(Reading time: 18 - 35 minutes)
Senthamizh thenmozhiyaal
Senthamizh thenmozhiyaal

உயிரனங்களிடம் செந்தமிழை பார்த்தீர்களா செந்தமிழை எங்கேனும் பாத்தீர்களா என்று மனதிலே கேட்டுக் கொண்டே வந்தாள்.

“ஒரே ஒரு முறை நீ நலமாக இருக்கிறாய் என்று தெரிந்தால் போதும் செந்தமிழ். இல்லையென்றால் என்னால் உயிர் வாழவே முடியாது” என்று நீருக்குள் இருந்த ஓர் பாறையை பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்.

அப்போது கடலுக்குள் கொந்தளிப்பு ஏற்பட அவள் சுதாரித்து உணர்வதற்குள் சுழற்றியடிக்கப் பட்டாள்.

நீரின் மேல் எம்பி எழ அவள் முயற்சிக்க சுழல் அவளை உள்ளே இழுத்தது.

நிலவு அலைகளிடம் டாட்டா சொல்லிவிட்டுச் செல்ல கடலும் அமைதி கொண்டது.

சூரியன் மெல்ல எட்டிப் பார்த்து “அடடா தேன்மொழியல்லவா உறங்கிக் கொண்டிருக்கிறாள். ஏற்கனவே நீண்ட துயிலில் இருந்து விட்டாள். இனியும் துயில் கொள்ளாமல் எழட்டும்” என்று அவள் இமைக்கதவுகளை தனது செங்கதிர்களால் வருடிக் கொடுத்தான்.  

ஒரு பெரிய பாறை மேல் உறங்கிக் கொண்டிருந்தாள் அவள்.  

முதலில் கதிர்களின் ஸ்பரிசத்தில் அவள் உணர்வுகள் விழித்துக் கொள்ள அவளுக்குள் மகிழ்ச்சி ஊற்றெடுத்து பெருகியது. முன்னிரவில் நடந்த நிகழ்வுகளின் நினைவில் கண்ணீர் வழிய அது ஆனந்த நீர் பிராவகமானது.

“செந்தமிழ்”

அவள் இமைகளும் இதழ்களும் ஒரு சேர மலர்ந்தன.

ஓர் வருடமாக தவமிருந்த அவளின் குரல் அன்று வரத்தை நாடி யாசிக்க

செங்கதிர்களில் செந்தீப் பிழம்பாக அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான் அவளின் செந்தமிழ்.

அந்த இனியமையான வைகறை விடியலில் அவள் மகிழ்ச்சி பொங்க பாடினாள்.

“இவள் செந்தமிழ் தேன்மொழியாள்”

பின்னுரை:

செந்தமிழ் சேவ் தி ஸீ புதிய மாற்றம் கொண்டு  செந்தமிழ் சேவ் தி ஸீ அண்ட் ஸீ அனிமல்ஸ் என்று பிரபலம் அடைந்திருந்தது.

கெவினுக்கு தேன்மொழி நேர்காணல் அளித்துக் கொண்டிருந்தாள்.

“இவ்வுகலகின் மூன்றில் இரண்டு பகுதி கடல். கடலுக்குள் மிகப் பெரிய உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

நிலவிலே கால் பதித்து விட்ட மனிதன் இன்னும் பூமியில் இருக்கும் சமுத்திரத்தில் அடி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.