(Reading time: 16 - 31 minutes)
Senthamizh thenmozhiyaal
Senthamizh thenmozhiyaal

முடியும். அங்கே என்ன தேவை இருக்குமோ” தேன்மொழி கூற இளங்கோ தடுத்தான்.

“பாப்பா, நீ இங்கே இருக்க வேண்டியது இப்போ அவசியம். டாக்குமன்ட்ரி இன்று முடிக்கணும். அவங்க எல்லோரும் நாளை திரும்ப வேணும் இல்லையா. நான் ஆதியோடு துணைக்குப் போறேன். நான் போனா அவனுக்கு இன்னும் உதவியாக இருக்கும். நீ இங்கே இருந்து கமிட் செய்த வேலையை முடித்துக் கொடு” இளங்கோ கூற தேன்மொழி அண்ணனின் பேச்சுக்குக் கட்டுப்பட்டாள்.

சார்ட்டட் விமானம் ஏற்பாடு செய்து ஆதியும் இளங்கோவும் மடகாஸ்கர் சென்றனர்.

ஆதி இல்லாததால் தேன்மொழி செந்தமிழை காண செல்ல முடியாமல் தவித்தாள்.

மற்ற சமயமானால் அவளே கடல் புறாவை செலுத்திச் செல்வாள்.

ஆனால் படக்குழுவினரும் உடன் இருக்கும் போது கடல் புறாவை மற்றவர் கையில் கொடுக்க அவளுக்கு விருப்பம் இருக்கவில்லை.

“செந்தமிழ் இன்னிக்கு என்னால உன்னைப் பார்க்க வர முடியலடா. சாரிடா” வாய்விட்டுக் கூறினாள்.

ஆனால் எப்போதும் அவள் குரலின் அதிர்வலைகளை பொக்கிஷமாக பாதுகாத்து செந்தமிழிடம் எடுத்துச் செல்லும் காற்று அன்று முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது.

அன்று செந்தமிழைக் காண முடியவில்லை என்ற ஏக்கமும் அவன் வழக்கமான இடத்தில் தங்களுக்காக காத்துக் கொண்டிருப்பானே என்ற தவிப்பும் அவன் ஏமாற்றம் கொண்டு தவிப்பானே என்ற நினைப்பும் தேன்மொழியை என்று பெரிதும் அலைக்கழித்தது.

கூடவே ஆதியின் பாட்டி குறித்த தகவல் ஏதும் வராமல் மேலும் தவித்தாள்.

இறுதி ஷூட்டை முடித்துக் கொண்டு நண்பகலில் கரை திரும்பினர்.

மாலையில் இளங்கோவிடம் இருந்து தகவல் வந்தது. 

ஆதியின் பாதிக்கு இதய ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது சரி செய்யப்பட்டு அவர் முற்றிலும் நலமாக இருக்கிறார் என்ற தகவல் கேட்டதும் தேன்மொழி மிகுந்த நிம்மதி அடைந்தாள்.

“நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பிடுவேன் பாப்பா. ஆனா வந்து சேர நைட் ஆகிடும். நீ அவங்க எல்லோரையும் போட்ல டின்னர் கூட்டிட்டு போயிட்டு திரும்புவதற்குள் வந்திருவேன். ஆதி இங்கேயே கொஞ்ச நாள் அவன் பாட்டிக்கு உதவியா இருந்து அவங்களை கவனிச்சுக்கட்டும்” என்று கூறினான்.

ஆதியிடம் அவளால் அப்போது பேச முடியாமல் போனது.

“இனி ஆதியின் பாட்டியை அங்கே தனியே விட வேண்டாம். இங்கு தங்களோடு கூட்டிக்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.