கொண்டிருந்தது.
கடலுக்குள் செல்ல வேண்டுமானால் டைவிங் சூட் அணிந்து தயாராக காத்திருப்பாள் தேன்மொழி.
செந்தமிழ் வந்ததும் அவனோடு கடலுக்குள் மூழ்கி விட ஆதி அவர்களை தொடர்ந்து வருவான்.
இது தான் அவர்களின் வழக்கமாக இருந்தது.
என்றேனும் வானிலை சரியில்லை எனில் செந்தமிழோடு அந்தப் பவழப் பாறைகளிடையே நீந்தி விட்டுத் திரும்புவாள்.
அன்று தேன்மொழி டைவிங் சூட் அணியாமல் படகில் இருந்த வண்ணம் சாய்ந்து கொண்டு செந்தமிழோடு உரையாடினாள்.
“இன்னிக்கு இருந்து ஷூட் இருக்கு செந்தமிழ். தினம் இதே நேரத்தில் வந்து உன்னை பார்த்துட்டு நான் அவங்களோட கடலுக்கு போகணும். ஏதாச்சும் ரொம்ப அவசியம்னா நான் உன்னை கூப்பிடறேன். அப்போ நீ வந்தா போதும். என்ன சரியா” அவள் கூறியது அந்த அற்புதமான ஜீவனுக்கு என்ன புரிந்திருக்குமோ.
ஆனால் அனைத்தையும் புரிந்து கொண்டதைப் போல தனது நீண்ட கரங்களை நீட்டி அவளது கரத்தை வளைத்துப் பிடித்துக் கொண்டது.
செந்தமிழுக்கு விடை கொடுத்து விட்டு படக்குழுவினரின் படகுக்காக காத்திருந்தார்கள் ஆதியும் தேன்மொழியும்.
அவர்களின் படகு குறித்த இடத்தை வந்தடையவும் தனது டைவிங் சூட்டை அணிந்து கொண்டவள் அவர்களின் படகில் ஏறிக் கொண்டாள்.
ஆதி கடல்புறாவில் இருந்த வண்ணம் அப்படகை பின்தொடர்வதாக திட்டமிட்டிருந்தனர்.
தேன்மொழி தன்னோடு ஒரு கேமராமேனை அழைத்துக் கொண்டு கடலுக்குள் சென்று விட நிகழ்ச்சித் தொகுப்பாளரின் பகுதிகளை படகிலேயே ஷூட் செய்தனர்.
உடன் வந்த கேமராமேனின் நலன் கருதி தேன்மொழி கடல் மட்டத்திற்கு அடிக்கடி வந்து அவரை ஓய்வு எடுக்கும் படி கூறினாள்.
அந்த இடைப்பட்ட நேரத்தில் செந்தமிழ் சேவ் தி ஸீ அமைப்பைப் பற்றி அவள் கூறியதை பதிவு செய்து கொண்டனர்.
இந்து மாகசமுத்திரத்தில் இருந்து பல டன்கள் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய போட்டோ மற்றும் விடியோக்களை அவள் அவர்களிடம் கொடுத்தாள்.
“இவ்வளவு குப்பையையும் என்ன செய்தீர்கள்” என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்க அதற்கும்