(Reading time: 18 - 35 minutes)
Senthamizh thenmozhiyaal
Senthamizh thenmozhiyaal

இதற்கிடையே இரவு உறக்கம் கொள்ளும் போதெல்லாம் தேன்மொழிக்கு அந்த நாளின் காட்சிகள் மனத்திரையில் ஓட வியர்த்து விதிர்விதிர்த்து அருகில் இருந்த பொருட்களை எல்லாம் தட்டி விட்டு உறக்கத்திலேயே துடித்தாள்.

“அவ தூங்கவும் முடியாம தவிக்கிறா. நான் எவ்வளவு தட்டிக் கொடுத்தும் ரொம்ப நேரம் வரை அடங்கவே இல்லை” கயல்விழி கண்ணீர் வடித்தார்.

அந்நிகழ்வால் ஏற்பட்ட அதிர்ச்சியே காரணம் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

தேன்மொழியின் பேச்சு திரும்ப அளிக்கப்பட சிகிச்சைகள் எல்லாம் பயனில்லாமல் போனது. உலகம் முழுவதும் பல நாடுகளில் பல ஸ்பெஷலிஸ்ட்களிடம் தேன்மொழியை அழைத்துச் சென்றும் பயன் ஏதும் இல்லாமல் போனது.

கிட்டத்தட்ட ஒரு வருட காலம் சிகிச்சை என்று சென்று விட ஓரளவு நன்றாக தேறிவிட்டிருந்த தேன்மொழி தனது குடும்பத்தினர் அனைவரையும் சென்னை செல்லும் படி கூறினாள்.

தான் செஷல்ஸ் செல்லவிருப்பதாக தெரிவிக்க அனைவரும் ஆட்சேபனை செய்தனர்.

ஆனால் தாத்தா அவள் விருப்பபடி செல்லட்டும் என்று தீர்மானமாக சொல்லிவிட்டிருந்தார்.

“உன் பொண்ணு உன்னை அம்மான்னு திரும்ப கூப்பிடுவதை நீ கேட்கணும்னா போகட்டும் கயல்” என்று தனது தந்தை கூற திடுக்கிட்ட கயல்விழி மகளை அனுப்பி வைத்தார்.

“அவள் அங்கே தனியாக கடலுக்குள் செல்ல வேண்டாம்ன்னு நினைக்கிறேன். புதுசா ஒரு க்ரூஸ் நிறுவனம் மாஹேவில் இருந்து இயக்க போகிறார்களாம். அதன் கேப்டன் செல்வா நம்ம ரிசார்ட் மானேஜருக்கு ரொம்ப தெரிந்தவராம். அவர் பொறுப்பில் விடலாம். ஆதி சின்ன பையனாச்சே” இளங்கோ கூற அதன்படி தேன்மொழி சமுத்திர முத்தில் ஆதியோடு பயணம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

தான் யாரென்ற விவரங்கள் தெரிந்தால் அனாவசிய கவனத்தை ஈர்க்கும் என்பதால் தேன்மொழி கேப்டன் செல்வாவிடம் தன்னைப் பற்றிய தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஆனாலும் சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் கெவினின் வருகையும் தேன்மொழி யார் என்பதை அனைவருக்கும் உணர்த்தி விட்டிருந்தது.

சிபியால் தேன்மொழியை வியக்காமல் இருக்க முடியவில்லை.

டீனேஜ் வயதில் பெற்றோர் சேர்த்து வைத்த பணத்தை எப்படி உல்லாசமாக செலவு செய்து சுற்றித் திரிந்தோம் என்று நினைத்துப் பார்த்தான்.

ஆனால் அதே வயதில் உலகளவில் பரிசு வென்றதும் அல்லாமல், கடல் வாழ் உயிரனங்களை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.