(Reading time: 15 - 30 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

ஒன்றோடு ஒன்று சண்டையிட்டக் காட்சியைப் பார்த்து மலைத்து நின்றனர்.

ப்ரித்வி அமர்ந்து இருந்த யானையும்  அவன் சொல்படி எல்லாம் செய்ததில், புது வகை சாகசத்தைக் கண்டு மக்கள் ஆர்ப்பரித்தனர்.

அனைத்தும் முடிந்த பின், அனைவரும் ப்ரித்விராஜைப் பாராட்ட, சக்தி சிங்கும் வாழ்த்தினார்.

“ப்ரித்விராஜ், ராணாவின் உத்தரவு என்ன?” என்றுக் கேட்கவும், பதில் சொல்லப் போன கிரண் தேவியைத் தடுத்து நிறுத்தின இளவரசனின் வார்த்தைகள்.

“ராணா, எதிர்பார்த்தபடி இன்னும் படைகள் தயார் ஆகாததால், இங்கே வரத் தாமதம் ஆகும் என்றுத் தெரிவிக்கச் சொன்னார்” என்றுக் கூறினான்.

‘அப்படியா. போதுமான படை உள்ளதாக சென்ற முறை தகவல் அனுப்பி இருந்தாரே” என்று பதில் கூறவும். சற்று யோசித்தவன் ,

“தங்களுக்கு தைரியம் கொடுப்பதற்காக எழுதின வார்த்தைள் அவை. “

“ஆனால் முஹலாயர்களின் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாக இருக்கின்றதே. அவர் வந்தால் நம் ராஜ்யத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாமே  என்று நினைத்தேன். “

“அவரின் வரவு மேவாருக்கு நல்லதாக இருக்கலாம். ஆனால் அவரைச் சுற்றி நம் பக்கத்து ராஜ்யங்களும் காத்து இருக்கின்றனர் அரசே. அதனால் மேவாருக்காக மட்டுமில்லாமல் அந்த மக்களின் விருப்பத்திற்காகவும் , அவர் அவர்களோடு இணைந்து சுதந்திரப் போரைத் தொடரவே விரும்புவார்”

பின், “மகாராஜா, நான் இன்று இரவே என் வழியில் செல்ல அனுமதிக்க வேண்டும், “ என்றுக் கூறவும், அவரும் அனுமதி அளித்தார்.

எல்லோரும் சென்றதும், கிரண் தேவி மட்டும் நின்று பிரித்விராஜிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.

“ஏன் இளவரசே ? உண்மையைச் சொல்ல வேண்டாம் என்று என்னைத் தடுத்து விட்டீர்கள்.

“தற்போதைய சூழ்நிலையில் என்னைப் பற்றியோ, ராணாவின் படைகள் பற்றியோ விவரங்கள் வெளி வராமல் இருப்பதே நல்லது” என்றுக் கூறிவிட்டுக் கிளம்ப எத்தனித்தவன், கிரண் தேவியை பாதுகாப்பாக இருக்கச் சொன்னான்.

தொடர்ந்து ராணியைத் அவள் தந்தையிடம் கேட்கச் சொன்னவற்றைப் பற்றிக் கேட்டுக் கொண்டான்.

பின், “தேவி நான் பதேபூர் சிகிரிக்குச் செல்லப் போகிறேன். தாங்களும் வர முடியுமா?” என்றுக் கேட்டான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.