(Reading time: 15 - 30 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“தாங்கள் யார் என்று அறியவில்லையே” என்றுக் கேட்கவும்,

“மகாரானாவின் இளவலும், தற்போதையே உதய்ப்பூர் ராஜ்யத்தின் பாதுகாவலருமான சக்தி சிங் அவர்களைக் கண்டது எனது பாக்கியம்” என்றுக் கூறித் தலை வணங்கினான்.

அவனின் சொற்களில் மயங்கினாலும்,

“இன்னும் நீங்கள் யார் என்றுக் கூறவில்லையே” என்று கேட்டார்.

“பிகானர் தலைவரின் புதல்வன் ப்ரித்விராஜ் தங்களை வணங்குகிறேன்”

“ஒஹ். தங்களைப் பற்றிய விவரங்கள் உதய்ப்பூர் வரை வந்துவிட்டது. ஆனால் நேரில் பார்ப்பது இதுவே முதல் முறை “ என்று சக்தி சிங் கூறவும், ப்ரித்விராஜ் அமைதியாகவே நின்றான்.

“யாரங்கே” என்று அழைத்தவர்,

“நம் விருந்தினர் தங்குவதற்கு வசதிகள் செய்” என்றுக் கூறினார்.

இதைக் கேட்ட கிரண் தேவி,

“இளவரசரே, தாங்கள் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டுத் தன் அறைக்குச் சென்று விட்டாள். சற்று நாட்களாகத் தொடர்ந்த பயணத்தில் ராணி களைத்து இருந்தாள்.

நன்றாக ஓய்வெடுத்துக் கொண்ட பின் அவள் எழுந்து வரும்போது மாலை ஆகி இருக்கவே, நேராக அரண்மனையின் வெளிப்புறம் வந்தாள்.

மாலைக் களியாட்டத்திற்கு அனைத்தும் தயார் ஆகி இருக்க, ராஜ குடும்பத்தினர் ஒவ்வொருவராக அந்த கேளிக்கை மண்டபத்தை அடைந்தனர்.

அங்கே யானைகளின் அணிவகுப்பு மற்றும் சாகசங்கள் ஆரம்பித்து இருந்தது. பக்கங்களில் குடிமக்கள் வேடிக்கைப் பார்க்க, மண்டபத்தில் ராஜாங்க அதிகாரிகளும், அவர்களின் குடும்பத்தினரும் அமர்ந்து இருந்தனர்.

ராணி கிரண் தேவியும், பெண்கள் பக்கம் விடுத்துத் தன் தந்தை அருகில் இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டாள்.

ராணியின் கண்கள் இளவரசரைத் தேட, ப்ரித்விராஜோ ஒரு யானையின் மேல் அமர்ந்து இருந்தான்.

சாகச நிகழ்ச்சிக்கான ஆரம்ப மணி ஒலிக்கவும், யானைகள் அழகாக அங்கே வந்து நின்றன. ஒவ்வொரு யானையும் பாகனின் சொல்படி சாகசம் நிகழ்த்த , எல்லோரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர். யானையின் துதிக்கையில் மர வாள் கொடுக்கப் பட, அவை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.