(Reading time: 19 - 37 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

ஆனால் பதினொன்றாம், பன்னிரெண்டாம் வகுப்புகளில் ஆங்கில மொழி வழியாக படித்ததால் அவளுக்கு படிப்பு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. டியூஷன் சேர்ந்து படிக்கவும் வசதியில்லை. அதனால்  பன்னிரண்டாம் வகுப்பில் மிகவும் குறைவான மதிப்பெண்கள் வாங்கி தேர்ச்சி பெற்றிருந்தாள். அது அவளுக்கே ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி, நம்மால் கல்லூரியில் சேர்ந்தால் நன்றாக படிக்க முடியுமா? என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.

அதனால் தந்தையை பார்த்து கொள்ள சொன்ன போது அதை ஏற்றுக்கொண்டு அவளும் வீட்டிலேயே இருந்து  கொண்டாள். கணவன் பொறுப்பில்லாமல் இருந்தபோது கூட வஞ்சி அவரை பற்றி புலம்பிக் கொண்டிருப்பாரே தவிர, அவரை வெறுத்ததில்லை. அவர்களுக்கிடையே  சின்ன சின்ன பிரச்சனைகளும் சண்டைகளும் வரும், 

ஆனால் நித்யாவை பொறுத்தவரை  தந்தை அவள் மீது பாசத்தை பொழிவார். முதலில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து இருந்ததால், மூன்றவதாக அவரின் முன்னோர்களை வழிபட்ட பிறகே மகள் பிறந்து அவளும் நல்லபடியாக இருந்ததால், தன் அன்னையின் பெயரையே வைத்து,  நித்திம்மா நித்திம்மா என்று அவளிடம் பாசமாக இருப்பார். சரியாக வேலைக்கு போகவில்லை என்றாலும் கிடைக்கும் வருமானத்தில் அவளுக்கு என்று ஏதாவது வாங்கிக் கொடுத்து அவளை பாசமாக பார்த்துக் கொண்டார்.

அதனால் நித்யாவிற்கும் தன் அன்னையை விட தந்தையை தான் அதிகம் பிடிக்கும், உடல்நலம் சரியில்லாமல் இருந்தவரை  பார்த்துக் கொள்வதில் அவள் என்றுமே தயக்கம் காட்டியதில்லை.

ஒரு வருடத்திற்கு மேலாக படுத்தப் படுக்கையாக இருந்த தந்தை திடீரென உடல் நல குறைவு மோசமாகி இறந்தும் விட்டார். அதன்பிறகுதான் வஞ்சி மகளை அழைத்துக்கொண்டு தன் பிறந்த வீட்டிற்கே வந்து விட்டார்.  அன்னையின் பிறந்த வீடு என்று சொன்னால் சாதாரணமானது அல்ல, அது மாளிகை,  இப்படி ஒரு பெரிய வசதியான வீட்டில் தான் தன் அன்னை பிறந்து வளர்ந்தார்களா என்று நித்யா வியந்தாள்.

அதற்கு வஞ்சியோ, "பிறக்கும் போது இந்த அளவிற்கு வசதியில்லை, ஆனால் எதுக்கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் வாங்கி கொடுத்து தான் வளர்த்தார்கள். உன்னோட தாத்தா, அப்புறம் உன் மாமா, இப்போ உன்னோட மாமா பையனா தான் இருக்கணும்.. இப்படி ஒவ்வொருத்தரோட தீவிர உழைப்பு தான் இப்படி ஒரு வசதி இவங்களுக்கு கிடைச்சிருக்கு.." என்றார்.

அதை சொன்ன அன்னையை நித்யா வியந்து பார்த்தாள். தந்தையோடு கஷ்டப்பட்ட காலங்களில் ஒரு போதும், "பிறந்த வீட்டில் நான் எத்தனை வசதியாக இருந்தேன், என்னை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.