(Reading time: 15 - 30 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

வேலைகளை முடித்தான்.

காலையில் ப்ரேக் பாஸ்ட் முடித்ததும் ப்ரித்விராஜ் மற்றும் மாணவர்கள் குழு பிரதாப் பார்க்கிற்குச் சென்றார்கள். அது ஒரு திறந்தவெளி உடற்பயிற்சி பூங்கா. அதன் சிறப்பம்சம் ஆளுயர “I love Udhaipur” என்ற வாசகம் மார்பிள் கற்களால் உருவாக்கப் பட்டு இருக்கும். பார்த்து வியந்த மாணவர்கள் குழுவாக அங்கே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

அதற்குப் பின் குலாப் பார்க் மற்றும் ஜூ சென்றார்கள். விதவிதமான தாவரங்கள், மரங்கள் எல்லாம் பார்த்தார்கள். உள்ளேயே ஜூ , அரசு அலுவலகங்கள் எல்லாம் இருந்தன. கிட்டதட்ட இரண்டு மணி நேரம் அங்கே செலவிட்டப் பின் மதிய உணவு முடித்து விட்டு லேக்கிற்குச் சென்றார்கள்.

பிசோலா செயற்கையாக மேவார்களால் உருவாக்கப் பட்ட ஏரி. ஏரிக்கரை என்றில்லாமல் தீவு போல் அங்கே அங்கே அரண்மனைகளால் ஏரி முடிந்து இருந்தது. ஒரு அரண்மனைக்கு மற்ற அரண்மனைக்கும் இடையே நீர் வழிப் போக்குவரத்து மட்டுமே. ஒவ்வொரு மேவார் அரசனும் அவர்களுக்கு ஏற்றாற்போல் தனித் தனியாகவோ அல்லது இருக்கும் அரண்மனைகளை மாற்றியோ இருந்ததால் ஒவ்வொன்றும் தனி அழகுடன் இருந்தது. ஒன்றை மற்றொன்றோடு  ஒப்பிட முடியாத அளவில் அழகில் சிறந்து இருந்தது.

மேவார் அரசர்களின் கோடைக்கால இளைப்பாறும் இடம் இந்த அரண்மனைகள் தான். மாணவர்கள் அங்கே அங்கே அமர்ந்தும் , நின்றும் பேசிக் கொண்டும், புகைப்படம் எடுத்துக் கொண்டும் இருந்தார்கள். அரண்மனையின் கட்டுமானம், அதன் கலவை பற்றிய விவரங்களை பேராசிர்யர்கள் விளக்கம் கொடுக்க கேட்டுக் கொண்டு இருந்தார்கள். சற்று நேரத்தில் தனித்தனியாக சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்கள்.

அன்றுக் காலையில் இருந்து ப்ரிதிவியும் கிருத்திகாவைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். ஏனோ அவனை அவள் தவிர்ப்பதாகத் தோன்றியது. ப்ரிதிவி கவனிக்காத போது அவனையேப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவள் படிப்புச் சம்பந்தப் பட்ட சந்தேகங்களை எல்லாம் ப்ரொபசரிடம் கேட்டுத் தீர்த்துக் கொண்டாள். அவளின் உள்ளே நிறையக் குழப்பம் இருந்தாலும், வெளியில் யாரிடமும் அதைக் காட்டவில்லை. அவளைக் கூர்ந்து கவனித்ததில் தான் ப்ரித்வியே அதைக் கண்டிருந்தான்.

இந்த லேக்கிற்கு வந்தப் பின்னும் இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர, எல்லோரும் பிரிந்து செல்லவும், ப்ரித்வி கிருத்திகா அருகில் வந்தான்.

“ஹாய் கிருத்தி”

ஏதோ யோசனையில் இருந்த கிருத்தி ப்ரித்வியின் குரல் கேட்கவும், திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.