(Reading time: 15 - 30 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“நிச்சயமாக இளவரசே. எப்போது புறப்பட வேண்டும் ? “

“முடிந்தால் இன்று இரவே. அல்லது நாளைக் காலையிலாவது புறப்பட வேண்டும்”

“என் தந்தையிடம் சொல்லிவிட்டுத் தயார் ஆகிறேன்”

“ஆனால் , அங்கே நீங்கள் ராணியாக வரமுடியாது. சேவகியாக மாற வேண்டும். தங்களால் இயலுமா?”

“ஏன்?

“நாம் அக்பரை உளவு பார்க்கச் செல்கிறோம் இளவரசி “

“சரி. நான் அதற்கு ஏற்றார் போல் வருகிறேன்” என்றுச் சொல்லிவிட்டுச் சென்று விட்டாள்.

கிரண் தேவி அவள் தந்தையிடம் என்ன கூறினாளோ, அன்றைய முதல் சாம முடிவில் கிரண் தேவி அரண்மனைக்கு வெளியில் வரவும், ஏற்கனவே அங்கே நின்று இருந்த ப்ரித்விராஜ் அவளின் தோற்ற மாற்றத்தில் போய் வியந்துப் பார்த்தான்.

சேவகி என்றவுடன், தன் ஆடை ஆபரணங்களை அகற்றி விட்டு, எளிய மக்களின் உடையும், அவர்கள் கட்டுவது போல் ஆடை அமைப்பு மட்டுமல்லாது, தன் கூந்தல் பின்னலைக் கூட மாற்றிக் கொண்டிருந்தாள் கிரண் தேவி.

புன்னகையோடு திரும்பிய கிரண் தேவியும் சேவகன் முறையில் ஆடை மாற்றம் செய்து இருந்த ப்ரித்விரஜ் பார்த்து வியந்தாள். வெறும் ஆடை மட்டுமில்லாமல், உடல் மொழியும் கூட சற்றே வளைந்த தோற்றம். வெகு நாட்களாக சேவகனாக இருக்கும் தோற்றம்.

“புறப்படலாமா இளவரசே.” எனக் கேட்க,

“ஆம் தேவி” என்ற ப்ரித்விராஜ், “தேவி, இதோ இந்த மூட்டையைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள். “ என்றுக் கொடுத்தான்.

“இதில் என்ன இருக்கிறது இளவரசே?”

“தேவி, உனக்குச் சித்திரத்தில் பழக்கம் உண்டு அல்லவா?

“ஆம்”

“அதற்குத் தேவையான உபகரணங்கள் இருக்கின்றது. நம்மை சித்திரம் தீட்டுபவர்களாக வெளிப் படுத்திக் கொள்வோம். “

“எனில், நம்மைக் கலைஞர்களாகவே வெளிப் படுத்திக் கொள்ளலாமே. சேவகன் வேஷம் எதற்கு?”

“உண்மையில் அங்கிருக்கும் நம் ஒற்றன் சித்திரக் கலைஞராக இருக்கிறார். அவருக்கு உதவியாளராகத் தான் நாம் செல்கிறோம். கலைஞரின் சேவகர்களான நமக்கும் சிறிது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.