(Reading time: 19 - 37 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

ஞானசெல்வம் பேசவும், குறிஞ்சியம்மாளும் அதை ஆமோதிப்பது போல் தலையாட்டியவர்,

"என்னோட அப்பன் அந்த முருகனுக்கு என்மேல கொஞ்சம் இரக்கம் இருக்கு, அதான் உங்களை என்கிட்ட கொண்டு வந்து சேர்த்துட்டான்.." என்று நெகிழ்ச்சியோடு கூறியவர்,  மகளையும் பேத்தியையும் அணைத்து தன் பாசத்தை வெளிப்படுத்தினார்.

அதன்பிறகு பாட்டியோடும் மாமாவோடும் நித்யா நெருக்கமாகிவிட்டாள். ஞானசெல்வத்தின் மனைவி கார்த்திகேயனின் பதினாறு வயதிலேயே உடல் நலம் சரியில்லாமல் இறந்து போய்விட்டார். அந்த விஷயம் கூட தெரியாமல் இருந்துவிட்டேனே, என்று வஞ்சி வருத்தப்பட்டு பேசினார்.

மகனும் தொழிலில் தீவிரத்தை காட்ட ஆரம்பிக்க, குறிஞ்சியம்மாள் தான் பேரனையும் கவனித்துக் கொண்டு, வீட்டு பொறுப்புகளை பார்த்துக் கொண்டார். வீட்டில் முக்கிய முடிவுகளை எடுப்பவரும் அவரே,

இப்போது மகளும் பேத்தியும் வரவே அவருக்கும் கொஞ்சம் பாரம் குறைந்தது போல் இருந்தது. அவர்கள் இருவரும் அனைத்தையும் கவனித்துக் கொள்ள அவர் வெறும் மேற்பார்வை மட்டும் பார்த்துக் கொள்வார். வீட்டு நிர்வாகத்தையும் வஞ்சியிடம் அவர் ஒப்படைக்க நினைக்க, "உங்களால் முடியும் வரை நீங்களே பார்த்துக்கோங்க ம்மா.. அப்புறம் கார்த்திக்கிற்கு கல்யாணம் ஆனா அவனோட மனைவி வந்து பொறுப்பெடுத்துக்கட்டும், அதுதான் முறையும் கூட.." என்று கூறிவிட்டார்.

 நித்ய பூரணிக்கு அந்த வீடும் உறவுகளும் கொஞ்ச காலத்திலேயே நெருக்கமாகிவிட்டாலும், கார்த்திகேயனிடம் மட்டும் அவள் கொஞ்சம் தள்ளியே இருந்தாள்.

பார்ப்பதற்கு கம்பீரமாக அழகாக இருந்தாலும், எப்போது பார்த்தாலும் அவன் அலைபேசியில் யாரிடமாவது பேசிக் கொண்டிருக்கும் ஆங்கிலம் அவனிடமிருந்து அவளை கொஞ்சம் தள்ளி நிற்கவே சொல்லும்,

அவனுமே அவளையும் வஞ்சியையும் முதலில் பார்த்த போது, "அப்பாவும் பாட்டியும் அடிக்கடி உங்களை நினைச்சு கவலைப்படுவாங்க.. இப்போ நீங்க வந்ததில் சந்தோஷம் அத்தை.." என்றவன்,

நித்யாவிடம் படிப்பு பற்றி விசாரித்துவிட்டு அதோடு அமைதியாகிவிட்டான். அதற்கு பிறகு அவளை பார்க்கும்போதெல்லாம்  ஒரு புன்னகை, சின்ன விசாரிப்புகள், பேச்சுக்களோடு நிறுத்திக் கொள்வான். அதை தாண்டி இருவருக்குமிடையே அத்தை மகள், மாமன் மகன் என்ற உறவு முறையின் நெருக்கமோ, கேலிப் பேச்சுக்களோ இருந்ததில்லை,

கார்த்திகேயனின் படிப்பு, வசதி, அவளை விட பத்து வயது பெரியவன் இதெல்லாம் நித்யாவை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.