(Reading time: 18 - 35 minutes)
Senthamizh thenmozhiyaal
Senthamizh thenmozhiyaal

அன்றும் அதற்கு மறுநாள் முழுவதும் செந்தமிழ் வரவே இல்லை.

“அக்கா நாம கிளம்பனும். மாலை எல்லாம் சமுத்திர முத்து அங்கிருந்து புறப்பட்டு விடுவாள். அதற்குள் நாம கண்டிப்பா போகணும். கேப்டன் இவ்வளவு தூரம் அனுமதி வழங்கியதே பெரிது” ஆதி மீண்டும் மீண்டும் வற்புறுத்த தேன்மொழி கண்ணீர் வழிய படகில் ஏறினாள்.

இங்கு செந்தமிழை கடலின் ஒவ்வொரு பகுதியிலும் தேன்மொழி தேடிக் கொண்டிருக்க அங்கே தேன்மொழியின் வரவை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தான் சிபி.

கெவின் அவனது தோளில் கரம் பதித்து என்ன விஷயம் என்று கேட்க நண்பனிடம் தனது மனதை எடுத்துக் கூறினான்.

“தேன்மொழியை முதன்முதலில் நான் சந்தித்த போது அவளுக்கு பதினாறு வயதிருக்கும். பருவ வயதில் காலடி எடுத்து வைக்கும் ஒரு பெண்ணின் விழிகளில் தெரியும் சிறு மயக்கமும் உல்லாசமும் அவளிடமும் இருந்தது. அவள் கடலைப் பற்றிக் கூறும் போதெல்லாம், செந்தமிழ் என்ற பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் அவள் விழிகள் நட்சத்திரம் போல ஜொலித்தது இன்னும் என் கண்ணில் நிற்கிறது” கெவின் சொல்ல சிபி ஏமாற்றம் அடைந்தான்.

“இன்னும் எங்களுக்கு செந்தமிழ் யாரென்று தெரியாது. ஆனா அவர் தேன்மொழியின் வாழ்வில் இன்றியமையாதவர்ன்னு தெரியும். இங்கே வசிப்பவர்ன்னு யூகிக்க முடிந்தது. தேன்மொழியின் முயற்சிகளுக்கு எல்லாம் பின்பலமாக அவர் தான் இருந்திருக்கிறார். ஆனால் அவர் தன்னைத் தானே வெளிப்படுத்த விரும்பவில்லை. இப்போதும் அவரைப் பார்க்க தான் ரிசர்ச் ஸ்டேஷனுக்கு தேன்மொழி போயிருக்காள் என்று எண்ணுகிறேன்” கெவின் கூற தனது சிபி தேன்மொழி செந்தமிழ் இருவருக்காக வாழ்த்தினான்.

“இருந்தாலும் அவங்க சேவ் தி ஸீ அமைப்பில் நான் என்னோட பங்களிப்பை தரலாம் தானே” சிபி சிரித்துக் கொண்டே கேட்க நண்பனை தட்டிக் கொடுத்தான் கெவின்.

“தேன்மொழி வந்ததும் அவங்களிடம் நீயே நேரடியாக சொல்லு” கெவின் கூற சிபி சரி என்று தலையாட்டினான்.

சமுத்திர முத்து தனது பயணத்தைத் தொடர தயாராக தேன்மொழி ஆதி இன்னும் வந்து சேரவில்லையே என்று கேப்டன் செல்வா கவலை கொண்டார்.

மாலைக்குள் வந்துவிடுவோம் என்று ஆதி கேப்டனுக்கு தகவல் தெரிவித்திருந்தான். ஆனால் சூரியன் மறைந்து சில நிமிடங்கள் ஆன போதும் இன்னும் அவர்கள் வந்து சேரவில்லை.

கேப்டன் செல்வா ஆதியை தொடர்பு கொள்ள முயலும் முன் ஆதியிடமிருந்து அவருக்குத்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.