந்து சூரிய உதயம் ஏரியின் மேல் அழகாகத் தெரியப் பார்த்தபடி நின்றான். இதமான அந்த இளங்காலைப் பொழுது, முதல் நாள் ஏற்பட்ட குழப்பங்களை மனதிலிருந்து அகற்ற உதவியது. ப்ரித்வி சிறு புன்முறுவலோடு தங்கியிருந்த அறைக்குச் சென்று காலை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.