(Reading time: 18 - 35 minutes)
Senthamizh thenmozhiyaal
Senthamizh thenmozhiyaal

ஆழத்தில் கால் பதிக்க இயலவில்லை.

பல கோடி மைல்கள் தூரத்தில் இருக்கும் கோள்களையும் நட்சத்திரங்களையும் கண்டுபிடித்தவன் இன்னும் சமுத்திரத்தின் பல இடங்களை அடையவில்லை.

நமக்குத் தெரியாத மனிதனால் பெயரிடப்படாத எண்ணற்ற உயிரினங்கள் கடலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

மனிதன் தோன்றும் முன்பிருந்து இன்று வரை யுகம் யுகமாய் கடலின் அழகிய உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த உலகத்தை அதன் வழியில் இயங்க விட்டோம் என்றால் தான் மண்ணில் நம் உலகில் நாம் இயங்க முடியும்.

எண்ணற்ற கடல் வாழ் உயிரனங்கள் மனிதர்களில் செயலால் அழிந்து கொண்டு வருகின்றன.

அவைகள் அழிந்து போனால் உலகமே அழிந்து போகும் என்ற உண்மையை உணர்த்தவும் அந்த உயிர்களை பாதுகாக்கவும் தான் இந்த அமைப்பைத் தொடங்கினோம்.

நிறைய பேர் ஆதரவு தெரிவித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது”

தேன்மொழி தனது நேர்காணலை முடித்துக் கொடுத்தாள்.

கெவின் அவளிடம் தனிப்பட்ட முறையில் கேள்வி ஒன்றைக் கேட்டான்.

“உங்க செந்தமிழை இன்னும் கண்ணிலே நீங்க காட்டவே இல்லை. பத்து வருடம் ஆகி விட்டது” சிரித்துக் கொண்டே கேட்க தேன்மொழி கடலை நோக்கி தனது விரலை நீட்டி சுட்டிக் காட்டினாள்.

தூரத்தில் தீப்பிழம்பு ஒன்று அலைகளில் மிதந்து கொண்டு வருவது போல ஒரு காட்சியை பார்த்த கெவின் வியப்பில் ஆழ்ந்தான்.

அப்போ அன்னிக்கு நீங்க கடலில் குதித்தது?

“செந்தமிழைக் காப்பாற்றத் தான்”

“செந்தமிழ் யார்” ஆர்வ மிகுதியுடன் கேட்டான்.

“கடல் உலகத்தை ரட்சிக்க அவதரித்த தேவன்” அதே சிரிப்புடன் தேன்மொழி கூற இப்போது கடல் பரப்பில் எவ்வித தீப்பிழம்பும் காணப்படவில்லை.

கெவின் சென்று விட அலைகளில் கால் பதித்தவாறே தேன்மொழி அவளின் செந்தமிழை அவளது பாணியில் அழைத்தாள்.  

“இவள் செந்தமிழ் தேன்மொழியாள்”

நிறைந்தது

Episode # 18

Go to Senthamizh thenmozhiyaal story main page

{kunena_discuss:1218}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.