எடிட்டிங் வேலைகளை உடனுக்குடன் செய்து விடலாம்” மற்றொரு கேமராமேன் கூடுதாக எடிட்டிங் பொறுப்பையும் செய்வதாக கூறினார்.
திட்டமிட்டபடி குழுவினர் அதிகாலை எட்டு மணி வாக்கில் மஹேயில் இருந்து தென்மேற்கே குறிப்பிட்ட இடத்தை அடையுமாறு தேன்மொழி கூறினாள்.
படகை செலுத்துபவர் மாஹே படகுத்துறையை சேர்ந்தவர் என்பதால் தேன்மொழி குறிப்பிட்ட இடம் அவருக்குப் பரிச்சயமானதாகவே இருந்தது.
“நீங்கள் எங்களுடன் வரவில்லையா” கேமராமேன் கேட்க தேன்மொழி ஆதியுடன் கடலில் அவர்களை சந்திப்பதாகக் கூறினாள்.
கெவினுக்கு வேறு முக்கிய அலுவல்கள் இருந்ததால் இறுதி நாளன்று கலந்து கொள்வதாக கூறி அன்றிரவே விடைபெற்றுச் சென்று விட்டிருந்தான்.
முன்னதாக தேன்மொழி தனது குடும்பத்தினரிடம் இந்த டாகுமன்ட்ரி படம் பற்றி கூறினாள்.
“ஏன் பாப்பா, எங்களை படம் எடுக்க வேண்டாம்னு சொல்லிட்டு அவங்களுக்கு ஒகே சொல்லிருக்க” இளங்கோ சிறிது ஆதங்கத்துடன் கேட்க வானதி கணவனை அதட்டினாள்.
“என்ன நீங்க, பாப்பா யோசிக்காம எதையும் செய்வாளா” என்று கணவனை கண்டித்தாள்.
“அண்ணா, இது டாக்குமன்ட்ரி படம் போல தொடர் மாதிரி ஒளிபரப்புவாங்க. அவங்க உலகளவில் சேனல் வைத்து நடத்துறாங்க. அவங்க செலவில் வந்து படம் எடுக்கிறாங்க. அவங்க சேனலுக்கு ப்ரேத்யேக பார்வையாளர்கள் உலகளவில் இருக்காங்க. என்னோட வீடியோ போட்டோ இதற்கு ரைட்ஸ் பெற்று பெரிய தொகை தந்திருக்காங்க. நம்ம பவுண்டேஷனுக்கு அது எவ்வளவு உபயோகமாக இருக்கும். நல்ல ரீச் கிடைக்கும். கடல் உலகம் பற்றி, கடலை நாம் அறியாமலே எவ்வளவு பாழ் படுத்துகிறோம் என்பது பற்றி, அதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றியெல்லாம் உலகெங்கும் கொண்டு செல்லலாம்” என்று தேன்மொழி கூறவும் இளங்கோவின் முகம் அப்போதும் திருப்தியின்மையை பிரதிபலித்தது.
“அண்ணா அவங்க டாக்குமன்ட்ரி தொடர் மூலம் செந்தமிழ் சேவ் தி ஸீ பற்றி பலருக்கும் தெரிந்த பிறகு நாம படம் எடுத்தா இன்னும் என்ன அதிசயம் காத்திருக்கு என்று எல்லோரும் ஆர்வமாக பார்க்க வருவாங்க. நம்ம படம் பெரிய வெற்றியை பெறும்” செல்லத் தங்கை இவ்வளவு தெளிவாக எடுத்துக் கூறவும் அவளது தமையன் அவள் மீது அளவில்லா பெருமிதம் கொண்டான்.
“எங்க பாப்பா எவ்வளவு மதிநுட்பமா யோசிக்கறா. பெரிய பெண்ணாகிவிட்ட பாப்பா” இளமாறன் தங்கையை வீடியோ காலில் கொஞ்சினான்.
“நீங்க எல்லோரும் இந்த வீக்என்ட் இங்கே வரீங்களா. டாகுமன்ட்ரி தொகுப்போட ப்ரவியூ