பார்க்கலாம். அப்படியே கொஞ்ச நாள் இங்க இருந்துட்டு போவீங்களாம்” என்றவள் இளமாறனிடம் அவனது வருங்கால மனைவியையும் அழைத்து வருமாறு கூறினாள்.
“எல்லோரும் வர முடியுமான்னு தெரியல பாப்பா. எனக்கு இந்த வாரம் முக்கியமான ரீ ரிகார்டிங் இருக்கு” இளமாறன் தயக்கத்தோடு கூறினான்.
“தாத்தா உங்க உடம்புக்கு இப்போ எப்படி இருக்கு. நீங்க வருவீங்க தானே” தேன்மொழி ஆசையாகக் கேட்டாள்.
“தாத்தா அவ்வளவு தூரம் ப்ளைட்ல ட்ரேவல் செய்ய இப்போ கஷ்டம்டா பாப்பா. அம்மாவும் தாத்தாவை பார்த்துக்க இங்கே இருக்கணுமே” கயல்விழியும் வர முடியாத சூழ்நிலையை எடுத்துக் கூறினாள்.
வானதி குழந்தைகளின் தேர்வு சமயம் என்று கூறிவிட இளங்கோ தான் மட்டும் கண்டிப்பாக வருவதாகக் கூறினான்.
“அப்பா இங்கே எல்லாத்தையும் மேனேஜ் செய்துக்கட்டும். நான் கண்டிப்பா வரேன் பாப்பா. ஒரு நாள் முன்னாடியே வந்திடறேன்” இளங்கோ கூறவும் தேன்மொழி மிகுந்த உற்சாகம் கொண்டாள்.
‘தங்கள் வீட்டு தேவதை அவ்வளவு தூரம் அழைத்த போதே எல்லோரும் சென்றிருக்க வேண்டுமோ’ என்று கூடிய விரைவில் நினைத்து நினைத்து வருந்தும் தருணம் வரும் என்று யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
திட்டமிட்டபடியே அதிகாலை இருள் விலகும் முன் ஆதியோடு கடல்புறாவில் அலைகளில் பறந்தாள் தேன்மொழி.
“இவள் செந்தமிழ் தேன்மொழியாள்” மிக மிக மெல்லியக் குரலில் தான் பாடினாள்.
அவளது இனிய இசையின் ஸ்வரங்களை எடுத்துச் சென்ற காற்று செந்தமிழை அடைந்து அவனை மெல்ல வருடிக் கொடுத்தது.
தேன்மொழியின் குரலின் அதிர்வலைகள் செந்தமிழின் ஒவ்வொரு அணுவிலும் பதிந்திருக்கிறதே.
காற்று வந்த திசை நோக்கி நீரைக் கிழித்துக் கொண்டு அதிவேகமாக நீந்திச் சென்றான் செந்தமிழ்.
அவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்தை வந்தடைந்ததும் செந்தமிழுக்காகக் காத்திருந்தார்கள் தேன்மொழியும் ஆதியும்.
சூரியனோடு கை கோர்த்துக் கொண்டு அவர்கள் முன் உதயமானான் செந்தமிழ்.
பவழப் பாறைகள் சூழ்ந்த மறைவான பகுதி அது. அங்கே தான் கடல் புறா மிதந்து