ஒரு வீடியோவைக் காண்பித்தாள்.
கடலில் இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளைப் பிரித்து நுண் பிளாஸ்டிக் குப்பைகளை எல்லாம் பெரிய பிளாஸ்டிக்கொடு சேர்த்து பிளாஸ்டிக் ப்ரிக்ஸ். பிளாஸ்டிக் தரை, பிளாஸ்டிக் ரோட் போன்றவற்றை செய்ய தயார் செய்து கொடுப்பதையும் காண்பித்தாள்.
“கடல் வழியாகவே மடகாஸ்கர் கொண்டு சேர்த்து அங்கிருக்கும் மக்கள் மூலம் இதை செய்கிறோம். அங்குள்ள மக்களுக்கு ஒரு வாழ்வாதாரமாக ஆகி விட்டது” தேன்மொழி கூற அதையும் பதிவு செய்து கொண்டனர்.
வெற்றிகரமாக ஆறு நாள் படப்பிடிப்பு முடிந்து விட மறுநாள் இறுதி ஷூட் எடுக்கவிருந்தனர்.
“நாளை முற்பகலில் மட்டும் பைனல் டச் செய்தால் போதும். பிற்பகலில் மொத்தமாக எடிட் செய்து ஈவனிங் ரஷ் பார்த்திடலாம்” இயக்குனர் கூறினார்.
மாலை இளங்கோ வந்து சேர்ந்துவிட படக்குழுவினருக்கு தனது அண்ணனை அறிமுகம் செய்து வைத்தாள் தேன்மொழி.
“நாளை என் சார்பில் அனைவருக்கும் டின்னர்” என்று அறிவித்தான் இளங்கோ.
“நாளை முழு நிலவு. நாம் படகிலே கடலுக்குள் ஏன் டின்னர் வைத்துக் கொள்ளக் கூடாது” என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கூற இயக்குனரும் அதை வழி மொழிந்தார்.
“ஆம் முழு நிலவில் கடலை படம் படித்து அந்தக் காட்சியை இறுதியாக சேர்த்தும் விடலாம்” என்று யோசனை கூறினார்.
“வெகு தூரம் செல்ல வேண்டாம். அலைகளில்லா பகுதி வரை சென்று இரவில் திரும்பி விடலாம்” என்று தேன்மொழி கூற அனைவரும் சம்மதித்தனர்.
அதன் படி ரிசார்ட்டின் தலைமை செஃப்பிடம் படகில் டின்னருக்கான ஏற்பாடுகளை செய்து விடுமாறு பணித்தான் இளங்கோ.
அன்று செந்தமிழைக் காண விடியலுக்கு முன் தயாராகி ஆதியை எதிர்பார்த்து காத்திருந்தாள் தேன்மொழி. .
“அக்கா என் பாட்டிக்கு மாரடைப்பு வந்து மருத்துவமனையில் சேர்த்திருக்காங்களாம்” என்று ஆதி கண்ணீரோடு வந்து சொல்லவும் தேன்மொழி அவனை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள்.
“உன் பாட்டிக்கு ஒன்னும் ஆகாது ஆதி. நீ அழாதே. தைரியமாக இருக்கணும்” என்று அவனை ஆறுதல் படுத்தியவள் தனது தமையனிடம் சென்றாள்.
ஆதி உடனடியாக மடகாஸ்கர் செல்ல ஏற்பாடுகள் செய்யுமாறு கூறினாள்.
“அண்ணா, நானும் ஆதியோடு போறேன். அவனை எப்படி இந்த சமயத்தில் தனியாக அனுப்ப