வெச்சித்தான் நாமா அந்த மொத்த கடத்தல் கும்பளையும் பிடிக்கணும் அதுக்கு இப்ப என்ன பண்லாம்றத பத்தி மட்டும் யோசிக்காலம் என கவின் சொல்ல சரி.., டேய் சோபன் இன்னிக்கு என்னலாம் கடத்தலாம்ன்னு இருக்கீங்க???என மன்வீர் கேள்வி எழுப்ப அதற்கு எதுவும் பேசாமல் பதில் அளிக்காமல் மன்வீரையே உற்று பார்த்தான் சோபன்.
டேய்......என்னடா பாக்குற எவ்வளவு அடிச்சாலும் உண்மய சொல்ல மாட்டேன்னு பாக்றிய இல்ல சென்டிமென்ட வெச்சி பிளாக் மெயில் பண்ண முடியாது நான் ஒரு தனி காட்டு ராஜான்னு திமரா பாக்குறிய இதுவும் இல்லனா நான் ஒன்னு சொல்லுறன் கேக்குரியா நீ கார் ஷெட்டுக்கு பின்னாடி இருக்குற குடோன்ல பெட்டி பெட்டியா மறைச்சி வெச்சிருக்க கோடி கணக்கான பணத்த நான் ஆட்டைய போட்டுருவேன்னு பயப்படுரியா என மன்வீர் சொல்ல டேய் ...ஒழுங்கா சொல்றன் அந்த பணத்து மேல கை வெச்ச நீ காலி அது என் பணம் மட்டுமில்ல நிறைய பேரோட ஷேரு அதுக்கு மட்டும் ஏதாவுது ஆச்சு என்னோட சேத்து நீங்களும் காலி என சோபன் ஆவேச பட....... மன்வீர் ஜெய் கவின் குடோனில் மறைந்து கொண்டு சோபனை கவனித்து கொண்டிருந்த போது ஒரு பெருச்சாளி ஒன்று ஜெய்யின் காலை சுற்றி சுற்றி வர அதை தன் காலால் தட்டி தட்டி விடும் மோது கீழ் இருக்கும் கட்டை உடைந்து உள்ளே விழுந்தான் ஜெய். ஜெய்....ஜெய்....ஜெய் என்று என்று கத்தி அவனை காப்பாற்ற அவர்களும் கீழே இறங்கினர் அப்போது பெட்டி பெட்டியாக அடுக்க பட்டு இருந்தது அந்த இடம் அதை திறந்து பார்த்தால் கட்டு கட்டாக பணம் .
எனக்கு தெரியும் டா இந்த பணத்துக்கு எதாவுது ஒண்ணு ஆச்சுன்னா உன்ன உயிரோட விடமாட்டங்கன்னு இப்ப அந்த பணம் எங்க கைல தான் இருக்கு அதனால ஒழுங்கு மரியாதையா எங்களுக்கு ஒத்துழைப்பு கொடு என மன்வீர் மிரட்ட இப்ப நான் ஒத்துழைப்பு கொடுத்தா மட்டும் என்னவிட்டுரவா போற எப்படியும் உன் பிரின்ட கொன்னதுக்கு எப்படியும் நீ என்ன பழி வாங்க தான் போற நான் எத்தன பேர பாத்ருப்பேன் போங்க டா போங்க டா என மன்வீரின் வளையில் சிக்காமல் தன்னால் உதவி செய்ய முடியாது என தெளிவாக பதில் அளித்தான் சோபன்.
கவின் வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு மன்வீர் தீவிரமாக யோசித்து கொண்டிருந்தான் இப்ப என்ன பண்லாம் மன்வீர் சோபன் நம்ம வழிக்கு வர மாட்டான் இந்த பிளான்னா எக்சிகியூட் பண்றது என கவின் தொண்ட வேற சரியில்ல வாய்சே போச்சு என இரும்பி கொண்டே கேட்க இப்ப என்ன சொன்ன கவின் தொண்ட சரி இல்லன்னு தான யெஸ்....ஒரு ஐடியா உனக்கு யாராவது வாய்ஸ் மாத்தி பேசுரவங்க மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் யாராவது தெரியுமா என்கிட்ட ஒரு பிளான் இருக்கு......!!