(Reading time: 15 - 30 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“உதய்பூர் நகர மக்கள் என்னை நன்கு அறிவார்கள் இளவரசே. எத்தனை இடர்பாடான சூழ்நிலை என்றாலும் பல்லாக்கில் பயணிப்பதை நான் விரும்புவதில்லை என்பதை அனைவரும் அறிவார்கள். “

“தங்கள் தந்தை ஒன்றும் சொல்லமாட்டாரா தேவி ?”

“மகாராஜா ராணாவின் ஆதரவு இருப்பதால் என்னைக் கேட்பதற்கு யாரும் இல்லை இளவரசே’

“ஹ. ஹ. உண்மைதான் இளவரசி. தங்களைக் கட்டுபடுத்துவது காற்றைக் கையால் தடுப்பது போல தான்”

“பரிகாசம் வேண்டாம் இளவரசே. கோபத்திலும் என்னை மிஞ்ச யாரும் இல்லை”

“சரணடைந்தேன் தேவி. தாங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே”

“கூறுங்கள் இளவரசரே”

“பஜ்ரங் கொடுத்த தகவல்படி, மஹாராணாவின் மற்றொரு சகோதரர் அக்பரிடம் தஞ்சம் அடைந்தார் அல்லவா.”

“ஆம்”

“அவரைப் பற்றிய விவரங்கள் வேண்டும் இளவரசி. முடிந்தால் அவரோடு சமரசம் பேசியவர்கள் பற்றிய விவரமும் வேண்டும்”

“என் தந்தையிடம் கேட்டுத் தகவல் அளிக்கிறேன் இளவரசரே. “

பேசிக் கொண்டே உதய்ப்பூர் நகரம் வந்தடைந்தனர். வீரர்கள் தங்கள் இருப்பிடத்திற்குச் செல்ல , பெண்கள் நேராக அரண்மனைக்குச் சென்றனர். இளவரசி மட்டும் தனியே நிற்கவும், ப்ரித்விராஜ்ஜும் நின்று இருந்தான்.

உதய்ப்பூரின் ஒவ்வொரு வீதி வழியாகவும் சென்று வந்தாள் கிரண் தேவி. அங்குள்ள பெண்கள் ராணியிடம் தனியாக வந்துப் பேசுவதையும், அதைக் கண்ட அங்கிருந்த ஆண்களின் கண்களில் பயம் வந்து போனதையும் கவனித்தான்.

சிறு முறுவலோடு அவற்றைக் கடந்து வந்தவர்கள் அரண்மனையில் உள்ளே சென்றனர். ராணியின் வருகைக்கான ஒலி எழுப்பப்பட்டதும், அவள் தந்தை சக்தி சிங் வெளியில் வந்தார். அவர் அருகில் சென்று,

“வணங்குகிறேன் தந்தையே” என,

“எல்லாப் பேறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வாய்” என்று ஆசீர்வதித்தார்.

பின்னரே ப்ரித்வியைக் கவனித்து,

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.