(Reading time: 19 - 37 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

அப்படியே இருக்கட்டும்னு நானும் அப்படியே ஒதுங்கியே இருந்துட்டேன்.. ஆனா இப்போ உங்கப்பா இல்லாத சூழ்நிலையில் உன்னை கரை சேர்க்கணுமே, அதான் உன்னை இங்க கூட்டிக்கிட்டு வந்துட்டேன்.." என்று தன் மனதில் இருந்ததை பரிமாறிக் கொண்டார்.

இருந்தாலும் மாமா வீட்டில் வரவேற்பு எப்படி இருக்குமோ? என்று மனதில் லேசான அச்சத்தோடு நித்யா இருக்க, அவளது பாட்டிக்கும் மாமாவிற்கும் இவர்கள் இருவரையும் பார்த்த மகிழ்ச்சியில் கண்களில் ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது.

அதிலும் இத்தனை நாள் அவர்கள் இருந்த நிலைமையையும், கணவன் இறந்த விஷயத்தையும் வஞ்சி சொல்லவும்,

"ஏன் டீ.. இத்தனை கஷ்டப்பட்டிருக்க, நீ எங்க இருக்க? என்ன செய்றன்னு தெரியாம தவிச்சிக்கிட்டு இருந்த எனக்கும், உன்னோட அண்ணனுக்கும் சொல்லணும்னு உனக்கு தோனல இல்ல..

நீங்க இங்க இருந்து போன கொஞ்ச நாள் உன்னோட அண்ணன் உங்களை பத்தி தகவல் தெரியாம எப்படில்லாம் அலைஞ்சான் தெரியுமா? ஆனா உங்களைப்பத்தி எந்த விவரமும் கிடைக்கல..

உன்னோட புருஷன் தான் வீம்பா இருந்தா, உனக்கென்னடி? நாங்க இங்க தான் இருக்கோம், இப்படி இருக்கோம்னு நீ ஒரு தகவல் சொல்ல மாட்டீயா? உன்னோட புருஷனை பேசிட்டோம்னு உனக்கும் கோபமா? எதுக்கு அப்படி பேசினோம்? உன்னோட எதிர்காலம் நல்லா இருக்கத் தானே, அதை ரெண்டுப்பேரும் புரிஞ்சிக்காம, நீங்க தான் கஷ்டப்பட்டீங்கன்னா, என்னோட பேத்தியையும் கஷ்டப்பட வச்சிட்டீங்களே,

உங்களை பத்தி எந்த தகவலும் தெரியாம வருஷம்பாட்டுக்கு போகவும், உங்களையெல்லாம் பார்க்காமலே செத்து போயிடுவேன்னு தான் நினைச்சேன்.. இப்போதாவது இந்த அம்மாவை பார்க்க வரணும்னு உனக்கு தோனுச்சே,

ஏன் டீ உன்னோட புருஷனுக்காக யோசிச்சு தான், இத்தனை நாள் எங்களை விட்டு ஒதுங்கி இருந்த சரி, அவருக்கு உடம்பு சரியில்லாத போனப்பிறகாவது எங்களுக்கு தகவல் சொல்லியிருக்கலாம், ஆனா அவர் இறந்ததுக்கு கூட தகவல் சொல்லாம எல்லாத்தையும் தனி ஆளா இருந்து முடிச்சிட்டு வர.. எவ்வளவு கல் மனசு டீ உனக்கு.." என்று குறிஞ்சியம்மாள் மகளை திட்ட,

"விடுங்கம்மா.. முடிஞ்சதை பத்தி இப்போ எதுக்கு பேசிக்கிட்டு, இனி நடக்கறத பார்க்கணும்.. இப்போதாவது வஞ்சிக்கு இந்த அண்ணனும், அம்மாவும் இருப்பது ஞாபகம் வந்துச்சே.. அதுக்கு சந்தோஷப்படுங்க.." என்று வஞ்சியின் மூத்த சகோதரனும் நித்யாவின் தாய்மாமனும் ஆகிய

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.